அடுத்து வரப் போகும் முதல்வர் யாராயினும் என் வேண்டுகோள் :
அது ஜெ என்றால்,
அம்மா ,தாயே, நினைத்தால் தமிழ்நாடு, ரெஸ்ட் எடுக்க கொடநாடு என்ற போக்கை முதலில் மாற்றுங்கள்.
இங்கு வெய்யிலில் வேகும் மக்கள் நிலை என்ன ? நீங்கள் வறுமை என்ன தெரியாமல் வாழ்ந்திருக்கலாம். அதற்காக, ரேஷனில் கொடுத்த மசாலா சாமானில் ஐம்பது கிராம் மிளகு, ஐம்பது கிராம் சீரகம் ஒரு நாள் ரசத்திற்கு போதுமா என்று கேட்டவர் நீங்கள்!!!!!ஒரு குடும்பத்திற்கே ஒரு மாதத்திற்கே அவ்வளவு கூட வாங்க முடியாத ஏழை மக்களின் வாழ்வின் அவலம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இனியாவது, ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வந்து , கொடநாட்டின் ஏரியும், ஆங்கில நாவல்களும், சசிகலாவும் மட்டுமல்லாமல், [ அவை மட்டுமே உலகம் என்று இல்லாமல் ] உங்களுக்கு ஓட்டு போடும் மக்களின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்ய முயற்ச்சியுங்கள் .
அது தி.மு.க என்றால்,:
அவர்கள் கொள்ளை அடித்திருந்தாலும், மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. இலவசம் கேவலம் என்றாலும், அது நிறைய பேருக்கு வேண்டிய விஷயமாக இருந்தது.
இரண்டாவதாக, அரசு அலுவலர்கள்: இவர்கள் முதல்வரை லேசாக மிரட்டினால் போதும் ,கேட்டது கிடைக்கும் என்ற அளவில் சுகப்பட்டார்கள். முன்பெல்லாம் ஒரு டி .ஏ அரியர்ஸ் கிடைக்கவே ஒரு கெஞ்சலோ கெஞ்சல் வேண்டும். ஆனால் கலைஞர் மத்திய அரசு அறிவிப்பு வெளியான நான்கே நாட்களில் இங்கும் தந்து விடுவார்.
ஆனால்,
நடந்த பெரிய தவறு, பெரிய்ய்ய தவறு :
அத்தனை கவுன்சிலர்களும், அத்தனை பஞ்சாயத்து பிரசிடெண்டுகளும் போட்ட ஆட்டம் அளவிட முடியாதது. மக்களை அவர்கள் படுத்திய பாடு !!! எந்த நிலம் வாங்க, விற்க .....அவர்கள் வைத்துதான் சட்டம். அவர்கள்தான் வாங்க வேண்டும், அவர்கள் மூலமாகத்தான் விற்க வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டு கொடுத்தது போக மீதிதான் நமக்கு.
அதே போல் அரசு அலுவர்கள். ஒரு அரசியல்வாதி சொல்லியது போல், அனைவருமே தங்களை முதல்வர் என்றே நினைத்துக் கொண்டு செயல்பட்டதுதான் .....
ஸ்டாலின் அண்ணாவிற்கு வருவோம் :
உண்மைய்லேயே இவரது செயல்பாடுகள் மிகவும் பாராட்டப் பட வேண்டியவை. இன்று கன்னியாகுமரி என்றால் நாளை ஒகேனக்கல்லில் கூட்டு குடிநீர் திட்டம், அடுத்த நாள் சென்னையில் மேம்பாலப் பணிகள் என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்றார் ..இவரது அலுவகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இருக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம். மாநகராட்சி பள்ளிகள் பன்றிகளின் கூடாரம் போல் இருந்த நிலை மாறி இன்று ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்ந்துள்ளது இவரது முயற்சியால்தான்.
ஆனால்,
ஆனால்,
தந்தைக்கடங்கிய பிள்ளையாக அவருடைய பல தவறுகளுக்கு துணை போவது,என்றெல்லாம் இல்லாமல்,
அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை கட்டுக்குள் கொண்டு வாருங்கள் . உங்களுக்கு நாற்பது தொழிற்சாலைகள் உள்ளன என்றெல்லாம் கேள்விப் படுகிறோம். அரசியல் நடத்த இது தேவைதான் என்பது வேறு விஷயம். ஆனால், இது தாண்டி, உங்களால் மிகக் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும். செய்வீர்களா?
கார்த்திக்+அம்மா
2 comments:
Ethirparpulagudan makkal...
ஸ்டாலினை நினைத்து எனக்கு கவலையே ... இங்கே தடியெடுத்தவன்தான் பெரிய ஆள்!
Post a Comment