இன்று என் அம்மாவின் நினைவு நாள்.
அற்புதமான பெண்.
எனக்கு தெரிந்து அவர் போல் ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர் யாரும் இருக்க முடியாது.அழகு, அறிவு, அந்தஸ்து ,செல்வம் அனைத்தும் பெற்றவர்.
ஒரு சிறந்த தலைமை ஆசிரியராக செயலாற்றியவர்.
அவர் வாழ்க்கையின் சில துளிகள்.
77 வயது வரை வாழ்ந்தவர்.
எந்த வேலையையும் சவாலாக செய்யக் கூடியவர்.
சிறந்த விளையாட்டு வீராங்கனை.
Best swimmer
poet
orator மேடையில் வெளுத்து வாங்குவார்.
இப்படி எல்லாமும் செய்தாலும் அவருக்கு ஆகவே ஆகாத ஒரு விஷயம் சமையல்.
அவர் சிறு வயதாக இருந்த போது அவர் அம்மா சாம்பார் தாளிக்க சொல்லி விட்டு எங்கோ சென்றுள்ளார். என் அம்மா ஒரு உதவியாளர் (! ! ) உடன் சேர்ந்து தாளிக்கும் கரண்டியை ஒரு நீள குச்சியில் கட்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அது பொரிய ஆரம்பித்தவுடன் அப்படியே போட்டு விட்டு வெளியே ஓடி விட்டாராம்.
.திருமணத்திற்கு பிறகும் அதே கதைதான்.
எனக்கு மொத்தம் 6 பாட்டிகள் .
இவர்தான் மெத்த படித்த மேதை. அந்த .காலத்திலேயே அரசு வேலையில் இருந்தவர்.
அதனால் .செல்லமோ செல்லம்.அதனால் சமையல் வேலை அம்மாவிற்கு இல்லை.
ஒரு பொங்கல் வந்து விடக் கூடாது..அம்மா பொங்கல் செய்வதற்குள் ஒரு பிரளயமே நடக்கும்.
High light ஏ இதுதான்.
எனக்கு பெண் பார்க்கும் படலம் .நானோ I .A .S படிப்பேன் என்று ஒரு பிடிவாதம். அதனால் யாராவது பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் சண்டைதான்.அப்படித்தான் அன்று கார்த்தியின் அப்பா பெண் பார்க்க வந்தனர். அவர்கள்தான் ஒரு 2 அ 3 பேர் வரலாம் வந்தவர்கள் 8 பேர்.நான் சண்டை.அம்மாவிடம் பேசவில்லை.அப்பா கெஞ்சியதால் ஒரு முறைப்புடன் வந்து ஒரு நிமிடம் நின்று விட்டு அறைக்குள் சென்று விட்டேன்.வந்தவர்களிடம் அம்மா சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றவுடன் அவர்களும் (என் மாமனார் )சரி என்று விட்டனர். அன்றைக்கு பார்த்து சமையல் பெண் வரவில்லை. நானோ முறுக்கிக் கொண்டு அறையில்.
ஒரு அரை மணி நேரம் கழித்து அம்மா மெதுவாக அறைக்கு வந்தார்.நான் ஒரு முறைப்பு.தயங்கி நின்றவர் மெதுவாக ''கண்ணம்மா '' என்றார். எப்போதும் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.மறுபடியும் ஒரு முறைப்பு.
'' குக்கர் whistle வரவில்லை '' என்றார்.
பாவமாகி விட்டது.சமையல் அறைக்கு போய் பார்த்தால், குக்க்கரில் தண்ணீரே ஊற்றவில்லை.அப்புறம் என்ன ? வழக்கம் போல் என் சமையல்தான்.
தன 77 வயது வாழ்க்கையில் ஒரு முழு சமையல் செய்யாமலே வாழ்ந்து காட்டி விட்டார்.
*****
நான் 1996 ல் M .B .A பட்டம் IGNOU பல்கலை.சென்னை I I டி யில் பட்டமளிப்பு விழா.எங்கும் ஒரு கும்பலாக போவதே வழக்கம்.அதே போல் இதற்கும் எல்லோரும் கிளம்பியாகி விட்டது.ஆனால் 2 பேர் மட்டும்தான் உள்ளே செல்லலாம் என்று சொல்லி விட்டனர்.என் கணவரும் வர வேண்டும் .கார்த்திக்கிற்கும் ஆசை .ஆனால் அம்மா வந்தே ஆக வேண்டும் என்று ...எப்படியோ கெஞ்சி கூத்தாடி 3 பேருக்கு அனுமதி வாங்கி நான், என் கணவர் ,அம்மா 3 பேரும் உள்ளே போய்விட்டோம்.பட்டம் பெறப் போகிறவர்களின் பெயர்களை படித்தனர். என் பெயர் படித்தவுடன் என் அம்மாவும் எழுந்து நின்றார்.
என் கணவரோ '' படித்து பட்டம் பெற்றவள் அவள். நீங்கள் உட்காருங்கள்'' என்று கலாய்க்க
இப்படி ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை கூட நழுவ விடாமல் வாழ்க்கையை சுகமாக சந்தோஷமாக வாழ்ந்தவர்.
கார்த்தி முதல் பேரன். அவன் இழப்பு அவரின் வாழ்வில் பேரிடி. கடைசி நாட்களில் துக்கத்தில் மூழ்கி போனார்.
ஒரு சிறந்த ஆசிரியையாக வாழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.
....... ஆசிரியர் தினம்......
அம்மா உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.