அம்மாவிற்கு அஞ்சலி
Today is September 5 th..Teacher's day.
My mom was a very good teacher and Head Mistress of a Govt.high school.She joined duty at the age of 17 and worked till 59. just can't guess. 42 years of service.
A very dynamic lady. Multi talented, versatile, boldest,and a dedicated and devoted teacher.
And there's no other testimony that she was the best of the best teachers , that she died on September 5 th last year.
இந்த கவிதை (??) எப்போதோ எழுதியது.இப்போது எதேச்சையாக கண்ணில் பட்டது.என் தாய்க்கு இது எவ்வளவு பொருத்தம் என்று அதிசயமாக இருந்தது.
கதிரோனுக்கு காட்சியே விரிவுரை
பூவிற்கு மணமே முகவுரை
வெண்ணிலவிற்கு குளிர்மையே அணிவுரை
ஆயின்
எம் ஆசிரியைக்கு இவையனைத்தும் எவ்வுரை ?
உரைப்பதற்கு இதுவென்று கட்டியிட்டால்
எல்லையுண்டாயின் உண்டு ஓர் உரை.
எல்லையில்லார்க்கு ஏது அணிந்துரை ?
.... ... ..... .....
காண முயலெய்திய அம்பினின்
யானை பிழைத்த வேலினிது
என்பர்.. அது போல் ,
தோல்வியை முன்னெதிர் கொண்டு
வெற்றியிலா முயற்சிக்கு
யான் இயற்ற விரும்பினேன்
(அதாவது அந்த நல்ல ஆசிரியை பாராட்டி கவிதை எழுதுவது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் )
எளிமைக்கோர் எடுத்துக் காட்டாம்
களிப்புக்கோர் கண்ணாடியாம்
தவறு ,தவறு
எளிமைஎன்றேனே அது தவறு
நகையால் நகைச்சுவை எனும் நகையால்
போர்த்திய நகைப் பெட்டகம்
அப்படியாயின் எளிமை ஏது ?
வலிமையே முழுமையாய்
வாழ்ந்தே வென்றாய்
அம்மா உனக்கு என் அன்பு வணக்கங்கள்
3 comments:
அருமை... நல்ல வரிகள்...
வாழ்த்துக்கள்...
அற்புதமான கவிதை!
Great tribute to your mom and she resembles you :)
Great mom
Post a Comment