Vinothini and Acid
இந்த அழகான பெண் மீது ஆஸிட் வீசிய அந்த கொடூரனை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆனால்,
இந்த அழகான பெண் மீது ஆஸிட் வீசிய அந்த கொடூரனை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆனால்,
நான் சிறுமியாக இருந்த போது [ எத்தனை வயது என்பதெல்லாம் நினைவில்லை. ] 1965 யாக இருக்கலாம் .என் ஊர் ஒரு சிறு கிராமம்.அங்கு ஒரு ஆசிரியர ,அவருடைய மகள் படித்து நல்ல வேலையில் இருந்திருக்கிறார்.
அவரை இப்படித்தான் ஒரு வெறியன் காதலிக்க சொல்லி வம்பிழுத்து அந்த மறுக்க ,அந்த பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டான்.
இப்போது போல் அப்போது மீடியா கிடையாது.மருத்துவம் கிடையாது.மனித உரிமை சங்கங்கள் கிடையாது.
அந்த பெண் ஒரு தனி அறையில் முடங்கிப் போனார்.
எல்லோரும் இதைப் பற்றி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் நான் அந்த வீட்டிற்கு சென்றேன் .தற்செயலாக அந்த அறைக்கு சென்று விட்டேன். அப்பப்பா,
அந்த முகம் ....
இன்றும் என் நினைவின் ஆழத்தில் அப்படியே இருக்கிறது.
இன்று நேற்றல்ல
கிராமத்தில் அல்ல ,நகரத்தில் அல்ல
எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் பெண்ணுக்கு கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
1962 அல்லது 1965 எந்த ஆண்டோ எப்படியாக இருந்தாலும் குறைந்தது ஒரு 50 வருடங்களுக்கு முன்பே இது போன்ற கொடுமைகள் நடந்துள்ளது.
இதெற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
கார்த்திக் +அம்மா
No comments:
Post a Comment