About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/08/21

ஆனந்த்  பனியன் விளம்பரம்
ஆனந்த் பனியன் விளம்பரத்தில்
''ஏய் ,இது அப்பா  பனியன் ''என்பதற்கு அந்த சிறுவன்'' இது ஆனந்த பனியன்''
என்று சொல்லும் பதிலை கேட்கும் போதெல்லாம் எனக்கு கார்த்திதான் கண்ணில் நிற்பான்.
இதே போல் சிறுவனாக இருந்த போது கார்த்தி நான்  .வேலை செய்யும் பள்ளிக்கு வந்திருந்தான்.
ஆசிரியைகளில் ஒருவர் அவனிடம் வாய் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு எப்போதுமே மற்றவர்களை மடக்குவதும் , மட்டம் தட்டுவதுமே வேலை.
அவர் கார்த்தியிடம் கேட்டார்
''எங்கள் பள்ளிக்கு ஏன் வந்தாய் ?''
அவர் எதிர் பார்த்த பதில் ''நான் எங்க அம்மா பள்ளிக்கு வந்தேன்.'' என்பது.
அப்படி ஒரு பதில் கிடைத்தவுடன் இது உங்க அம்மாவிற்கு சொந்தமா?உங்க அம்மாதான் கட்டினார்களா? என்றெல்லாம் கேட்கலாம் என்ற திட்டத்துடன்தான் கேட்டார்.
ஆனால் கார்த்தியோ
''இது அரசுப் பள்ளி.எல்லோருக்கும் வர உரிமை உண்டு ''
என்ற பதிலைத் தந்தவுடன் அந்த ஆசிரியை முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.
பின்னாளில் இது பற்றி அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
அப்படி ஒரு பல்பு வாங்குவோம் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர்.
கார்த்தி   கார்த்திதான்.

2014/08/19

world  photography day :
கார்த்தியும் அவன் நண்பனும் ஹோட்டல் அறையில் கண்ணாடியில் டார்ச் லைட் அடித்து தங்களை தாங்களே எடுத்துக் கொண்ட போட்டோ



இரண்டு அணில்களும் தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற  நம்பிக்கையில் உறவாடினால், என் கார்த்தி கண்ணன் அந்த அழகை புகைப் படமாக மாற்றி அவர்கள் ரகசிய சந்திப்பை இப்படி வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே.கார்த்தி கண்ணம்மா, உனக்கே இது நியாயமா?இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ?
செல்ல கோபத்துடன்
அம்மா .
இன்று உலக புகைப்பட தினம்.
கார்த்தி ஒரு சிறந்த புகைப் பட ஆர்வம் கொண்டவன்.1998 லிருந்தே நிறைய சரித்திர சம்பந்தப்பட்ட புகைப்படங்களாக எடுத்து கிட்டத்தட்ட 1000 புகைப் படங்கள் உள்ளன.என்றாவது ஒரு கண்காட்சி வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.இப்போது பல கேமராக்கள் வந்து விட்டன.இப்போது எடுப்பதை பாராட்டும் அதே வேளையில் தனக்கு கிடைத்த சாதாரண கேமராவில் கார்த்தி எடுத்த சில போடோக்கள்.+அவனுடையதும்.
.ஆல்ப்ஸ் மலை.விமானத்தில் பயணம் செய்த போது கார்த்தி எடுத்தது.

2014/08/13

தர்மபுரி மாவட்டம் :
தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் இன்று பாராட்டப்படும் மாவட்டமாக மாறியுள்ளது.
திரு.தம்பிதுரை :
தர்மபுரியில் பிறந்த இவர் இன்று மக்களவையின் துணை சபாநாயகராக பதவி ஏற்கிறார் :
திருமதி.பானுமதி:
இவரும் இதே தர்மபுரி மாவட்டத்தில் பிறந்தவரே.
இன்று உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
தர்மபுரி  காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
பக்கத்து மாவட்டம் (அப்போது தர்மபுரி சேலம் மாவட்டத்தில்தான் இருந்தது )
பக்கத்து மாவட்டம் சேலத்துக்காரி என்ற வகையில் நானும் பெருமை பட்டுக் கொள்கிறேன்.
கார்த்தியைப் பற்றி சொல்லாமல் என் பதிவு நிறைவு பெறாதே.
கார்த்தி  ''நான் சேலத்து சிங்கம் '' என்று சொல்லிக் கொள்வான்.
''சத்திரியனுக்கு சாவு இல்லை''   என்றும் சொல்லிக் கொள்வான்.
விதி கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை.
கேட்டபோது எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
கார்த்திக் அம்மா

2014/08/09

Tit Bits :
இஸ்கான் கோவில்:
இந்த முறை பெங்களூரு சென்றிருந்த போதுதான் முதல் முறையாக இஸ்கான் சென்றேன்.
கோவில் பார்க்கும் ஆசையிலோ அல்லது கடவுளை (அப்படி ஒருவர் இருந்தால் ) பார்க்கும் ஆசையிலோ அல்ல.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணியுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
உண்மையிலேயே சொல்கிறேன்.வரலாற்றில் படித்தோமே.நம் நாட்டிற்கு வந்தவர்கள் கோவிலை கொள்ளையடித்தார்கள் என்று.
நானாகவே இருந்தாலும் செய்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.
அப்பப்பா ,பிரமிப்பாக இருந்தது.
கடவுள், வழிபாடு என்று எதுவுமே தெய்வீகமாகவே  இல்லை.
பார்,பார் எங்கள் செல்வத்தை பாருங்கள். பாருங்கள் என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தது கோவில்.
பூஜையும் மனதை கவரவில்லை.
அது ஒரு shopping mall  போல்தான் இருந்தது.
என் மேல் கோபப்படுபவர்கள் பற்றி நான் கவலை கொள்ளவில்லை.
உண்மையைத்தான் சொல்கிறேன்.
*****      *******
Sensodyn paste விளம்பரம்:
அப்பப்பா
தமிழா பேசுகிறார் அந்த அம்மா .ஐயோ கொலை. கொலை. ஏன் நல்ல உச்சரிப்புடன் பேச கூடியவர் யாருமே இல்லையா? ரத்த கொதிப்பு அதிகமாகிறது.
****** 
இந்த 4 பேர் உட்கார்ந்து பேசுவது என்பது எல்லா தொலைக் காட்சியிலும் தினசரி நிகழ்ச்சியாக உள்ளது.
ஏனப்பா .இந்த 4 முகங்களையே தான் பார்க்க வேண்டுமா?
பேசுகிறார்களா? உரைக்கிறார்களா ? குரைக்கிறார்களா ?
தாங்க முடியவில்லை கார்த்திகா.
உன்னை மறக்க நினைத்துதான் t .v யே  பார்க்கிறேன்.
ஆனால் விளம்பரத்தில் உன் பெயர். சினிமாவில் கதாநாயகன் பெயரும் கார்த்தி.
anchor  பெயரும் கார்த்தி.
நடிப்பவர் பெயர் கார்த்தி.
கார்த்தி,கார்த்தி,கார்த்தி.
அம்மாவும் கார்த்திக் அம்மா

2014/08/01

 01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.
இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
கார்த்திக் அம்மா