About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/03/29

இப்போதெல்லாம் t .v போடவே (கீழே போட இல்லை ) on செய்யவே பயமாயிருக்கிறது.
ஒரு சைக்கோ உச்சஸ்தாயியில் கர்ஜிக்கிறது.
இப்போதே முதல் ஆகி விட்ட தோரணையில் அண்ணி (அண்ணனை காணவே காணோம்) ஆக்ரோஷமாக , அகங்காரமாக ஆர்ப்பரிக்கிறது.
தாங்க முடியவில்லை.
கார்த்திக் அம்மா

2016/03/27

விளம்பரமும் பெண்களும்:
ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு வீட்டிற்கு வந்து அங்கு இருக்கும் வீட்டு சோபா ,மற்ற furniture பார்த்தவுடன் ''கல்யாணம் பண்ணிக்கலாமா? ''     என்று கேட்கிறாள்.
......
அடுத்து ஒரு விளம்பரத்தில்
ஒரு பைக்கிற்காக பெண்கள் ஓடி வருவது போல் வருகிறது.(அதில் பெண்களுக்கு பதிலாக சிறுவர்கள் ஓடி வருவது போல் வைத்திருக்கலாம் )
ஆக  ஒரு பைக்கினால் ,ஒரு furniture போன்ற அல்ப விஷயத்திற்காக பெண்கள் மயங்குவார்கள் என்பது எரிச்சலாக இருக்கிறது.
......அதே போல்
சிகப்பழகு க்ரீம் ,முடி வளர எண்ணெய் ,புடவை கடை என்பது போன்ற பொருட்கள் பெண்கள் அழகால் மட்டுமே  ஜெயிக்க முடியும் என்ற போதையை பெண்களிடம் உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.இவ்வளவு பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கு இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே.
தங்கள் அழகு பற்றி     இவ்வளவு கவலை தேவையில்லையே?
இன்னொரு விளம்பரத்தில்
'' என் மகன் ஒரு ஜர்னலிஷ்ட்டை கல்யாணம் பண்ணிகிட்டான் '' ''என்கிறது ஒரு தாய்குலம்.
அது என்ன மகன் கல்யாணம் பண்ணிக் கொள்வது ?
என் மருமகள் ஒரு journalist என்று சொல்லலாமே.
பெண்களை இன்னும் உயர்வாக காட்டலாம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/03/26

ஒரு தொலைக் காட்சியில்
.......நாமக்கல் அருகே 2 பண மூட்டைகள் கிடந்தன .அவற்றை கண்ட ஒரு ஆசிரியரும் ஒரு பால்காரரும் போலிசுக்கு தகவல் கொடுக்க போலிஸ் அந்த பண மூட்டைகளை கைப்பற்றி சென்றனர் என்பதாக செய்தி சொல்லப் பட்டது .....
என் நினைவுகள் 1996 க்கு சென்றது.
அப்போது நாங்கள் மேட்டூர் (அணை ) யில் குடியிருந்தோம்.Govt வீடு.சுமார் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும். வீட்டை சுற்றி பெரிய தோட்டம்.நெடிதுயர்ந்த பெரிய பெரிய மரங்களுடன் கூடிய வீடு.
கம்பி வேலி  போட்டு கேட் போட்டிருந்தோம்.
ஒரு நாள் இரவு சுமார் 2 மணி இருக்கும். யாரோ கேட்டை gate  பயங்கரமாக தட்டும் சத்தம். வீட்டு கதவை திறந்து நானும் என் கணவரும் வெளியே வந்தோம்.
வெளியே வர இருந்த கார்த்தி+செந்திலை வீட்டிற்குள் தள்ளி வெளிப்புறமாக கதவை சாத்திக் கொண்டேன்.(நான் பயங்கர முன்னெச்சரிக்கை முத்தண்ணா ).
கேட்டிற்கு வெளியே ஒரு கிராமத்து பெண்.
இடுப்பில் ஒரு ட்ரங்கு பெட்டி.
தலை மேல் ஒரு சாக்கு பை.
'' '' அம்மா , கதவை திறந்து என்னை உள்ளே விடுங்கம்மா .என்னை கொல்ல  துரத்தி வருகிறார்கள்.காப்பாற்றுங்கள்.'' '' என்று கதறல். படி இறங்க ஆரம்பித்த கணவரை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய மரத்தை காட்டினேன். அங்கே 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
''மூட்டையில் என்ன ?'' என்றேன். அதற்கு முன்பே யூகம் செய்து விட்டேன். அது பண மூட்டை என்று.
அதே பதில்தான் கிடைத்தது.
'' அம்மா , நீ  அடுத்த பக்கத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு செல். அங்கே நிறைய பேர் இருக்கின்றனர்.காவலாளியும் இருக்கிறார்'' என்று சொல்லி விட்டு கணவரையும் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைநது கதவை தாளிட்டுக் கொண்டேன்.
HIGH LIGHT 
அடுத்த நாள் செய்தி:
ஒரு பெண்ணின் சடலம் காவிரி ஆற்றில் கிடைத்தது 
பல ரூபாய் தாள்கள் ஆற்றில் மிதந்தன .
......
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கலாமே
...
என்று நீங்கள் கேட்பீர்கள்.
அந்த பெண்ணை வீட்டில் அனுமதித்திருந்தால் நாங்களும் வெட்ட பட்டிருப்போம்.
அதற்கு முதல் நாளே ஒரு அமைச்சரின் மாட்டு கொட்டகையில் இருந்து பணம் திருடப் பட்ட விஷயம் எங்களுக்கு தெரிந்தே இருந்தது.
.....ஆக விஷயம் என்னவென்றால் எப்போதுமே சாக்கு பையில்தான் பணம் வைப்பார்கள் என்பது தெரிகிறது.
அடுத்து ....
மேட்டூரில் இந்த கொலைகள் அப்போது அதிகம்.
ஒரு நாள் இரவு 4,5 பேர் எங்கள் வீட்டின் கூரை மேல் இன்னொருவனை துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
நாங்கள் கப் சிப் .
பணமும் பதவியும் என்ன சுகத்தை கொடுக்கும் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2016/03/25

