வெளிநாட்டுக்குப் போறப்ப விபத்து நடக்குறது வேதனையான ஒன்னுதான். ஆனா, அதுக்குப் பிறகு நடக்குறது அதைக் காட்டிலும் வேதனையாயிடுது.. அடிபட்ட உடனே அடிபட்ட வேகத்தைப் பார்க்கும்போது எந்த உறுப்பு எங்க கெடக்குதுன்னு பொறுக்கியெடுக்க வேணுமோன்னு யோசிப்போம். நல்லவேளை அப்படி எதுவும் ஏற்படலை. சென்னைக்கு ஒருவழியா வந்து சேர்ந்தவுடனே, வந்து பாக்குறவங்க குடுத்த அனுபவங்கள்லாம் அலாதியானவை. வந்தவங்க எல்லாரும் மறக்காம உச்சரித்த ஒரு பழமொழி `தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு'ங்கறதுதான். உடனே நான், `அடி தலையில் இல்லை, காலுல தான். எனவே, காலுக்கு வந்தது செருப்போடு போச்சு'ன்னு ஒவ்வொரு முறையும் திருத்த வேண்டியதா இருந்துச்சு.
`நல்ல வேளை கையில அடிபடலையேன்னு சந்தோஷப்படுங்க'ன்னு அவங்க சொன்னதும், `ஆமாம், ஆமாம், மூக்கிலே அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், சுவாசிக்கவே முடியாதே. காதுல அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், நீங்க பேசறதக் கேக்கவே முடியாதே'ன்னு அவுங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. `பரவாயில்ல கடவுள் காப்பாத்திட்டாரு'ன்னு சிலர் சொன்னவுடன் `அப்ப அடிபட்டது யாரால' என்று கேட்கத் தூண்டியது. `மலேசியாவில எல்லாம் ரோடு நல்லா இருக்குமே சார். அங்க எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு' என்று ஒரு சிலர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வேலையும் செய்தார்கள். அவர்களிடம் `எந்தக் காரா இருந்தாலும், பெட்ரோல் இல்லாட்டா ஓடாத மாதிரி, எந்த ஊரா இருந்தாலும் டிரைவர் தூங்கினா ஆக்சிடென்ட் ஆகும்'_னு விளக்கம் கொடுக்க வேண்டியதா இருந்தது. வந்தவர்களில் ஒருவர் `மலேசியாவில எத்தனை சதவீதம் விபத்து நடக்குது'ன்னு, ஏதோ நாங்க விபத்து சம்பந்தமா பி.எச்டி. பண்ண மலேசியா போன மாதிரி கேள்வி கேட்டு வெறுப்பேத்துனாங்க. ஒரு சிலர் `பெல்ட் போட்டிருந்தீங்களா'ன்னு கேட்டார்கள். `பேண்ட் போட்டா பெல்ட் போடாம இருக்க முடியுமா'ன்னு தெரியாத்தனமாக் கேட்டேன். `சீட் பெல்ட் சார்' என்று விளக்கம் கொடுத்தாங்க. இப்ப நான் பாத்ரூம் போனாக்கூட பெல்ட் போடாம போறதில்ல. நிலநடுக்கத்திற்குப் பயந்துதான். வந்தவங்க எல்லாரும் மறக்காம கேட்ட கேள்வி, `டிரைவருக்கு என்ன ஆச்சு?' என்பதுதான். `யார் ஓட்டுனாங்க, செல்ஃப் டிரைவிங்கா'ன்னு சில அபத்தமான கேள்விகள் வேற. எத்தனை கால் அடிபட்டதுங்கற பிரச்னை! என்னோட அடிபட்ட சான்வந்த்ராமையும் விட்டுவைக்கலை. அவர் எல்லார்கிட்டயும் `எனக்கு ரெண்டு கால், இறையன்புக்கு ஒருகால்' என்று `தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று சொல்பவர்களிடம் விளக்கம் கொடுத்தார். சிலபேர் மருத்துவமனைக்கு வருவதை ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு வர்றதைப் போல உல்லாசமாக்கிட்டாங்க. புதுத்துணி போட்டுக்கிட்டு, சென்ட் பூசிக்கிட்டு, கூடையில காபி, கலவை சோறு எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தாங்க. சில பேர் நல்லாத் தூங்கும்போது வந்து உலுக்கி எழுப்பிட்டு, `நல்லா ரெஸ்ட் எடுங்க'ன்னு அறிவுறுத்தினாங்க. ஒரு சிலர் ஏதோ நான் சாதனை செஞ்ச மாதிரி சிரிச்சுக்கிட்டே உள்ளே வந்து கன்கிராஜுலேஷன்ஸ் சொல்லாத குறையா நலம் விசாரிச்சாங்க. இதுல ஆளாளுக்கு மருத்துவம் வேற. `ஆட்டுக்கால் சூப் சாப்புடுங்க எலும்பு கூடிடும்' என்றார் ஒருவர். பக்கத்தில் இருந்தவர் `காலுக்கு காலு சரியாயிடுமே'ன்னு ஏதோ `நமக்கு நாமே' திட்டத்தைப் போல வியாக்யானம் கொடுத்தார். `ஆட்டுக்கால் மஜ்ஜை சூப்பில கலந்து உங்க கால் மஜ்ஜையைச் சரிபண்ணிடும்' என்று மருத்துவ விளக்கம் வேறு. உடனே, பக்கத்தில் இருந்த என் சகோதரர் `கால்ல அடிபட்டாதான் ஆட்டுக்கால் சூப் சாப்புடணும், கையில அடிபட்டா சாப்புடக்கூடாது. ஏன்னா, ஆட்டுக்கு கையில்லையே' என்று அந்த நேரத்திலும் சிரிக்க வைத்தார். ஜாதகம்,?