அஸ்வினும் கார்த்திக்கும் :
...... ....... //அஸ்வின் நண்பர் ஒருவர் கூறுகையில், சிறப்பாக கார் ஓட்டுபவர் அஸ்வின்.
சாலையை பார்த்தாலே எப்படி காரை ஓட்ட வேண்டும் என தீர்மானித்துவிடுவார்.
அவர் விபத்தில் சிக்கியதை நம்ப முடியவில்லை. இரவு எனக்கு தொலைபேசியில்
அஸ்வின் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்தது.
லேசான காயமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், அஸ்வினும் அவரின் மனைவியும்,
கருகி இறந்துவிட்டதாக அதிகாலை 3.30 மணிக்கு தகவல் கிடைத்ததும் மிகுந்த
ஷாக் ஆகிவிட்டோம் என்றார்.
Ashwin friends, can't believe the accident
அஸ்வினின் தோழி ஒருவர் கூறுகையில், திறமையான கார் டிரைவரான அஸ்வின்
விபத்தில் சிக்கியதாக அறிந்ததும் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க
தெரிவித்தார்// ...... ......
கார்த்திக்கிற்கு 2005ம் ஆண்டு பைக் விபத்து....
அவன் என்னை விட்டு விண்ணுலகம் சென்ற போது கார்த்திக்கின் நண்பர்கள் இதையேதான் சொன்னார்கள்.
கார்த்திக் திறமையான ட்ரைவர் .2000 த்தில் fiero வாங்கி கொடுத்தோம்.
U .S சென்ற போதும் (இரு முறையும் ) அவனுக்கு பிடித்த ford MUSTANG கார் எடுத்து texas to நியூயார்க் வரை கார் ஓட்டியவன் .
மிகுந்த திறமை இருந்தும் ,
ஆசைகள்
கனவுகள்
பல இருந்தும் என் கணவரின் மறைவால் அத்தனை கனவுகளையும் மனதில் புதைத்து விட்டு குடும்ப பொறுப்பை ஏற்று வேலையில் DELL ல் சேர்ந்தான்.
எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் வண்டி ஓட்டுபவன்.
காலை 8.50க்கு வீட்டை விட்டு புறப்பட்டவன்
(என்னுடன் 8.30க்கு இட்லி சாப்பிட்டவன்)
இல்லை என்றவுடன் நான் துடித்த துடிப்பு.
ஆனால் கார்த்திக் உடலில் காயங்களோ ,ரத்த போக்கோ இல்லை.
போட்ட ஜீன்ஸ் அப்படியே இருக்க
தூங்கிக் கொண்டிருப்பவன் போல் இருந்தான்.
இதையே என்னால் தாங்க முடியவில்லையே.
அஸ்வினின் தாய் உள்ளம் என்ன பாடு படும்?????????????
தன மகன் தீயில் எப்படி துடித்திருப்பான் என்று நினைக்கும் போது ......
அப்பப்பா ...நெஞ்சம் பதறுகிறது.
எவ்வளவு ஆசையாக
எவ்வளவு செல்லமாக வளர்த்திருப்பார்கள் ....
கார்த்திக்கையும் அப்படித்தான் பார்த்து பார்த்து வளர்த்தேன்.
செல்லமோ செல்லம்.
முதல் விபத்தும் அதுதான்.கடைசி விபத்தும் அதுதான்.
அஸ்வின் தாய்க்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்??????????
அவரின் துக்கம் என்று குறையும்??????????
கார்த்திக் அம்மா
1 comment:
உங்கள் மனம் அல்லல்படும் என்று நினைத்தேன் அம்மா...
Post a Comment