SUPER NEWS:
ஜெர்மனி நாட்டின் உர்செலின் நகரைச் சேர்ந்தவர் கிளவுடியா. இவர் சிறுவயதிலிருந்தே ஏராளமான பூனைகளை வளர்த்து வருகிறார். நிறைய பூனைகள் இருந்தாலும், கிளவுடியாவின் செல்ல பூனை 'அல்ஜோஷா'. இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அல்ஜோஷா சேட்டைக்கார பூனை. சமையல் அறையில் இருக்கும் தின்பண்டங்களை திருடி தின்றுவிட்டு, எங்காவது ஓடி ஒளிந்துக்கொள்ளும். கிளவுடியா வந்து கூப்பிடும் பட்சத்தில் தான், மீண்டும் வெளியில் வந்து தலைக்காட்டும். இப்படி இருக்க... ஓரிரு நாட்களாகவே அல்ஜோஷாவை காணவில்லை. கிளவுடியா வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டார். ஆனால் பூனை கிடைத்தபாடில்லை. நாட்கள்...வாரங்களாக மாறின. வாரங்கள்...மாதங்களாக ஓடின.

ஒரு நாள் கிளவுடியாவின் பக்கத்து வீட்டுக்காரர், தன்னுடைய குடவுனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒயின் பாட்டில்களை எடுப்பதற்காக திறந்தபோது, அங்கு அல்ஜோஷா இறந்த நிலையில் கிடந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த கிளவுடியா, அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

பள்ளத்தில் புதைப்பதற்கு முன் அல்ஜோஷாவை கையில் தூக்கி கொஞ்சியவாறு கண்ணீர் வடித்திருக்கிறார். அப்போது கையில் நெளிந்த பூனை, 'மியாவ்...மியாவ்...' என முனங்கி விட்டு, மீண்டும் இறந்தது போல கிடந்திருக்கிறது. இதனால் திடுக்கிட்டு போன கிளவுடியா உடனடியாக, கால்நடை மருத்துவரை வரவழைத்துவிட்டார்.

வந்த டாக்டரோ, 'அட.... பூனை உயிரோட தாங்க இருக்கு! ஆனால் போதை மயக்கத்திலே இருக்கு! ஓரிரு நாட்களில் போதை தெளிந்தவுடன் எழுந்துவிடும்' என்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரார் 17 காலி ஒயின் பாட்டில்களுடன் கிளவுடியாவை தேடி வந்துவிட்டார். அந்த சேட்டைக்கார பூனை குடவுனில் மாட்டிக்கொண்ட சமயத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 17 ஒயின் பாட்டில்களை ருசி பார்த்திருக்கிறது. கண் விழிப்பது... ஒயின் குடிப்பது... மீண்டும் தூங்குவது என போதையிலேயே ஒரு மாதத்தை கழித்திருக்கிறது. மருத்துவர் சொன்னப்படியே மூன்று நாட்களுக்கு பின்னர், போதை தெளிந்து எழுந்திருக்கிறது அந்த பூனை.
SUPER
SUPER
SUPER
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்

