About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/01/30

நான் சிறுமியாக இருந்த போது எங்கள் கிராம கோவில் திருவிழாக்களில் பலவித வேடமிட்டு வரும் நிகழ்ச்சி இருக்கும். அதில் முக்கிய வேடம் புலி வேடம். உடல் முழுவதும் மஞ்சள் வர்ணம் பூசி மீசை வரைந்து    பார்ப்பதற்கு புலி(ஐ  ) போலவே இருக்கும். அந்த வேடம் போட்டவுடனேயே அந்த கண்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். இப்போது போல் அப்போது கஷ்டப் பட்டு ( உயிரைக் கொடுத்து ?? ) எல்லாம் நடிக்கவில்லை..மேலை நாட்டிலிருந்து ஒப்பனை காரர்கள் வரவில்லை..
இப்போது எது செய்தாலும் சாதனை ? ஆகி விடுகிறது. ஒரு கும்பல் துதி பாடுகிறது.
பாவம் ...அந்த கிராமத்து மக்கள்.
கலாகார்த்திக்

2015/01/23

அமெரிக்காவும்.... இந்தியாவும்:
ஒபாமாவின் இந்திய வருகையின் போது அவரின் இரு மகள்களும் வருவதாக சொல்லப்பட்டது.
அனால், இப்போது அவர்கள் வர இயலவில்லை என்று சொல்லப் படுகிறது.
காரணம்???????????????????
அந்த பெண்கள் படிக்கும் பள்ளி அவர்களுக்கு விடுப்பு (லீவ் ) தர மறுத்து விட்டதாம்.
நம்முடைய அரசியல்வாதிகளுக்கு புரியவேயில்லை.சமீபத்தில் ஒரு தொழில் அதிபரின் மகனை ஆசிரியர் கண்டித்ததற்காக பள்ளியே சூறையாடப்பட்டு,ஆசிரியரை குற்றுயிரும்  குலைஉயிருமாக ஆக்கிய நாடு நம் நாடு.
இங்கெல்லாம் ஒரு பள்ளி அப்படி செயல்பட முடியுமா?
எதிலும் பணம் உள்ளவனும்  பதவி உள்ளவனும் ஜெயிக்கிறான்.
சட்டம் அவன் காலடியில்.
வாழ்க அமெரிக்கா.
கார்த்திக் அம்மா

2015/01/14

மாதொருபாகன் :
நான் புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்ததை வைத்தும், தொலைகாட்சிகளில் நடந்த விவாதங்களை வைத்தும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
முதலில் முருகன் உபயோகப்படுத்திய வார்த்தையே சரியா?
திருசெங்கோட்டை பற்றி கள  ஆய்வு செய்து எழுதியதாக சொல்லும் அவர் அதற்கான சரித்திர சான்றுகளை அளித்திருக்கலாமே?
அப்படியே ஒரு ஊரை பற்றியும் அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் சொல்ல  வேண்டும் என்றால் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே.
உன் தாய், பாட்டி, கொள்ளுபாட்டி நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரும்.இந்து முன்னநியினரோ , பா.ஜா.காவோ செய்த சதி, இன்னும் சிலர் செய்த சூழ்ச்சி என்றெல்லாம் சொன்னாலும் பெண்களை இழிவு படுத்தும் விஷயத்தை ஏன் எழுத வேண்டும் ?
இவரோ இவரை ஆதரிக்கும் மற்றவர்களோ கிருத்துவ மதத்தை பற்றி தைரியமாக எழுதுவார்களா?
ஏவாள் முதலில் தோன்றிய பெண். அவளுக்கு இரு மகன்கள்..அப்போது ஏவாள் மட்டும்தான் இந்த உலகில் உள்ள ஒரே பெண்.(விவிலியப் படி)
அப்படியாயின் அந்த மகன்களின் மனைவிகள்?
இப்படியெல்லாம் குதர்க்கமான கேள்விகள் கேட்பதை விடுத்து, கிருத்து என்ற ஒரு நல்லவர் இருந்தார். மக்களுக்கு நல்லது  செய்தார்.அவர் வழியை பின்பற்றி நாமும் மக்களுக்கு நல்லதே செய்வோம் என்றுதான் செயல்பட வேண்டும்.
ஒரு இந்து நடிகரும் , ஒரு கிருத்துவ நடிகரும் முஸ்லிம் தீவிரவாதத்தை மையப் படுத்தி தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டனர்.
உண்மையில் சமூக அக்கறை இருந்தால் முஸ்லிம் மக்கள் மாநாடு நடத்தி அந்த மக்களை நல்வழிப்படுத்தலாமே.அவர்களுக்குண்டான மனவருத்தம் என்னவென்று அறிந்து, மூல காரணங்களை அலசி, தீர்வை நோக்கி செல்லலாமே.
ஏற்கனவே வெடித்துக் கொண்டிருக்கும் ஜாதி, மத எரிமலையில்  ஒரு பெட்ரோல் கிணறையே கொண்டுவந்து கொட்டிவிட்டு,
எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா ,நான் எழுதக்  கூடாதா,நான் படம் எடுக்கக் கூடாதா
என்றெல்லாம் ஆர்ப்பரிப்பது எந்த வகையில் சரி?
நல்லவற்றை எழுதுங்கள்.
நல்லவற்றிற்காக எழுதுங்கள்.
for the good ,
by the good ,
of the good
என்றிருக்கட்டுமே .ஜாதி மத பிரச்சினைகளை மறந்து ஒன்று பட்டு வாழ்வோமே.
அன்புடன்'
கார்த்திக் அம்மா.

