About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/06/26

இந்த  சிறுமியின் இழப்பு  ஒரு சோகம்தான்.
ஆஆனால்,  அதை விட பெரிய சோகம்,  சேலம் மாவட்டடத்தில்  இருந்த யானைக்  கூட்டத்தை  மக்கள்  துரத்திய  துரத்தில், அவைகள் எங்கு போவது எப்படி  போவது என்ற தடுமாற்றத்தில்  ,ஒரு யானை கூட்டத்தை  விட்டு  பிரிந்து விட்டது.
அதை விட பெரிய சோகம் ஒரு குட்டி யானை உயிர் இழந்தது.
நான் bus ல் வரும் பொது 4 ம தேதி  அந்த  யானைக் கூட்டம் தருமபுரி அருகே இருந்தன. ஒரே கூட்டம். அட, அதை  விட கொடுமை  [  இந்த செல் போனில் கேமரா  வந்ததும் போதும் ] ஆளுக்கு ஆள் போட்டோ எடுத்துக்  கொண்டிருந்ததுதான். பாவம்  அந்த  யானைகள்  மிரண்டு  போயிருந்தன.
என் வருத்தம் இதுதான். ஏன்  யாருக்குமே  அந்த யானைகள்  பசியோடிருக்கும்  என்றோ  அவைகளுக்கு  உணவு  கொடுக்க  வேண்டுமென்றோ தோன்றவேயில்லை. அந்த போட்டோவை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு பந்தாவுக்கு  அலையும்  இவர்கள்  அந்த  யானைகளின்  மன நிலையை ஒரு நிமிடம் கூட சிந்தித்து  பார்க்காததேன் ?
பயத்திலும் பசியிலும் அந்த  யானைகளின் தவிப்பை  T V யில் பார்த்த பொது  மனம் மிக வேதனைப் பட்டது.  அதை விட அந்த யானைக் குட்டி இறந்து விட்டது என்ற செய்தி துக்கத்தை அதிக படுத்தியது.
இதற்காகத்தான், இந்து மதத்தில் ஒவ்வொரு  கடவுளுக்கும்  ஒவ்வொரு  விலங்கை  specify  செய்தனர். முருகனுக்கு மயில், யமனுக்கு  எருமை, ராமருக்கு அணில் ,சிவனுக்கு  காளை , விநாயகர்  யானை  என்று  வைத்து தொடர்பு படுத்தி  ,அவைகளுக்கு  மனிதர்கள்  தொந்திரவு  கொடுக்காமல்  இருக்க  வழி செய்தனர்  .
  
    ஆனால்  இப்போதுதான்  மனிதர்கள்  தலை கீழாக  மாறிக் கொண்டிருக்கிறார்களே.  கலிகாலம்.   அவ்வளவுதான்  சொல்லலாம்.
கார்த்திக்+அம்மா        

 

1 comment:

Jeevan said...

மக்கள் தங்கள் வாழ்கையையும் வாழ்வாதாரத்தையும் மட்டும் பார்கிறார்கள். பிறஉயிர் இனங்களை வெறும் வேடிக்கை பார்கிறார்கள்.
இந்த உலகத்தில் எல்லா உயிர் இனங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. மனிதன் மட்டும் அவரட்டை எல்லாம் ஆள துடிக்கிறான்.