ஜோசியம் எல்லாத்துலயும் நம்பிக்கையுடையவர் ஒரு நண்பர். பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் கேட்டு ஒரு கணக்குப்போட்டு, `உங்களுக்கு இப்போ சனி நடக்குது. சனி நொண்டாம இருக்க வுடமாட்டாரு'ன்னு சொல்லிட்டு, `என்னக்கி அடிபட்டுச்சு'ன்னாரு. நான் அப்பாவியா `சனிக்கெழமைன்னு' சொல்லிட்டேன். `பாருங்க, சனி, சனியிலே அடிச்சிருக்கான்'னு காலரைத் தூக்கிவுட்டுக்கிட்டாரு. அப்ப அங்கிருந்த விசிட்டர்ஸ் எல்லாம் அவரோட தெறமையில மயங்கி, அவங்க பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் குடுத்து, அவர்கிட்ட பலனைக் கேட்டு அந்த எடத்தையே கெரகமாக்கிட்டாங்க. `எவ்வளோ வேகமா நடப்பீங்க'ன்னு சொல்லி இனிமே நடக்கவே முடியாதுன்னு அவங்களாவே நெனச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னவங்களும்உண்டு. காலைப் போர்வைக்கடியில் மடக்கி வச்சிருந்ததை உணராம, காலே போயிட்டதா நெனச்சிக்கிட்டு என்னை விசாரிச்சவங்களும் உண்டு. வந்தவங்கள்ல பல பேரு எதாச்சும் ஒரு வகையில காலை ஞாபகப்படுத்திக்கிட்டேயிருந்தாங்க. `கால் டாக்சிலேதான் வந்தோம்'பாங்க. `கால் மணிநேரத்தில வந்துர்றேன்' பாங்க, `கால்பிளேட் வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வரட்டுமா'ம்பாங்கா. `ஏதாவது வேணுமின்னா கால் பண்ணுங்க'ம்பாங்க. `நாற்காலியில உக்கார முடியுதா'ன்னு விசாரிப்பாங்க. `ஒருக்கால் நீங்க போகாம இருந்தால் ஒரு கால் போயிருக்காது இல்லையா'ன்னு சிலேடையாப் பேசினவங்களும் உண்டு. தன்னோடு சின்னக்கொழந்தையை அழைச்சிக்கிட்டு வந்தவங்ககிட்ட, `கொழந்தையை எல்லாம் ஏன் கூட்டிக்கிட்டு வந்து செரமப்படுத்துறீங்க'ன்னு கேட்டா, `இங்க வந்துதான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்னு' சொல்லுவாங்க. `கீழே கூட்டம். கால் கடுக்க நிக்க வேண்டியதாப் போயிருச்சி'ன்னு சொன்னவங்களும் உண்டு. படுக்கையில படுத்தவங்க எழுந்திருச்சி ஓட முடியாதுங்கறதால, ஏதாவது `ஆப்ளிகேஷன்' கேட்டு அடிக்கடி வந்தவங்களும் உண்டு. தன்னோட மகன் எழுதியிருந்த வி.ஏ.ஓ. பரீட்சைக்கு சிபாரிசு செய்யச் சொல்லி ஒருத்தரு அடிக்கடி படையெடுப்பாரு. அவருகிட்டயிருந்து தப்பிச்சிக்கிறதுக்காகவே நான் ஆஸ்பிடலை விட்டு வேகமா டிஸ்சார்ஜ் ஆனேன். பாத்துட்டுக் கௌம்பறபோது,`அடிபட்டதை ஏன் முன்னாலயே சொல்லலை'ன்னு கோபிச்சுக்கிட்டவங்களும், `அடுத்ததடவை கட்டாயம் உடனே எனக்குச் சொல்லுங்கன்னு' கல்யாணப் பத்திரிகைக்கு முந்திக்கிறது போலவும் சிலபேரு கேட்டுக்கிட்டாங்க. எப்படிப் பார்த்தாலும் நடக்கறதை உத்துப் பாக்குறதுக்கு மட்டும் கத்துக்கிட்டா எல்லாமே சுவாரசியமான விஷயங்கதான்..Even I could have written something like this if Karthik has not left this world, bidding the longest good bye to me. Will people stop enjoying others' tragedy? sadly, karthik amma
|
4 comments:
Excellent post. Excellent sense of humor. I really enjoyed reading it. Keep posting.
Ramya
thank u ramya
People try to be over affectionate and flood the patient with so much negative feelings. I wish we put a stop to this practice of visiting people in hospitals and adding to their aches and pains.:-). Funny part is, if one person visits , the wrod goes around and the others think that they have not performed their obligatory visit and try to flock to the bedside!
Cell phones are the best form of communication in conveying the good wishes.
dear friend,
true to the core.people enjoy a sadistic pleasure and would come out with their advice and indirectly injure us saying, "you have done this, you have not done this, that's why this has come to you". This is my personal experience. people literally threw acid and acid when i lost my husband and my dearest dearest karthik. the beauty is that till that moment everyone were praising me , adoring me like an angel..suddenly i have become an ill omen, unwanted creature,.ho, how much did i suffer? people avoided my coming to their houses, with the fear , that if i go to their houses my bad luck would bring disaster to them!!!!!! words fail to explain the pain i felt.
karthik amma
Post a Comment