பாம்பே ஆட்டோக்களும் தலைவரும்:
மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா உறுப்பினர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ராஜ்
தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாணவன் பேசாததை பேசியதாக சொல்லி நாட்டை பிளவு படுத்தும் செயல் என்றெல்லாம் சொல்லி கன்னையாவை சிறையில் அடைத்தவர்களே தைரியம் இருந்தால் இவரை சிறையில் அடையுங்களேன் பார்க்கலாம்.
இவர் பேசுவதெல்லாம் வன்முறையை தூண்டாதா?
நாட்டில் பணமும் பதவியும் உள்ளவர்களுக்கு ஒரு நீதி
மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
இதற்கு இன்னொரு உதாரணம்:
மல்லையாவும் ஏழை விவசாயியும்.
9000 கோடி கடன் வாங்கிய மல்லையாவின் சொத்துகள் மீது கை வைப்பார்களா போலிஸ் ?
ஆனால் இரண்டு தவணை கட்டாத விவசாயியின் ட்ராக்டரை பறிமுதல் செய்யப் போவார்களாம்.
அந்த விவசாயியை அடிப்பார்களாம்
யாருடைய நாடு இது??????????????
கோபத்துடன்,
கலாகார்த்திக்
1 comment:
நீதியே விலை போகிறது இந்த நாட்டில்
Post a Comment