மாதொருபாகன் :
நான் புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்ததை வைத்தும், தொலைகாட்சிகளில் நடந்த விவாதங்களை வைத்தும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
முதலில் முருகன் உபயோகப்படுத்திய வார்த்தையே சரியா?
திருசெங்கோட்டை பற்றி கள ஆய்வு செய்து எழுதியதாக சொல்லும் அவர் அதற்கான சரித்திர சான்றுகளை அளித்திருக்கலாமே?
அப்படியே ஒரு ஊரை பற்றியும் அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் சொல்ல வேண்டும் என்றால் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே.
உன் தாய், பாட்டி, கொள்ளுபாட்டி நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரும்.இந்து முன்னநியினரோ , பா.ஜா.காவோ செய்த சதி, இன்னும் சிலர் செய்த சூழ்ச்சி என்றெல்லாம் சொன்னாலும் பெண்களை இழிவு படுத்தும் விஷயத்தை ஏன் எழுத வேண்டும் ?
இவரோ இவரை ஆதரிக்கும் மற்றவர்களோ கிருத்துவ மதத்தை பற்றி தைரியமாக எழுதுவார்களா?
ஏவாள் முதலில் தோன்றிய பெண். அவளுக்கு இரு மகன்கள்..அப்போது ஏவாள் மட்டும்தான் இந்த உலகில் உள்ள ஒரே பெண்.(விவிலியப் படி)
அப்படியாயின் அந்த மகன்களின் மனைவிகள்?
இப்படியெல்லாம் குதர்க்கமான கேள்விகள் கேட்பதை விடுத்து, கிருத்து என்ற ஒரு நல்லவர் இருந்தார். மக்களுக்கு நல்லது செய்தார்.அவர் வழியை பின்பற்றி நாமும் மக்களுக்கு நல்லதே செய்வோம் என்றுதான் செயல்பட வேண்டும்.
ஒரு இந்து நடிகரும் , ஒரு கிருத்துவ நடிகரும் முஸ்லிம் தீவிரவாதத்தை மையப் படுத்தி தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டனர்.
உண்மையில் சமூக அக்கறை இருந்தால் முஸ்லிம் மக்கள் மாநாடு நடத்தி அந்த மக்களை நல்வழிப்படுத்தலாமே.அவர்களுக்குண்டான மனவருத்தம் என்னவென்று அறிந்து, மூல காரணங்களை அலசி, தீர்வை நோக்கி செல்லலாமே.
ஏற்கனவே வெடித்துக் கொண்டிருக்கும் ஜாதி, மத எரிமலையில் ஒரு பெட்ரோல் கிணறையே கொண்டுவந்து கொட்டிவிட்டு,
எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா ,நான் எழுதக் கூடாதா,நான் படம் எடுக்கக் கூடாதா
என்றெல்லாம் ஆர்ப்பரிப்பது எந்த வகையில் சரி?
நல்லவற்றை எழுதுங்கள்.
நல்லவற்றிற்காக எழுதுங்கள்.
for the good ,
by the good ,
of the good
என்றிருக்கட்டுமே .ஜாதி மத பிரச்சினைகளை மறந்து ஒன்று பட்டு வாழ்வோமே.
அன்புடன்'
கார்த்திக் அம்மா.

1 comment:
தேவையில்லாத ஆர்பாட்டம்...
Post a Comment