எண்ண சிதறல்கள்:
சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது

1 comment:
அனுபவிப்பர்களாலும், அனுபவித்தவர்களாலும் மட்டும்மே
உணரமுடியும் அதன் வலி, கேட்பவராலும் படிப்பதனாலும்
முழுமையாக உணரமுடியாது. இது ஒரு இழப்பு ஈடு செய்ய
இயலாதது, கோவப்பட்டாலும் துயரப்பட்டாலும். I just don't know anything or how to express, very sorry.
Post a Comment