About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/08/27

SKYLAB

காலேஜ் கலாட்டா [2 ]
இதை படிக்கும் பாதிப் பேர் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள்.
ஆனால், கண்டிப்பாக skylab என்ற வார்த்தை எல்லோருக்கும் தெரியும்.
அப்போது நான் காலேஜில் hostelல் தங்கி படித்து வந்தேன். அமெரிக்கா அனுப்பிய இந்த விண்வெளி ஓடத்தில் ஏதோ ஒரு கோளாறு ஏற்பட்டு அது எந்த நேரமும் வெடித்து பூமியின் மேல் விழலாம் என்று ஒரு பிரச்சினை வந்தது.
நம் ஊரில் தினத்தந்தி என்று ஒரு செய்த்திதாள் "இன்று skylab சேலத்தின் மேல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் அது ஈரோடைக் கடக்கிறது " என்று நேர்முக வர்ணனையாக அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் சாப்பிடப் போனபோது, எவளோ ஒருத்திக்கு திடீரென பாசம் ஊற்றெடுத்து விட, ""நான செத்தால் என் அப்பா அம்மாவுடந்தான் சாவேன் " என்று பெருங் குரலில் அழ ஆரம்பித்துவிட்டாள். நம் மக்கள்தான் emotional bundle ஆயிற்றே. காட்டுத் தீ போல் எல்லோருக்கும் பாசம் பொங்க, விடுதி மாணவிகள் அனைவரும் ஒரே குரலில் [அட அவர் அவர் குரலில்தான் ] அழ ஆரம்பித்து, "நாங்கள் சாப்பிட மாட்டோம்.இப்போதே ஊருக்கு போக வேண்டும்" என்று திடீர் strike ஆரம்பித்து விட்டனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த [ note thsi point your honour ] "veedikkai paarththuk kondiruntha நான் princy வருவதை பார்த்ததும் அழுவது போல் போலியாக கண்ணை கசக்க முயல. வந்த கல்லூரி முதல்வர், "விடுதிக்கு விடுமுறை. மாணவிகள் எல்லோரும் ஊருக்கு செல்லலாம்" என்று அறிவித்து போய் விட்டார். ஒரே சந்தோஷம்..அப்போதெல்லாம் வகுப்பு கட் அடிப்பது அன்பதுதான் இமாலய சந்தோஷம்.
இப்போதுதான் கதையே ஆரம்பம்..skylab கடலில் விழ [அமெரிக்காவா கொக்கா? ]என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் skylab ஐ கடலில் விழ வைத்த அமெரிக்காவை திடடிக் கொண்டே விடுதிக்கு வந்தால்,,,,,,மாபெரும் அதிர்ச்சி....வரதட்சிணை வாங்காமல் வந்த மருமகளை வீட்டிற்குள் விட மறுத்த மாமியாரைப் போல், ,, எங்கள் முதல்வர் என்களை காலேஜிற்குள் அனுமதிக்க மறுத்தார். பல நாடகங்களுக்கு பிறகு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு,, வகுப்பிற்கு செல்ல அனுமதி தந்தார..
இதற்கு நடுவில் அவர் ஒரு 100 முறை : YOU TOO KALAVATHY? என்று 100 முறை கேட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.
your honour :
note 2 points...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த என்னை "திடீர் புரட்சித் தலையாக்கி [தலைவி ] எனக்கு special punishment கொடுத்த பரிதாபமென்ன?
point 2: நான் என்ன காலேஜில் சேரும் போது சுத்த சன்னியாசியாக இருப்பேன் என்று என் கல்லூரி முதல்வர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சத்தியம் செய்தேனா? எதற்கு இந்த you too kalavathy? ஆயிரம் இருந்தும் i loved my Hepsy and she had a soft corner for me.
அன்றே தினத் தந்தியிடம் நான் divorce வாங்கி விட்டேன்.
[அதென்ன ஹெப்ஷி] அந்த கதை அப்புற்ம்.. இடைவெளிக்குப் பிறகு

2 comments:

Jeevan said...

Skylad story is intersting as well funny :) u too... i too had this u too in my school days.
-------------------

the marrage invitation to future husband! super ma haha....
-------------------

madam coold rinks or ice cream, hum... sweet memories

Balaji S Rajan said...

Superunga... I think of those days of Skylab. One of my maternal uncle wanted everyone of our close relatives in his house. We too had fun on that day. Your post brought lots of nostalgic memories.