About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/01/26

பிடித்த குடியரசு தினம்:
அப்பாடா.
பல பல வருடங்களுக்கு பிறகு ஒரு தனி மனித துதியில்லாமல்
'' ''எந்தையும் யாயும் மகிழ்ந்து''' '' என்ற தேச பக்தி பாடலுக்கு கலை நிகழ்ச்சிகள்....
மனதுக்கு இதமளித்தன.
கார்த்திக் அம்மா

2017/01/18

ஒரு பொறுக்கி பேசுகிறேன் :
தமிழர்கள் பொறுக்கிகள் ??????????????
தமிழ் M .P க்கள் pussy cats .....பூனைகளாம் ??????????
தமிழ் மாணவர்கள் பொறுக்கிகளாம் ??????????
சொல்வது ஒரு சாமி.சுப்பிரமணிய சாமி என்ற தமிழர்.
தமிழர்கள் பொறுக்கிகள்   என்றால் 
இவரும் ஒரு பொறுக்கிதானே.

2017/01/16

இன்று ஒரு ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தி:
Almost 70000 birds killed to make skies of NYC safer.
வானில் பறக்கும் விமானங்களுக்கு இடையூறாக இருந்ததாக காரணம் சொல்லப் பட்டு 70000 பறவைகள் கொல்லப் பட்டுள்ளன. இவையெல்லாம் PETA  கண்ணுக்கு தெரியவில்லையா??????????????

2017/01/14

கொண்டாடாத பொங்கல் :
not celebrating pongal :
நிலம் காய்ந்து விட்டது.300 தென்னை மரங்கள் கருகி விட்டன.
ஒரு மணி நெல் கூட விளையவில்லை.
வேதனை.
இனி  எப்போதாவது மழை பெய்யுமா?
விளையுமா?
வருத்தத்தில்  இங்கு துக்க நாளாகத்தான் சென்றது.
வரும் வருடம் நல்ல வருடமாக இருக்குமா?
எதிர் பார்ப்புடனும்
நம்பிக்கையுடனும்
கார்த்திக் அம்மா

2017/01/10

கமல்..சிவாஜி ..சிகரெட்
பல நாட்களாக சிவாஜியை பார்த்தாலே எனக்கு பிடிக்காது.எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில்தான் விடை கிடைத்தது. நான் சினிமா பார்க்க  ஆரம்பித்த போது நடித்த படங்களில் சிவாஜி ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் மது கோப்பையுடனுமே காட்சி தருவார்.
வசந்த மாளிகை,பாசமலர் ,போன்ற படங்கள் .
காதல் காட்சிகளிலும் அவர் நடிப்பு எனக்கு பிடிக்கவில்லை.
இப்போது அவருடைய படங்களை பார்க்கும் போதுதான் அவர் நடிப்பு பற்றி தெரிகிறது.
First impression  is the best impression என்பார்களே அதுதான் .
எனக்கு சினிமா அறிவு வெகு வெகு குறைவு.
ஆனால் கமல் சொல்வதின் உண்மை உறைக்கிறது.
கார்த்திக் அம்மா

2017/01/06

நடிகர் தனுஷ் FORD MUSTANG கார் வாங்கியதாக செய்தி படித்தேன்.
கார்த்தி 2002 ல் U  .S  சென்ற போது international  driving லைசென்ஸ்  எடுத்துக் கொண்டு சென்று அங்கு Texas லிருந்து நியூயார்க்  வரை அவன் நண்பர்களுடன் காரிலேயே சென்று வந்தான்.
2002 ல்.
அப்போது மஞ்சள் நிற கார்.
அதுதான் top most  trendy கலர் என்று தெரியாமல் கார்த்தியை கலாய்த்து விட்டேன்.
அம்மாவின் அறியாமை கண்டும் தலை கணம் இல்லாமல் மௌனமாய் இருந்தது அந்த தெய்வம்.
2004ல் மீண்டும் U .S  சென்ற பொது கருப்பு ஒன்று, சிகப்பு ஒன்று என்று அம்மாவிற்காக கலர் மாற்றி வண்டி எடுத்து ஓட்டி அந்த போட்டோ கொண்டு வந்து காட்டி என்னை மகிழ்வித்த தெய்வம்.மன வேதனையுடன்
கார்த்திக்  அம்மா