About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/02/08

கார்த்திக் என் அம்மா வீட்டின் மூன்றாவது தலைமுறையின் முதல் மகன்.நான் 4 சகோதரர்களுடன் பிறந்த ஒரே பெண் என்பதால் நானே over செல்லம்.
அப்படியானால் கார்த்திக் பற்றி சொல்லவே வேண்டாம்.செல்லமோ செல்லம்.
செந்தில்  பிறக்கும் போது  குடும்பத்தில் எல்லோருக்கும் மிகப் பெரிய கவலையே கார்த்தி செந்திலை எப்படி வரவேற்பானோ  என்பதுதான்.
ஒரே குழந்தையாய் வளரும் குழந்தைகள் அடுத்த குழந்தை வரும்போது கோபம் கொள்வது ,அந்த குழந்தையை கிள்ளுவது ,அடிப்பது என்ற வகையில் தன்  கோபத்தை, குரோதத்தை காட்டும் என்றெல்லாம் படித்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் எல்லோருக்கும் ஒரு கலக்கம் இருந்தது.நான் செந்திலை பிரசவித்து மருத்துவமனையில் இருந்தபோது கார்த்தியை அழைத்து வந்தனர்.எல்லோரும் அவனையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்னருகில் வந்தவன் கால் நீட்டிப் போட்டு உட்கார்ந்து   '' என் தம்பியை என் மடி மீது போடுங்கள் '' என்றானே பார்க்கலாம்.!!!!!
எல்லோருக்கும் அப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு .
அன்றிலிருந்து அவன் இறுதி மூச்சு வரை தம்பி என்றால் உயிர்.தம்பிக்காக எதுவும் செய்வான்.செந்தில் செய்யும் குறும்புகளை அப்படி ரசிப்பான்.
உயிர் பிரியும் நேரத்தில் என்ன நினைத்தானோ?
செந்தில் தன்  தந்தையை இழந்த போது  கூட அவ்வளவு துவண்டு விடவில்லை.அண்ணன் மறைவு .... சொல்ல முடியாத சோகம்.
நாட்கள் சோகத்திலேயே ஓடுகின்றன .
மீண்டும் ஒரே ஒரு முறை கார்த்தியை கண்ணில் பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்புடனும் ஏக்கத்துடனுமே  நிமிடங்கள் நகர்கின்றன .
கார்த்திக்+அம்மா


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப கஷ்டமாக இருக்குங்க...

Jeevan said...

Thanks for sharing there cute photos. touching moment.

M (Real Santhanam Fanz) said...

சாரி மேடம், இப்போதான் இந்த பதிவையும் நீங்க அனுப்புன மத்த பதிவு லிங்கையும் படிச்சேன்... மீள முடியாத துயரத்திலும் அருமை மகனின் பிளாக்கை அவர் நினைவாக தொடரும் உங்களுக்கு ஒரு மகனாக என் இதயம் நிறைந்த நன்றிகள்!!!

Uma Uthra said...

I read most of your posts ma'm. Yow write so well :) I was in total awe when i came across karthik's resume. Such a talented son you had.

*.இப்போது புரிகிறதா ? நான் எப்படி பட்ட மகனை இழந்திருக்கிறேன் என்று ?*

puryudhu :( Feeling soooo proud of karthik sir too. My brother's name is also karthik.

Uma Uthra said...

I read most of your posts ma'm. You write so well :) I was in total awe when i came across karthik's resume. Such a talented son you had.

*.இப்போது புரிகிறதா ? நான் எப்படி பட்ட மகனை இழந்திருக்கிறேன் என்று ?*

puryudhu :( Feeling soooo proud of karthik sir too. My brother's name is also karthik.