2016/03/12

தர்மபுரி பஸ் எரிப்பு :
நல்லாத்தான் சொல்றாங்கையா :
நீதி....
தீர்ப்பு ....
அட கருமமே ...
மாணவிகள் சென்ற பேருந்தின் மேல் கெரசின் ஊற்றி ..
பஸ்சின் கதவுகளை மூடி தீ வைத்து விட்டு ,அந்த உலக மகா சாதனையை தலைமைக்கு பெருமையுடன் தெரியப்படுத்தியவர்கள் கொலை குற்றவாளிகள் இல்லையாம்.
emotional செயலாம்.
தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்துள்ளார்கள்
தேவனே இவர்களை மண்ணியும் :.......
என்ற  ரீதியில் அந்த அப்பாவிகள் மூவரின் மரண தண்டனையை நிறுத்தி விட்ட their highness அவர்களுக்கு என் ********************
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/03/10

பாம்பே ஆட்டோக்களும் தலைவரும்:
மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா உறுப்பினர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாணவன் பேசாததை பேசியதாக சொல்லி நாட்டை பிளவு படுத்தும் செயல் என்றெல்லாம் சொல்லி கன்னையாவை சிறையில் அடைத்தவர்களே  தைரியம் இருந்தால் இவரை சிறையில் அடையுங்களேன் பார்க்கலாம்.
இவர் பேசுவதெல்லாம் வன்முறையை தூண்டாதா?
நாட்டில் பணமும் பதவியும் உள்ளவர்களுக்கு ஒரு நீதி 
மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
இதற்கு இன்னொரு உதாரணம்:
மல்லையாவும் ஏழை விவசாயியும்.
9000 கோடி கடன் வாங்கிய மல்லையாவின் சொத்துகள் மீது கை வைப்பார்களா போலிஸ் ?
ஆனால் இரண்டு தவணை கட்டாத விவசாயியின் ட்ராக்டரை பறிமுதல் செய்யப் போவார்களாம்.
அந்த விவசாயியை அடிப்பார்களாம் 
யாருடைய நாடு இது??????????????
கோபத்துடன்,
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா   

 

2016/03/07

சேலம்,
சேலத்தை சேர்ந்த என்ஜினீயரை இத்தாலி நாட்டு பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது.
சேலம் என்ஜினீயர் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 28). இவர் இத்தாலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இத்தாலி பேனோ நகரை சேர்ந்த எலிஸாசெஷா என்பவரை பார்த்திபன் சந்தித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை பார்த்திபன்–எலிஸாசெஷா ஆகியோரின் திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணமகளின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டினார்.
மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். சிலர் மணமக்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். திருமணத்திற்கு முந்தின நாள் நடைபெற்ற சடங்குகளும் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது.
தமிழ் கலாசாரத்தை நேசித்தார் மணமகன் பார்த்திபன் கூறும்போது, ‘‘எலிஸாசெஷாவிடம் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பற்றி பேசினேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்தேன். அப்போதே அவர் தமிழ் கலாசாரத்தை நேசித்தார். அதன்பிறகு தான் எங்களது நட்பு காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் செய்து கொண்டோம்’’ என்றார்.//   ///  //
aahaa ஆஹா 
என்ன ஒரு அழகான மணப்பெண் 
நம் உடையில் எவ்வளவு பாந்தமாக இருக்கிறார் .
இன்னொரு இத்தாலி மருமகள்.
வாழ்க.

2016/03/05

அப்பாடா :
ஒரு வழியாக தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.
கிடைத்தது நமக்கு நிம்மதி.
திரும்பிய பக்கமெல்லாம் 4 முகங்களின் படங்கள்.
வெறுப்பாய் இருந்தது.
இனி இந்த ஆட்டமெல்லாம் அடங்கும்.
குறையும்.
கார்கள் பறப்பதென்ன ?
அதெப்படி இந்த அரசியல்வாதிகளின் வேட்டி  சட்டை மட்டும் அப்படி வெள்ளை வெளேரென்று மின்னும்?
யார் கட்டும் வரிப் பணம்?
எல்லோரும் பணம் சம்பாதிக்க அவ்வளவு கஷ்டப் படும் போது இவர்களுக்கு மட்டும் எந்த மரத்தில் காய்க்கும்?
குறையட்டும் இவர்கள் எதேச்சதிகாரம்.இன்னும் 70 நாட்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
கார்த்திக் அம்மா