2015/01/13

போகி பண்டிகை:
     வருடா  வருடம் எழுதுகிறேன்.இதை பற்றி.
பழையன கழிதலும் புதியன புகுதலும்:
அந்த காலத்தில் தானியங்களை கொட்டி வைக்க ''சேர் '' அல்லது  '' குதிர்'' ( store house   or  granary ) என்ற வீடு இருக்கும்.4 அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.3 அல்லது 4 ஆள் 20, 24 அடி இருக்கும்.ஜன்னல், (திட்டிவாசல் ) போன்ற கதவு இருக்கும்.
ஒரு அறையில் கம்பு, இன்னொன்றில் சோளம் ,மற்றொன்றில் ராகி  மற்றும் நெல் கொட்டி வைப்பர்.மாதம் ஒருமுறை ஒருவர் ஏணி  வைத்து உள்ளே இறங்கி தேவைப்பட்ட தானியங்களை எடுத்துக் கொண்டு மேலே வந்து கதவை மூடி விடுவர்.
  தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு   பூலாப்பூ ,ஆவாரம்பூ ,வேப்பிலை,  மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி( இயற்கை பூச்சிக் கொல்லிகள்) அதன் மேல் தானியங்களை கொட்டுவர்.பூச்சிகள் அண்டாமல் காப்பதால் ''காப்பு கட்டுதல்'' என்றாகியது.
பழைய தானியங்கள் கழிந்து புது தானியங்கள் வருவதால் பழையன கழிந்து புதியன புகுதல் வருதல் என்றாகியது.
அதே போல் மட்பாண்டங்கள் ஒரு வருடம்வரைதான் உபயோகப்படுத்தலாம்.அதனால் பழைய பானைகள் சட்டிகள் போன்றவற்றை மாற்றி புது பானையில் பொங்கலிடுவர்.
இதுவும் பழையன கழிந்து புதியன புகுதல்.
இக்கால வாழ்க்கை முறைக்கும் போகிப் பண்டிகைக்கும் ஒவ்வாது.இப்போது எல்லாவற்றிற்கும் பூச்சி கொல்லி மருந்து அடித்துவிடுகிறோம்.காய் பழங்கள்   மேல் vax தடவி விடுகிறோம்.
அதனால் போகியே அர்த்தமற்றதாகி விடுகிறது.முன்னோர்கள் காரண காரியங்களுடனேயே பண்டிகைகளை வைத்தனர்.எல்லா காரணங்களையும் மறந்து டயர்களையும் துணிகளையும் எரித்துக் கொண்டிருக்கிறோம் .
காலத்தின் கோலம்.
கார்த்திக் அம்மா ...கலாகார்த்திக்

26th august

கலையாத நினைவு நான்
விலகாத உறவு நான்
சிதை ஏறும் போதிலும்
மறையாத பந்தம்
விலகாது நண்பனே
நமது ஆன சிநேகம் - i

