ஒரு நடிகர்.
அவருக்கு 2000 கோடி சொத்து என்று சொல்கிறார்கள். 13 வருடங்களுக்கு முன் கார் ஏற்றி ஒருவர் இறக்கிறார்.இருவருக்கு கை , கால் முறிந்து போகிறது.இன்றும் ஊனமாக நிற்கிறார்கள்.இப்போது தீர்ப்பு வருகிறது. அவர்களுக்கு நஷ்ட ஈடு 10 லட்சம்.
தீர்ப்பு வந்த 3 மூன்றே மணி நேரத்தில் 30000 ( வெறும் 30000 மட்டுமே ) பெற்றுக் கொண்டு பிணை அளிக்கப் படுகிறது. கோலாகலமாக வீடு திரும்புகிறார்.இதற் குள் அவரின் நண்பர்கள் ,ரசிகர்கள் என்று ஒரு மாபெரும் கூட்டமே பரபரத்து நிற்கிறது. சிலர் தீக் குளிக்க முற்படுகின்றனர்..
அவர் ''turned a new leaf '' என்று மீடியாக்கள் கச்சை கட்டுகின்றனர்.
அவரின் நண்பர் இந்த ''street dogs '' சாலையில் படுத்து தூங்கினால் நாங்கள் கார் ஒட்டாமல் இருக்க முடியுமா? என்று கேட்கிறார்.
இது எல்லாம் நியாயமாக ஆகி விட்டது.
ஆனால்
முதல்வர் ஜெயலலிதா .
கொஞ்சம் மனசாட்சியுடன் நினைத்து பாருங்கள்.
அவர் ''turned a new leaf '' இல்லையா? அவர் மக்களுக்கு ஒரு ஆடு மாடாவது கொடுக்கவில்லையா? அவருடைய பணமே இல்லாமல் இருக்கட்டுமே. யாரெல்லாம் ,எந்த பிரதமர் , எந்த முதல் மந்திரி தன கைகாசை கொடுத்தார்கள்?
அவருக்கு மட்டும் 100 கோடி பிணைத்தொகை. அவரை பிணை தராமல் சிறையில் அடைத்தனர். அவருக்காக அவர் தொண்டர்கள் பரபரத்தபோது எவ்வளவு எள்ளி நகையாடினர்?
இதே நடிகர் சிறைக்கு சென்றிருந்தால் மும்பையே தீகிரையாகியிருக்கும்.எப்போதும் தமிழ் நாடென்றால் ஒரு கணக்குதான்.
லேடியா **தியா என்று வேளச்சேரியில் பேசியதுதான் தவறாகி விட்டது.வீட்டு சிறையில் அடைத்து விட்டனர்.
ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு வக்காலத்தா என்று கோபப் பட வேண்டாம்.
இவரை விட பெரிய மலை முழுங்கி மகாதேவங்கள் வெளியில் சுதந்திரமாக, தைரியமாக நடமாடுகின்றனர்.
நீதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கட்டும்.
தெருவோர ''நாய்கள்'' ஆனாலும் சரி..
100 லட்சம் கோடிக்கு உரியவராக இருந்தாலும் சரி.
மாநில, மத்திய மந்திரியாக இருந்தாலும் சரி.
நீதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கட்டும்.
அன்புடன்,
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
என்னது நீதியா...? அப்படி என்றால்...?
Post a Comment