குர்கான்: கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் 70
அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுமி மஹி வியாழக்கிழமை
அதிகாலையிலேயே இறந்துவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
ஹரியானா
மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற
கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மஹி கடந்த புதன்கிழமை தனது 4வது பிறந்தநாளைக்
கொண்டாடினாள். அன்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக்
கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி
விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள்.
குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
இது செய்தி.
இரவு 11 மணிக்கு ஒரு குழந்தை வெளியில் விளையாடுமா ? அந்த நேரத்தில் அந்த தாயும் தந்தையும் வேலைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அந்த காலத்தில் 6 மணிக்கு மேல் குழந்தைகளை வெளியேவே அனுப்ப மாட்டார்கள்.
இப்போது கால நேரம் இல்லைஎன்றாகி விட்டது. அந்த சிறுமி விழுந்தது பெற்றோருக்கு தெர்யா வந்து அதன் பின் அவர்கள் தீ அணைப்புக்கு சொன்னார்களாம் அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துதான் வந்தார்களாம். நள்ளிரவில் அவர்களும் அங்கு வந்து சேர வேண்டுமல்லவா .
இவர்கள் பக்கம் தப்பிருப்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். எதற்கெடு , அரசாங்கம், அரசாங்கம் என்று கூப்பாடு.
இதில் T .V channels தன பங்கிற்கு ஓலம் இடும்.
மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
168 Gas சிலிண்டெர்கள் ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஐய்யா நான் ஒரு [ ஆம் ஆத்மி ] சாதாரண குடிமகன் நானெல்லாம் 21 நாட்கள் கழித்துதான் பதிவே செய்ய முடியும் அதற்கப்புறம் காஆஆத்திருக்க வேண்டும். வந்து விட்டால் வைரப் புதையல் கிடைத்தது போல் சந்தோஷப் பட்டு கொள்ள வேண்டும்.இந்தியா என்ற ஒரு நாடு ஒரு சில 100 பேர்களுக்கு என்று மட்டுமே ஆகி விட்டது. நம்மையெல்லாம் ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அந்த முக்கியஸ்தர்கள் மட்டுமே நாட்டை பங்கு போட்டு கொள்ளும் காலம் சீக்கிரம் வந்து விடும் என்று தோன்றுகிறது.
கார்த்திக்+அம்மா
No comments:
Post a Comment