கார்த்திக்கிற்கு விபத்து நடந்த அன்று அவன் ஹெல்மெட் அணியவில்லை. உண்மைதான்.அன்று வரை, அவனை ஆஹா , ஓஹோ என பாராட்டிக் கொண்டிருந்த என் குடும்ப நண்பர் ,அடுத்த நாள என்னிடம் கூறினார் "என்ன ஒரு பொறுப்பில்லாத பையன் இவன் ! நீங்களும் ஒரு பொறுப்பில்லாத தாய்..எப்படி ஹெல்மெட் அணியாமல் அவன்தான் போனான் என்றால், நீங்களும் அவனை அப்படி அனுப்பியுள்ளீர்களே? ".[அடுத்த முறை அவர் வீட்டிற்கு போயிருந்த போது அவர் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டு போயிருந்தார். அதை சுட்டிக் காட்டிய போது அவர் மனைவி அதை சமாளித்தது வேறு கதை ]
today i read a news in 'The Hindu ' and that's what prompted me to write this.இன்று நான் படித்த ஒரு செய்திதான், என்னை இதை எழுதத் தூண்டியது. அந்த செய்தி:
// ..//..Around noon, a 23-year-old youth died on the spot when his motorcycle was hit by a speeding tanker near Military Hospital, St. Thomas Mount on Grand Southern Trunk Road. Tanker with fuel
The tanker was carrying fuel to the Air Force Station, Tambaram. Nagaraj was on his way to Chennai airport to receive his younger brother, when the tanker hit him.
Though the victim was wearing a helmet, it was crushed to bits as he came under the wheels of the tanker. Tambaram police are probing both the accidents.//..//
மீண்டும் ஒரு முறை செய்தியை கவனமாக படித்து பாருங்கள். அந்த இளைஞன் ஹெல்மெட் அணிந்திரு்ந்தும ஹெல்மெட் தூள் தூள் ஆகி விட்டது.
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த ஒரு மாதத்திற்குள அவனுடன் படித்த ஒரு நண்பன், ஹெல்மெட்டுடன் வண்டியோட்டிச் சென்று, விபத்து நடந்து, அந்த ஹெல்மெட் துண்டுகள் அவன் தலை முழுதும் துளைத்து விட 3 நாட்கள் அவன் போராடிய போது அவன் தந்தையின் கதறல் அனைவரையும் கலக்கியது. அந்த ஹெல்மெட்டே அவனுக்கு வினையானது.
why i say all these things now..just to request people not to kill the already dead, [dead by the loss of the dearest ] by their 'wise words'.
இழப்பின் கொடுமையால், ஏற்கனவே உயிர் அற்ற நடைப் பிணமாகி விட்ட என்னை போன்றவர்களை உங்கள் 'அறிவான வார்த்தைகளால்' மேலும் கொல்லாதீர்கள்.
'விதி ' அல்லது 'நிகழ்வு' read my posting on 'HAPPENISM' .இதை யாரும் வெல்ல முடியாது.முன்வினைப் பயன், கர்மா ,பாவம், புண்ணியம் போன்ற வார்த்தைகளால் இதை நியாயப் படுத்த முடியாது. இது ஒரு நிகழ்வு. just a happening. just as all other things in our life happen. it's nothing but 'HAPPENISM'.
4 comments:
/ உயிர் அற்ற நடைப் பிணமாகி விட்ட என்னை போன்றவர்களை உங்கள் 'அறிவான வார்த்தைகளால்' மேலும் கொல்லாதீர்கள்./
I agree with you 100%. Sometimes people think they are helping by saying certain words. I feel it is better to support and not to hurt people who is already going thru so much hurt.
Radha
dear Radha,
i understand that 'Radha' and 'Rumya' are the same, single person , commenting under different names.if you wish, you can reveal your identity, to the following e mail..ponniyinselvi_kartik@yahoo.co.in
karthik amma
"முன்வினைப் பயன், கர்மா ,பாவம், புண்ணியம் போன்ற வார்த்தைகளால் இதை நியாயப் படுத்த முடியாது. இது ஒரு நிகழ்வு." That's true, non can't defeat.
what ever we are careful and if helmet is worn or not, anything wanted to happen it will.
we will pray for karthi..that he is safe and happy with god
Post a Comment