By today it is 3 years, missing my friend a lot, still not able to accept the truth.
ஜோதிடம்:
இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது என்பதோ?
பாவம் இலங்கை அதிபர் (முன்னால் )
யாரோ  ஜோதிடம் சொல்லப் போய் இன்னும் பதவியும் ஆட்சியும் ஒரு வருடம் இருந்த நிலையில் அவசரப்பட்டு தேர்தல் நடத்தி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்.
அப்படித்தான் தமிழ்நாடு சங்கதியும்.
''மதியம் சாப்பாட்டிற்கு சென்னை சென்றுவிடலாம் '' என்று  ஓட்டுனரிடம் சொல்லி நீதிமன்றத்திற்குள் போனவர் நேராக சிறைச்சாலை சென்றார்.
சென்னையிலிருந்து பெங்களூர் வரை கடவுள்களையும் கோயில்களிலும் வணங்கியவாறே சென்றதாக சொல்லப்பட்டது.
ஜோசியர்கள் தவறா?ஜோதிடம் தவறில்லை.நிறைய கணிதம் நிறைய அறிவியல் உள்ளது என்று புரிகிறது.ஆனால் ஒரு பஞ்சாங்கப்படி சனி அக்டோபரிலேயே இடம் மாறுகிறார். இன்னொரு பஞ்சாங்கப்படி டிசம்பரில் இடம் மாறுகிறார்.
தொலைக் காட்சிகளில் பார்க்கலாம்.''இன்று மதியம் 3.32க்கு சந்திரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்'' என்கின்றனர்.3.32 லிருந்து 3.33க்குள் பிறக்கும் குழந்தைக்கு எந்த ராசி என்று நிர்ணயிப்பது? ராசியோ லக்கினமோ மாறும்போது எல்லாமே மாறுகிறதே..இதற்கெல்லாம் விடை தெரியவில்லை என்றால் ஏதோ ஒரு பதில் சொல்கின்றனர்.
 முன்னோர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார்கள்.நிச்சயம் உண்மையான விஷயமாக இருக்கலாம். காலப் போக்கில் எல்லாம் வியாபாரமான சூழ்நிலையில் ஜோதிடத்திலும்  அவரவர் தன பங்குக்கு புனைகருத்துகளை சொல்கின்றனர்.
ஜாதகத்தையோ , ஜோதிடத்தையோ நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் அதையே வேதமாக கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
ராஜபக்ஷே என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கார்த்திக் அம்மா

