About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/08/25

அதிர்ச்சி அளிக்கும் செய்தி.:இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடைபெற்றது . எழுதியவர்கள் 6 லட்சம் பேர்.
தேறியவர்கள் 1650 பேர்.
.036%:
அதாவது  5.99 லட்சம் பேர் தோல்வியைந்துள்ளனர் .
எல்லோரும் ஒரு கோணத்தில் இதை அலசுகிறார்கள்.
ஆனால், நான் சொல்லும் விஷயத்தையும்  சிறிது யோசித்து பாருங்கள்.
இந்த 6 லட்சம் பேரும்  முட்டாள்கள்  அல்ல. படிக்க விரும்பாதவர்களோ , அல்லது தங்கள்  தகுதியை  அதிகரித்துக் கொள்ளவோ விரும்பாதவர்களோ  அல்ல. எல்லோருக்கும் படிக்க வேண்டும் ,நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஒரு 10% வேண்டுமானாலும் குறுக்கு வழியை நாடலாம்.
ஆனால் 90% அப்படியில்லை.
அப்படியானால்  அவர்கள் இவ்வளவு மோசமாக  தேர்வில் தவறியதற்கு  என்ன காரணம்.
கண்டிப்பாக  ஆசிரியர்கள்தான் .50% ஆசிரியர்கள்  பாடத்தை படித்து காட்டுவார்கள். அதுதான்  teaching .இன்னும் சிலர், ஒரு மாணவனை படிக்க சொல்லி விட்டு பாடம் நடத்தியதாக கணக்கு சொல்லுவர்.
இதெல்லாம்  நான் பார்த்ததைத்தான் சொல்லுகிறேன்.முதலில் ஆசிரியர்களுக்கென்று ஒரு தார்மிகம் இருக்கிறது.அணியும் உடையிலிருந்து, பேசும் சொற்களில் இருந்து அவர்களிடம் ஒரு கண்ணியம் வேண்டும்.
அடுத்து தான் நடத்தும் பாடங்களில் வல்லவராக  இருக்க வேண்டும். அதுவே  மாணவனுக்கு அந்த பாடத்தில் ஒரு பிடிப்பையும்  ஆர்வத்தையும் தரும்.தானாக படிப்பான்.
சொல்லித் தெரிய  வேண்டியதில்லை.இப்போது  நிலை என்னவென்று..
நானும்  ஆசிரியையாக இருந்திருக்கிறேன் .அடித்திருக்கிறேன். ஆனால் மாணவர்கள் என்னிடம் பாசமாகத்தான் இருந்தார்கள். பயம் இல்லை. மரியாதை இருந்தது.Admiration ,affection ,adoration இருந்தது.என் கண்டிப்பு அவர்கள் நலனுக்குகாகத்தான்  என்று அவர்களுக்கு புரிந்திருந்தது.+2  மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆசைகள் , லட்சியம் என்ற கனவுகளோடுதான் வருகிறார்கள்.
ஆசிரியர்கள் அந்த லட்சிய ஜோதியை நீர் ஊற்றி அனைத்து  விடுகிறார்கள்.
இல்லையென்றால் 1.60 லட்சம் engineering  மாணவர்கள் degree முடிக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பார்களா?
     யார் சொல்லி யார் திருந்தப் போகிறார்கள்.?
ஆனாலும் ஊதும் சங்கை ஊதி  வைப்போம்  .
கார்த்திக்+அம்மா 

2 comments:

Jeevan said...

I agree and Its really shocking!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் சார்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…