மாடு
தொலைக் காட்சி செய்தியில் பார்த்து அதிசயித்த விஷயம் :
ஒரு மாட்டை அதன் உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அந்த புதிய உரிமையாளர் வீட்டில் அன்று இரவு திடிரென தீ பற்றி எரியத் தொடங்குகிறது. அதை கவனித்த இந்த மாடு கட்டை அவிழ்த்துக் கொண்டு பழைய உரிமையாளர் வீட்டிற்கு சென்று கத்துகிறது. அவர் வெளியே வர , இந்த மாடு தீ பிடித்த வீட்டிற்கு அழைத்துக் செல்கிறது. எல்லோரும் சேர்ந்து தீயை அணைக்கிறார்கள்......
இது கதையல்ல, நிஜம்.
அடுத்தது இன்னும் விசேஷம். டி.வி யில் காட்டினார்கள். ஒரு மாடு தாகத்திற்கு தண்ணீர் குடிக்கும் அழகு. கை அடிக்கும் பம்பில், தன் கொம்பால், தட்டி, தட்டி என்னமாய் தண்ணீர் குடிக்கிறது. பம்பை இப்படி அடித்தால் தண்ணீர் வரும் என்றும், அதற்கு தன் கொம்புகளை உபயோகப் படுத்தலாம் என்றும் அந்த மாடு எப்படி கற்றுக் கொண்டது? ஆச்சரியமாக இருந்தது.
வேறு யாராலாவது முடியுமானால், இதை விடியோவாக பதிவேற்றுங்கள்.
கார்த்திக்+அம்மா
2 comments:
http://www.youtube.com/watch?v=VZTJ-gluoSc
http://www.youtube.com/watch?v=fro54siALgo&feature=related
Post a Comment