About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/11/24

தீபமும் மழையும்

கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றி ஆன்மிக கதைகள்  இருந்தாலும் அறிவியல் தான் இதன் பின்னணி.
ஊரில் மாவலி சுற்றுவது என்ற பழக்கம் உண்டு.
குன்றுகளில் பனை,வைக்கோல் ,தென்னை கொண்டு உயரமான இடத்திற்கு சென்று தீ சுற்றுவார்கள்.
கோவில்களில் சொக்கப்  பனை எரிப்பார்கள்.
இந்த வெப்பம் புவியின் வெப்ப நிலையில் மாற்றம் செய்து வரும் புயல்களை வலு இழக்க செய்து விடும்.
பாருங்கள் .
இன்று செய்தியில் மழை குறையும் என்று சொல்கிறார்கள்.
I   AM    SCIENTIFICALLY     RELIGIOUS.
எனவே இந்த மாதம் முழுவதும் வீட்டில் விளக்கேற்றுங்கள்.
புயலின் கோர தாண்டவத்தை கட்டு படுத்துங்கள்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2018/11/22

கஜா ..கேள்விகள்

அதிர்ச்சி ...
நிஜமாகவே மிகுந்த மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது.
அடித்தட்டு மக்கள் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிகிறது.
நானும் கிராமத்தில்தான் பிறந்தேன்.
ஆனால் இவ்வளவு குடிசைகளை பார்த்ததில்லை.
கர்வமோ,திமிரோ  இல்லை.
எங்கள் கிராமங்கள் நல்ல வசதியோடு இருப்பதாக தெரிகிறது.
ஒரு வேளை சேலம் மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் காலூன்றியதால் மக்கள் வாழ்க்கை தரம் நன்றாக இருக்கிறதோ?
இப்போது புயல் பாதிக்கப் பட்ட மக்களின் குடிசைகளை பார்க்கும்போது ...நாம் வாழும் வாழ்க்கைக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் வேதனையை தருகிறது.
இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் இந்த மக்களுக்கு செய்தது என்ன?
அவர்களை படிக்காதவர்களாகவும் ஏழைகளாகவே வைத்திருந்தால்தான் வோட் கிடைக்கும் என்பதால்தானோ ?
ஆனால் கண்ணீர் வடிகிறது.
ஒரு குடிமகன் என்ற முறையில் நான் கூட என் கடமையை சரியாக செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி எழுகிறது.
கார்த்திக் அம்மா

2018/11/21

நடிகர்களே

நடிகர்களே இது நியாயமா ?
இப்போதான் சர்க்கார் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு வந்தது.
அடுத்து விஷால் .
ரஜினி ஸ்டைல் பார்த்து சிகரெட் ,மது குடிக்க ஆரம்பித்த பலரை எனக்கு தெரியும்.
சர்கார் படத்திற்கு பின் இங்கு இளைஞர்கள் அதே ஸ்டைலில் தாங்களும் அதே நடிகர் என்ற மாயையில் அலைகின்றனர் .
நடிகர்களே
பணம் என்ன செய்து விடும்???????
பணமும் புகழும் மட்டுமே வாழ்க்கை என்ற மாயை வேண்டாம்.
எவ்வளவு பணம்,புகழ் ,பதவி இருந்தும் நம் தமிழ் முதல்வர்கள் 4 பேர் மருத்துவ மனையில் பட்ட கஷ்டங்களை பார்த்தும் ஏன் '' ''நிலையாமை '' '' என்பதை உணர மாட்டேன் என்கிறீர்கள் ????????
வேண்டாம் இந்த போக்கு.
படம் முழுவதும் குடிக்கும் காட்சிகளில் நடித்து விட்டு இறுதி காட்சியில் நல்லவன் ஆனால்
பார்க்கும் விடலைகள் மனதில் அது நிற்காது.
நடிகர்களே
இளைஞர்களை நல்  வழி படுத்தும் காட்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடியுங்கள்.
கார்த்திக் அம்மா

