About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/08/23

தமிழ் புத்தாண்டு

சிரிப்பதா அல்லது அழுவதா ????
ஒரு ஆட்சியில் தை ஒன்று தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்கள்.
அடுத்த ஆட்சியில் சித்திரை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்கள் .
இவர்கள் முடிவு செய்து சொல்லிவிட்டால் அதுதான் வேதமா?
எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அந்த நாளில் நான் கொண்டாடிக் கொள்ள எனக்கு உரிமை உள்ளதே.
என்ன, இவர்கள் விடுமுறை அறிவிக்க மாட்டார்கள் , அவ்வளவுதானே?
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், தை ஒன்று பொங்கல் என்பதால் அன்று கண்டிப்பாக விடுமுறைதான்.
சித்திரை ஒன்று என்பது, ஏப்ரில் 14 அம்பேத்கார் பிறந்த தினமாக , மத்திய அரசே விடுமுறைதான். ஆக இரு அறிவிப்புகளினாலும் எந்த குடியும் முழுகப் போவதில்லை.
அதற்கும் அடுத்த விஷயம் ,கொண்டாட்டம் என்பது டி.வி.நிகழ்ச்சிகள் என்று ஆகி விட்டது. ஒரு பட்டி மன்றம், சொத்தையாய் ஒரு காமெடி , ஒரு நடிகையின் புல்லரிக்க வைக்கும் தங்க தமிழ் பேட்டி, சாலையில் பேருந்துக்கு காத்திருப்போரை எல்லாம் இழுத்து வந்து கையில் மைக் கொடுத்து கத்த சொல்லி சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சி என்று அன்றைய நாளை தமிழகம் '' '' கொண்டாடி ''???? முடித்து விடுகிறது.

எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இதை ஏன் இமாலய விஷயமாக்க வேண்டும் ?
இந்த நானா, நீயா போட்டி ஓயவே ஓயாதா?
karthik+ amma

2 comments:

Jeevan said...

You are so right! Belief depends on individual; let people celebrate the day they wish.

chinna pulla thanamala irukku ivanga sanda... pavam makkal manda thaan kodaiuthu.

kalaiselvisblog said...

nice post...

ur positive approach is superb. they wont think about others sufferings.