2015/01/12

மீள்பதிவு.
HAPPENISM   HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as they happen.
பெண்ணே ..மகளே :
இந்த மாதம் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஓசூரில் ,ஒரு தந்தையும் பெண்ணும் வண்டியில் ஏறினர் . அந்த பெண் ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பதாகவும் அங்கு அவளை இறக்கி விட்டு விடும்படியும் வேண்டினார்.அந்த பெண் என் அருகில் அமராமல் அடுத்த இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்
அப்போதே எனக்கு வித்தியாசமாக பட்டது.
ஆனால் தந்தையை பார்த்தால் பாவமாக இருந்தது.
''நீங்கள் கவலை பட வேண்டாம்.நான் பார்த்து கொள்கிறேன்''
என்று சொன்னேன். பேருந்து புறப்படும் வரை இங்கே நின்றார். அங்கே நின்றார்..
இந்த பெண்ணும் டாடா சொல்லியது. பேருந்து நகர்ந்தவுடன், அந்த பெண் நடத்துனரிடம்
''இந்த பஸ் கிருஷ்ணகிரி செல்லுமா?'' என்று கேட்டு கிருஷ்ணகிரிக்கு டிக்கெட் எடுத்தது.
பையிலிருந்து இன்னொரு அலைபேசியை எடுத்து பேசியது.
எனக்கு பொறுக்கவேயில்லை.
'' ஏம்மா  நீ சென்னை போகவில்லையா? உன் தந்தை நீ சென்னைக்கு போவதகாகவும் கல்லூரியில் இறங்கிக் கொள்ளும்படியும் சொன்னாரே?''
நான் சென்னைதான் வருகிறேன். என் நண்பி கிருஷ்ணகிரியில் வருவாள் ;'' என்று அற்புதமாக கதை சொல்லியது.
எனக்கு புரிந்து விட்டதால் ஊமையாகி விட்டேன். கிருஷ்ணகிரியில் அந்த பெண் இறங்கி வேறு ஒரு பையனுடன் சென்று விட்டாள் .
நடத்துனரும் மற்றவரும் பயங்கரமாக புலம்பினர்.
காதல் செய்யும் வயதும் அல்ல.
மிக மிக வேதனையான விஷயம் அந்த பெண்ணிற்கு எப்படி தன தந்தைக்கு துரோகம் செய்ய மனசு வந்தது. அவர் தன மகள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்.
ஏன் பெண்களே?
ஏன் மகள்களே?
நாங்களும் கல்லூரியில் படித்தோம்.எங்களுக்கு எல்லாம் ஏன் காதல் வரவில்லை?
தாய் தந்தையரின் நினைவு வந்தால் காதல் வருமா?
என்னை பெண் பார்க்க வந்தவரை
''  பிடித்திருக்கிறதா?'' என்று தாய் தந்தையர் கேட்டனர். '' ''கழுதையோ, குதிரையோ நீங்கள் சொல்பவர்க்கு கழுத்தை நீட்டுவேன் '' என்றேன்.
பிரச்சினையே 450 பொறியியல் கல்லூரிகள்தான்.எல்லோரும் என்னவோ 1100 மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரியில் இடம் பெற்ற மாதிரிதான். மிதப்புதான்.தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி ஒரு கடிதம் கூட எழுத தெரியாது. காதல் செய்ய மட்டும் தெரியும்.
அந்த தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன் கார்த்திக் அம்மா

2015/01/09

பெண்ணே  பெண்ணே
நேற்று என் சொந்த கிராமத்திலிருந்து 4  பேர் வந்திருந்தனர். உறவினர்களா என்பது தெரியாது.இதுவரை ஜாதி மதம் பார்த்து பழகவில்லை.
அவர்களில் ஒரு பெண்.
வயது 20.
கொடுமை என்னவென்றால் கணவனை இழந்து 9 மாத கைக்குழந்தையுடன் வெறுமையாக நின்றது.பழனி கந்தசாமி ஐயாவிடம்  கருத்து பகிர்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். 20 வயதில் வெறும் நெற்றியுடன், வளையில்லா கைகளுடன்.......பார்த்த நிமிடத்தில் மனம் கலங்கிப் போயிற்று.
அந்த பெண்ணிற்காக சில அலுவலகங்கள் அலைந்து சில நன்மைகளை செய்து தந்தேன் . மறு கல்யாணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்கிறாள்.சமுதாயம் அவளை கொத்த காத்திருக்கிறது. எப்படி சமாளிப்பாள்?
படித்து கை நிறைய சம்பளம் +கார்த்தியின் யானை பலம்  நிலையிலிருந்த நானே எவ்வளவு போராட வேண்டியிருந்தது.கைம்பெண் என்றால்நல்ல நிகழ்ச்சிகள், எதிரில் வந்தால் அபசகுனம் என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகளை சந்திக்க வேண்டுமே. ஆ ஆ அப்படியெல்லாம் இல்லை. சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்.10 % கூட மாறவில்லை.
அந்த பெண்ணை மேற்கொண்டு படிப்பை தொடர். உனக்கான உதவிகளை செய்கிறேன் என்று சொன்னேன்.
சீக்கிரம் இளைய மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
இது போன்றவர்களுக்கு உதவி செய்ய என்னை அர்பணித்துக் கொள்ளவேண்டும். கார்த்தியின் திருவடியை அடையும் வரை என்னால் முடிந்த உதவிகளை இவர  போன்றவர்களுக்கு  செய்ய வேண்டும்.
கலாகார்த்திக். (அம்மா )
  

2015/01/08

தொலைக் காட்சி தொடர்களும் மதுவும்தான் நாட்டை கெடுக்கிறது என்று ஒரு மருத்துவர் சொன்னார்.
அவருக்கு தெரியுமோ  தெரியாதோ அவர் தொலைகாட்சியிலேயே தொடர்கள் வருகிறதே.