இந்த 'மதராச  பட்டினம்'  படம் எனக்கு  ஒரு பழைய  நினைவை  கொண்டு வந்தது.
1981ம  வருடம்.  திருமணமாகி  புதுக் குடித்தனம். தனிக் குடித்தனம் வேறு. பக்கத்து  வீட்டு  பெண்  தன ஆறு  வயது  மகளை என் வீட்டில் கொண்டு வந்து விட்டு , பாடம்   சொல்லிக் கொடுக்க  சொல்வார்கள்  .அந்த  சிறுமியும்  அ  ஆ , இ ,ஈ  ...என சொல்லிக் கொண்டே  வந்து  ஐ , ஐஐ  ....என்றதே  பார்க்கலாம்.
எனக்கு தலை சுற்றாத   குறைதான்.
இந்த படத்தில்  A, AA, B, BB  என்கிறார்களே.  சும்மா  சொல்லக்கூடாது.  ஆர்யாவும்  சரி, அவர் நண்பர்களும்  சரி. முக பாவனை  அற்புதம். எங்கோ , எப்போதோ  நிஜமாக  நடப்பது  சினிமாவில்  வரும்போது  சிறப்பான நகை சுவையாகி  விடுகிறது.
கார்த்திக் +அம்மா
1 comment:
simply innocent :)
Post a Comment