About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/01/12

பெண்ணே ..மகளே :
இந்த மாதம் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது ஓசூரில் ,ஒரு தந்தையும் பெண்ணும் வண்டியில் ஏறினர் . அந்த பெண் ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பதாகவும் அங்கு அவளை இறக்கி விட்டு விடும்படியும் வேண்டினார்.அந்த பெண் என் அருகில் அமராமல் அடுத்த இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்
அப்போதே எனக்கு வித்தியாசமாக பட்டது.
ஆனால் தந்தையை பார்த்தால் பாவமாக இருந்தது.
''நீங்கள் கவலை பட வேண்டாம்.நான் பார்த்து கொள்கிறேன்''
என்று சொன்னேன். பேருந்து புறப்படும் வரை இங்கே நின்றார். அங்கே நின்றார்..
இந்த பெண்ணும் டாடா சொல்லியது. பேருந்து நகர்ந்தவுடன், அந்த பெண் நடத்துனரிடம்
''இந்த பஸ் கிருஷ்ணகிரி செல்லுமா?'' என்று கேட்டு கிருஷ்ணகிரிக்கு டிக்கெட் எடுத்தது.
பையிலிருந்து இன்னொரு அலைபேசியை எடுத்து பேசியது.
எனக்கு பொறுக்கவேயில்லை.
'' ஏம்மா  நீ சென்னை போகவில்லையா? உன் தந்தை நீ சென்னைக்கு போவதகாகவும் கல்லூரியில் இறங்கிக் கொள்ளும்படியும் சொன்னாரே?''
நான் சென்னைதான் வருகிறேன். என் நண்பி கிருஷ்ணகிரியில் வருவாள் ;'' என்று அற்புதமாக கதை சொல்லியது.
எனக்கு புரிந்து விட்டதால் ஊமையாகி விட்டேன். கிருஷ்ணகிரியில் அந்த பெண் இறங்கி வேறு ஒரு பையனுடன் சென்று விட்டாள் .
நடத்துனரும் மற்றவரும் பயங்கரமாக புலம்பினர்.
காதல் செய்யும் வயதும் அல்ல.
மிக மிக வேதனையான விஷயம் அந்த பெண்ணிற்கு எப்படி தன தந்தைக்கு துரோகம் செய்ய மனசு வந்தது. அவர் தன மகள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்.
ஏன் பெண்களே?
ஏன் மகள்களே?
நாங்களும் கல்லூரியில் படித்தோம்.எங்களுக்கு எல்லாம் ஏன் காதல் வரவில்லை?
தாய் தந்தையரின் நினைவு வந்தால் காதல் வருமா?
என்னை பெண் பார்க்க வந்தவரை
''  பிடித்திருக்கிறதா?'' என்று தாய் தந்தையர் கேட்டனர். '' ''கழுதையோ, குதிரையோ நீங்கள் சொல்பவர்க்கு கழுத்தை நீட்டுவேன் '' என்றேன்.
பிரச்சினையே 450 பொறியியல் கல்லூரிகள்தான்.எல்லோரும் என்னவோ 1100 மதிப்பெண் பெற்று பொறியியல் கல்லூரியில் இடம் பெற்ற மாதிரிதான். மிதப்புதான்.தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி ஒரு கடிதம் கூட எழுத தெரியாது. காதல் செய்ய மட்டும் தெரியும்.
அந்த தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன் கார்த்திக் அம்மா

4 comments:

Angel said...

சினிமா பார்த்து கெட்டார்கள் என்று சொல்லவும் முடியாது அக்கா .ஒரு சிலர் தங்களை பெற்றோர் பிரிக்க கூடாதென்று ரெஜிஸ்டர் மேரேஜ் செய்திருக்குங்க ..இது அலை பாயுதே ரிலீஸுக்கு பல வருட முன்னே நடந்தது :(
என்ன சொல்றதின்னு தெரில ..எல்லாத்துக்கும் அவசரம் ...!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

உண்மைதான்.அந்த படத்தை விட ''ஆதலினால் காதல் செய்வீர் '' இன்னும் தெரியாதவர்களுக்கு கூட சொல்லி கொடுக்கும்.சினிமாவே பாதி காரணம்.

கார்த்திக் அம்மா

திண்டுக்கல் தனபாலன் said...

பாவம்....

Angel said...

நான் சென்னைல இருந்தா தெரிஞ்சிருக்கும் ..இங்கே எங்க வீட்ல தமிழ் டிவி கனெக்ஷன் இல்லை .கணினியில் டவுன் லோட் செஞ்சு பார்த்தேன் உங்க பின்னூடம் பார்த்து ...உருப்பட விட மாட்டாங்க போல பிள்ளைங்கள இது இன்னும் கெடுக்கும் :(