இப்போது அழுமூஞ்சியாக இருக்கும் கார்த்தி அம்மா ஒரு காலத்தில் குறும்பு செய்வதில் கோகுலத்து கண்ணனை ஜெயித்தவள்.
கலாட்டா:
எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாணப் ப்பத்திரிக்கைகள் கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நேரம். ஏதோ காரணத்திற்காக என் [வருங்கால ] கணவர் என் [தாய்] வீட்டிற்கு வந்தார். நான் எனக்கென்று தனியாக invitation அடித்திருந்தேன். அவர் வந்தவுடன் குடுகுடு வென்று ஒரு invitation கொண்டு அவர் கையில் கொடுத்து "கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்து விடுங்கள் " என்று கூறினேன். பெரிய புத்திசாலித்தனமாக பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு "time இருந்தால் வந்து விடுகிறேன்"" என்றார்.
"TIME இருந்தால் வாருங்கள். இல்லை வரவில்லையென்றால் நானே தாலி கட்டிக் கொள்கிறேன்"' என்றேன். மனிதன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாய்க்கு சிரிப்பையும் அடக்க முடியவில்லை.நிலைமையை சமாளிக்கவும் தெரியவில்லை
1 comment:
hehehehe...so funny karthimma..hehehe
Post a Comment