தமிழ் பெண்மணி :
தமிழ் நாட்டின் தலையாய குடும்பத்தை சார்ந்த பெண்மணி " தமிழ் மக்கள் எல்லோரும் தமிழில்தான் பேச வேண்டும் என்று " தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான ' சுடிதாரில் ' வந்து மேடையில் வேண்டுகோள் விடுக்கிறார்.
கொடுமைடா சாமி....
தமிழ் நாட்டின் தமிழ் எங்கே போகிறது என்றே புரியவில்லை...சமைத்து பாருங்கள் நிகழ்ச்சி பாருங்கள்..தமிழ் வார்த்தைகள் மிகவும் குறைவு. 'மேத்தி , கோங்குரா, தனியா, மிர்ச்சி ,யோகர்ட் ' என்று ஒரே கலப்படம். நம் புளிச்சகீரை , வெந்தயக்கீரை, மிளகாய் எல்லாம் மறந்தே போய்விடும் போல் இருக்கிறது.
[ இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ''ஆனியன்'' [கொடுமை என்னவென்றால் அதன் சரியான ஆங்கில உச்சரிப்பு அனியன் என்பதே.]
எதற்கு இந்த அரைகுறை ஆங்கில மோகம் ? எனக்கு ரத்த அழுத்தம், டென்சன் எல்லாம் எகிறி விடும்.
கடையிலும் கோங்குரா என்றால்தான் தெரிகிற அளவுக்குத்தான் நிலைமை.
என்னை ஒருவர் கேட்டார் " நீங்கள் இலங்கை தமிழரா ? ''... திகைத்து போன நான் கேட்டேன் " எதனால் அப்படி கேட்கிறீர்கள் ? '' என்றேன் வியப்புடன்.
"இல்லை, இவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுகிறீர்களே '' என்றார். மயக்கம் வராத குறைதான்..
ஆனால், தமிழில் பேசினால் ஒரு கேவலமான பார்வைதான். இரண்டு வார்த்தையாவது ஆங்கிலத்தில் பேசினால்தான் ஒரு மனுஷியாக கருதி திரும்பி பார்ப்பார்கள். காலத்தின் கோலம்!!!
அன்பிலும் அன்பான
கார்த்தியுடன் +அம்மா
4 comments:
Very true! when trying to talk in quite Tamil we get to learn words which sounds to strange enough.
தமிழை அழியவிடாமல் தமிழைக் கட்டிக் காப்பாற்றும் நாடுகளிலேயே தமிழை உதாசீனப்படுத்துவது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.
ஆங்கிலம் எங்கள் தேவை கருதித் தேவைப்பட்டாலும்,எம் தாய் மொழிதானே எம் வாழ்வுக்கும் வளரும் சந்ததிக்கும் தேவை என்பதை உணர்ந்து கொண்டாலே தமிழ் இயல்பாய் வளரும்.நன்றி அம்மா.இனிய தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
மிகவும் சரியான இடித்துரை. (அன்பான முறையில் சொல்லி இருக்கிறீர்கள்). எனக்கு இன்னொரு குறை.. இந்த சமையல் செய்து காட்டும் பெண்மணிகள் இத்தனை மோதிரங்களும், பல பல வளையல்களும் போட்டு, நகை கடைகளுக்கு விளம்பரம் கொடுப்பது ஏன்? அதில் பளபள நகப்பூச்சு வேறு!
Well said, Hema and Vetrimagal. will they realise?
Its Jeevan's duty to post this in his blog as it would reach wider audience.
thank you.Keep commenting and it encourages me to write more.
karthik +amma
Post a Comment