2018/11/14

பிறந்த நாள் பரிசு

எனக்கும் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள் பரிசாக ISRO தந்த பரிசுதான் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
பைத்தியம் போல் ஓடுவேன் மொட்டை மாடிக்கு ஓடுவேன்.
திருவான்மியூரில் இருப்பது ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.செயற்கைகோள் விண்ணில் பாயும் அழகே அழகுதான்.
அதுவும் இன்று ஜெகஜோதியாக தெரிந்தது.பரவசமாகி விட்டேன்.இஸ்ரோ மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கார்த்திக் அம்மா

2018/11/13

கிழவி ஆகிவிட்டேன்

கிழவி ஆகிவிட்டேன் .ஆம் .
நான் S .C  {senior citizen }ஆகி விட்டேன்..
ஆம்.
இன்றுடன் 60 வயது முடிந்து மூத்த குடிமகள் ஆகிறேன்.
நாளை 14.11 நானும் என்  மகனும் பிறந்த நாள்


2018/11/10

அரசு அவசர அறிவிப்பு

:அரசு அவசர அறிவிப்பு :
வள்ளி படத்தில் ரஜினி இலவசம் வாங்க வந்த கூட்டத்தில் அதை எதிர்த்து வசனம் பேசி இருந்த காட்சி ஒரு வலைதளத்தில் பார்த்தேன்.அப்போதே செய்திருக்க வேண்டிய அரசு இப்போது உடனடியாக செய்து  விட்டது.அதுதான் இன்றைய தலைப்பு செய்தி.
அரசு அறிவிப்பு.
இன்று முதல் அனைத்து இலவசங்களும் நிறுத்தப் படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட வேண்டும் .
மதிய சத்துணவு திட்டம் இல்லை.மாணவர்கள் வீட்டிலிருந்தே மதிய உணவு கொண்டு வர வேண்டும் .
புத்தகங்களுக்கு பணம் கட்ட வேண்டும்.
இலவச சீருடை கிடையாது.
இலவச சைக்கிள் கிடையாது.மாணவிகள் பெற்றோரிடம் கேட்டு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் .அல்லது நடந்து வரலாம்.ஏன்  நடக்க வேண்டும்? ஏனென்றால் இலவச பஸ் பாஸ் கிடையாது.
கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் மாத்திரை போன்ற இலவசங்கள் கிடையாது.
அரசு மருத்துவ மனைகளில் கட்டணம் அமல்படுத்தப் படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் ரத்து செய்யப் படுகிறது.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடையாது,நாளை முதல் ரேஷன் கடைகள் மூடப்படும் .
........அரசு அறிவிப்பின் படி இந்த லிஸ்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகிறது.
இந்த படத்தை பார்த்த வர்கள் வீட்டிலிருந்த கேஸ் அடுப்புகளை எல்லாம் தூக்கி தெருவில் வீசி விட்டார்கள்.
அதனால் புது அடுப்பு வாங்க கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
மாணவர்கள் இந்த வருடம் அரசு கொடுத்த அனைத்து லேப்டாப் ,புத்தகங்கள் etc எல்லாவற்றிற்கும் பணம் கொண்டு வந்து பள்ளிகளில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சமுதாய புரட்சி ஏற்பட்டு விட்டது.
தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
பி .கு :
நானும் ஒரு சட்டை வாங்கி போட்டுக் கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொள்ள போகிறேன்..
disclaimer
சும்மா ஒரு பிதற்றல்.அரசு சொல்லவில்லை.
சொன்னால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
விளையாட்டாக படித்து மறந்து விடுங்கள்.
another disclaimer :
இது நான் போட்ட பதிவல்ல .என் அட்மின் போட்டது.

