It's a strange similarity that 2005 2 2011 dates and days are the same.
This day that Age:
அதே ஜூன் மூன்றாம் தேதி.
வெள்ளிகிழமை.
இன்று இரவு நானும் செந்திலும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு , புது வாழ்வு தொடங்கும் எண்ணத்துடன் , புறப்பட்டோம்.
கட்டி வைத்திருந்த கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் துள்ளிப் பாய்ந்து தாய்ப் பசுவிடம் ஓடுமே ,அதே மன நிலைதான் எனக்கும்.
என் உயிருக்கு உயிரான மகனின் ஆதரவில், அரவணைப்பில், பாதுகாப்பான, மகிழ்வான வாழ்க்கை தொடங்கப் போகிறோம் என்ற சந்தோசம் ஒரு புறம்.
Transfer கிடைக்கவில்லை , மொழி தெரியாத ஊர் போன்ற கலக்கங்களும் கவலைகளும் ஒரு புறம்.
படிப்பு, வேலை போன்ற பல காரணங்களால் நானும் கார்த்தியும் எட்டு வருடங்கள் பிரிந்து இருந்தோம்.
இனி ஆசை மகனுடன் இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் போன நான்,
சுவற்றில் அடித்த பந்தாக 82 days, just 82 days, only, [ that too nonplussing the days that Karthik left for U.S and i shuttling to Chennai regarding my job and transfer , balance days are just '' ''48 '' '' days.
கணக்கிற்கு ஒரு மண்டலமோ? சுவற்றில் அடித்த பந்தாக சென்னை திரும்பிய சோகத்தை என்னவென்று சொல்ல ?
விதி இப்படி கூட விளையாடுமா என்ன ?
வேதனை, வேதனை, வேதனை,,,
கண்ணீருடன்,
கார்த்திக் அம்மா
No comments:
Post a Comment