About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/11/05

திக் திக் 44 நிமிடங்கள்...+ராதாகிருஷ்ணன்  FAN ஆனேன்
HAPPY HAPPY ..மங்கள்யான் வெற்றி
அப்பப்பா  44 நிமிடங்கள் வயிற்றுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறந்தன. Live ஆக பார்க்க ஆசை ஆசையாக  இருந்தது. ஆனால் என்னைப் போல் வாழ்விழந்த  ஒரு வீணாப் போனவள்  பார்த்தால் எங்கே  mission  தோல்வியாகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஆர்வத்தை கட்டு படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருநதேன்.
என் பிரார்த்தனை வீணாகவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்  நன்றிகளும்.
அடுத்ததாக  நிச்சயமாக  நம் ராதாகிருஷ்ணனை  பற்றி  .நிறையவே சொல்ல வேண்டும். Dedication என்று இவரை உருவகப்படுத்தலாம்.
இதற்கு முன் ஒரு செயற்கைக்கோள்  தோல்வியாகி கீழே விழுந்த போது தன்னுடன் இருந்த அனைத்து ஆராய்ச்சியாளர்களையும்  அனுப்பி விட்டு அந்த தோல்வியை தன்னுடையதாக மட்டுமே ஏற்றுக்கொண்டு பேசி விட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
இன்று பாருங்கள் :
 எல்லோரையும் அழைத்து பேச வைக்கிறார்.நிச்சயமான பெருந்தன்மை.
யக்ச்பால் என்றொரு வயதான  அறிவியலாளர் .1990 களில் இவர் தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு  பதில் தருவார்.பைத்தியமாக அலைவோம்.அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு.
அந்த மனிதரை இன்று பார்க்கிறேன். எதோ நெருங்கிய உறவினர் ஒருவரை பார்ப்பது போல் சந்தோஷமாக இருந்தது.
அமைச்சர்  நாராயணசாமி
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்தால்  Dr ராதாகிருஷ்ணன்  '' .இவர் 2010 லிருந்து  மிக நெருக்கமாக உதவியாக இருந்தார்'' என்கிறார்.இந்த மனிதர் ஒரு வித்தியாசமானவர்தான்.இவரது மனைவி 2 சக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்  என்று செய்தி படித்த போது இவ்வளவு எளிமையான  ஒரு அமைச்சரான மனிதரா  என்று வியந்தேன்.இப்போது அந்த  .மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
.....     .......
மரண மொக்கை படங்களை  எடுத்து விட்டு இமாலய  சாதனை செய்தது போல் பேசும் நம் சினிமா பிரபலங்களை யும் இந்த விஞ்ஞானிகளையும் (scientists ) ஒப்பிட்டு வேதனைதான் அடைய வேண்டியுள்ளது.
சினிமா நடிகர்கள் 20 கோடி 30 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
ஆனால் இவர்களுக்கோ  1 அ 2 லட்சம் சம்பளம் இருக்கலாம்.இவர்களுக்கு கட் அவுட் கிடையாது.பாலாபிஷேகம்  கிடையாது..ஆனால் இவர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களால்தான் நம் இந்தியா  வெற்றி நடை போடுகிறது.
பி.கு.
எனக்கும் படிக்கும் காலத்தில் இப்படி சாதனை செய்ய வேண்டுமென்று வெறி இருந்தது.
விதி வேறு விதமாக சிரித்தது.
ISRO  தலைவர் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார் .Religion starts when science fails
கார்த்திக் அம்மா

No comments: