அன்னையர் தினம்: என் அன்னை கார்த்திக்
பூனை குட்டியை துக்கிக் கொண்டு, [வாயில் கவ்விக் கொண்டு ] தன் குட்டியை பாதுகாக்க இங்கும் அங்கும் அலைவது போல்தான் என் மகன் கார்த்திக் இந்த தாயை இழுத்துக் கொண்டு அலைந்தான்.
மெனோபாஸ் எனும் கொடுமையில் தள்ளாடிய இந்த தாயை எத்தனை டாக்டர்களிடம் அழைத்து செல்வான். எனக்கு அறுவை சிகிச்சைக்காக அவன் பட்ட பாடு எத்தனை?
காரில் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு ஓடுவான். எதற்கு என பார்த்தால், கையில் ஐஸ்கிரீமுடன் வருவான். "இந்த கடை ஐஸ்க்ரீம் உங்களுக்கு பிடிக்கும் அல்லவா? " "
என்றாவது ஒரு நாள் போகிற போக்கில் சொல்லியிருப்பேன். அதை மறக்காமல், அந்த கடை பக்கமாக போய் வாங்கி தருவான்.
எனக்கு பிடித்த பாடல் சி.டி வாங்கி வருவான்.
தான் பெற்ற குழந்தை மீது ஒரு தாய் பாசம் காட்டுவது இயற்கையானது.
ஆனால், தன்னை பெற்ற தாய்க்கே தாயாக வாழ்ந்து காட்டிய என் கார்த்தியே " தாய்க்கெல்லாம் சிறந்த தாய்." "
அந்த தாயில்லாமல் வாடும் இந்த குழந்தைக்கு என்ன ஆறுதல்?
கார்த்தி என்னும் ஒப்பற்ற தாயின் அருமைப் புதல்வி.
7 comments:
Very glad about bro Karthik who is a mother for you. that's really sweet the affectionate, where many won't get that opportunity. alike me too.
Happy Mother's Day to you. Don't worry. Karthik still wishing you Mother's day from HEAVEN. He is your ANGEL. He is looking after you every day from HEAVEN.Don't feel sad. Everything will be ok.
Ravi
ரவி,
கார்த்திக் என்னை பார்த்துக் கொள்வதா எனக்கு தேவை? அவன் வாழ வேண்டுமே! அவன் இல்லாத உலகத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே? மகன் வாழ வேண்டும்.அவன் இந்த உலகத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அவன் எத்தனை ஆசைகளை வைத்திருந்தான்? அவன் இல்லாமல் நான் மட்டும் உயிரோடு இருக்கிறேனே என்ர குற்ற உணர்ச்சிய்ளும், அவமானத்திலும், வேதனையிலும் துடித்துக் கொண்டிருக்கிறேன்.அவன் என் கடவுளாக இருந்து என்னைப் பார்த்துக் கொள்கிறான் என்ர வார்த்தைகள் ......
dear jeevan,
yes.one in a million only can be so lucky and blessed to get such a son.I feel proud to have been a mother to so sweet a son.But that sweetness only makes my sadness extreme.
karthik amma
Happy mothers day aunty... i still feel hurted ... please let me know your email id... mine is aravindhindia@gmail.com
பொன்னியின் செல்வன்,
தங்களுடைய கமெண்டினை என் ப்ளாக்கில் வெளியிட்டுள்ளேன்.
புத்திசாலித்தனமான கமெண்ட் உங்களுடையது.
எதை எழுதுவதென்றே தெரியவில்லை
Post a Comment