இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.
அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்.
இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப் பெற்றிருக்கின்றோம்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.
கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.
அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்
வேதனையை பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதால் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தின் லட்சியத்திற்காக, கொள்கைக்காக, எந்த காரியம் செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் மறைவேன் என்று உங்களிடம் கூறி விடைபெற்றுக்கொள்வதற்காகத்தான் வந்தேன். இப்படி சொல்வதால் பொதுவாழ்க்கையில் இருந்து அல்ல. இந்த இயக்கத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
கூட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவே கருணாநிதி திருவாரூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார்.
அழுதார்
கருணாநிதி பேசும்போது, குறிப்பாக கனிமொழி குறித்துப் பேசும்போது அவ்வப்போது கண்கலங்கி சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். பின்னர் விம்மிய குரலில் அவர் தொடர்ந்து பேசினார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை குறித்து அவர் பேசும்போது அழுது விட்டார்.// ..//
அப்பப்பா...டெல்லியில் மக்களே வசிக்கவில்லை..இவர் மகள் மட்டும்தான் அந்த ஊரில் இருக்கிறார்.
இவர் மகள் ஒரு '' ''ரோஜாப் பூ '' ''.அப்படியே வாடி விடுவாராம்.
ஆனாலும் இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை.
அந்த திஹார் சிறையில் இவர்களை விட ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலர் உள்ளனர். யாருமே இப்படி அலட்டிக் கொள்ளவில்லை.உயர் நீதி மன்றம் தரவில்லையா,, உடனே உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் மனு....அடேயப்பா.ஆனாலும் விண்ணுக்கும் மன்னுக்குமாகத்தான் குதிக்கிறார் இந்த தந்தை.
என்னுடைய பதிவில் இவர் சுறுசுறுப்பை வியந்து எழுதியிருந்தேன். பதவி, பலம் எல்லாம் இருந்தால் ,எல்லா சுறுசுறுப்பும் வரும்.
ஒரு தொலைக் காட்சி வேறு, '' கருணாநிதி உடல் எடை குறைந்து விட்டது '' என்று வருத்தப் படுகிறது.
அவர் குடும்பம் மட்டும்தான் எல்லாமே என்ற அவரின் சுயநலம் வெட்ட வெளிச்ச மானாலும், அவரின் தீவிர பக்தர்கள் மாற மாட்டார்கள்.
கனி ஒரு ''பெண் '' என்பதால் [ !!!! ], ஒரு '' தாய்'' என்பதால்,அவரை விடுவிக்க வேண்டுமாம். அப்படியானால், நேற்று ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஒரு வி.எ.ஒ கைதானாரே, அவரையும் ஒரு 'பெண் ' என்பதால் மன்னித்து விட்டு விடலாமே.
எல்லா குற்றங்களையும் பெண்களையே செய்ய சொல்லி விட்டு எல்லோருக்கும் மன்னிப்பு கொடுத்து விடலாமே.
2 comments:
தனக்கேன வந்தால் தான் தெரியும் தலைவலியும் ஜீரம்மும்.
யார்ராக இருந்தாலும் நீதி ஒன்றுதான் என்பதை உணருவாரர கருணாநிதி.
மேலும் வாசிக்க....
Do Visit
http://www.verysadhu.blogspot.com/
Post a Comment