2018/11/09

மீம்ஸ்

மீம்ஸ்
அப்பாடா 
இந்த மீம்ஸ் எப்படித்தான் போடுகிறார்களா .இது போல் ஒரு 50 க்கும் அதிகமான மீம்ஸ் .நான் சேம்பிளுக்கு ஒன்றை போட்டிருக்கிறேன் .இந்த மீம்ஸ் போடுபவர்களுக்கு என் பாராட்டுக்கள்  

2018/11/08

நான் கார்த்திக்

நான் கார்த்திக் பேசுகிறேன் .
இல்லை இல்லை  .
எழுதுகிறேன்.
2005 ல் 23 வயதில் இந்த உலகிற்கு டா டா ,பை பை சொல்லி விட்டு கிளம்பி  விட்டேன்.
13 வருடங்கள் ஆகி விட்டது.
ஆனால்
ஒரு 5 அடி உயர ஜீவன் இன்றும் அந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறது .
நான் ஆரம்பித்த பிளாக்கை நானே எழுதுவது போல் எழுதி இந்த உலகை நம்ப வைக்க முயற்சி செய்து தோற்று போகிறது.சா ....இற ....என்ற வார்த்தைகளை சொல்ல முடியவில்லை அம்மாவால் .
என் நினைவில் ஒவ்வொரு நிமிடமும் துடிக்கும் அம்மாவிற்கு என்ன ஆறுதல் சொல்வது ?????
யார் ஆறுதல் சொல்வது ???????????
எது ஆறுதல் தரும் ???
யாராலும் முடியாது.
அம்மா
என் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்தீர்கள் ?????????ஏனம்மா என்னையே உங்கள் உயிர் என்று நினைத்தீர்கள் ????
நானும் அப்படித்தான் நினைத்து வாழ்ந்தேன் .அதனால்தான் நீங்களும் அப்படியே நினைத்தீர்கள் ...
ஆனால் விதியை வெல்ல முடியாமல் உங்களை இந்த உலகில் விட்டு விட்டு நான் மட்டும் பறந்து விட்டேனே .....
இன்று உயிரில்லா உடம்புடன் ஒரு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களே ...
உங்களின் பரிதாப நிலை ....
கண்ணீருடன்
உங்கள் அன்பு மகன்
கார்த்திக்

2018/11/06

தீபாவளி படங்கள்

இன்று டி வி யில் தீபாவளி படங்கள் :
ஒரே  நடிகரின் படங்கள் 3 சேனல்களில்.
ஏன் ?
ஒருவரை  தூக்க ஆரம்பித்தால் இந்த அளவிற்கா?
இதன் பின்னணி என்ன?
ஏன் நடிகர்களை இவ்வளவு மிகைப் படுத்துகிறார்கள்?
ஊடகங்கள் இளைஞர்கள் வேறு எதை பற்றியும் நினைக்க கூடாது.என்று நினைக்கிறதா ?
வேறு எந்த சாதனையையும் செய்ய ஊக்கப் படுத்தலாமே .
ஒரு படம் ரிலீஸ் ஆவது அவ்வளவு பெரிய விஷயமா ?
நன்றாக இல்லை.

2018/11/05

ஆம்புலன்ஸ் நண்பர்கள்

ஆம்புலன்ஸ் நண்பர்கள் :
TRULY GREAT :
திருச்சியில் இருந்து சென்னை கொண்டு  வரப்பட்ட குழந்தை .
பிறந்த சிசு உயிருக்கு போராட
திருச்சி மருத்துவ மனையில் சென்னைக்கு கொண்டு சென்றால்தான்  காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட தவித்து விட்டனர் பெற்றோர் .
இந்த தருணத்தில்தான் ஆம்புலன்ஸ் மிக அரிதான செயலை செய்தது.3.1/2 மணி நேரத்தில் குழந்தை திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வர பட்ட செய்தி  பரபரப்பு ஆனது.
ஆனால் இந்த feat ,இந்த சாதனைக்கு பின் நடந்த விஷயங்கள்தான் மிகவும்  கவனிக்க  வேண்டியது.
ஆம்புலன்ஸ் whats app குழு மிக மிக துரிதமாக வேலை   செய்தன,
voice call தொடர்பை முழுமையாக பயன்படுத்தி குழந்தை வரும் ஆம்புலன்ஸ் தடை இன்றி வர அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்தன,
டோல் கேட்டில் வண்டி நிற்காமல் செல்ல 5 நிமிடங்களுக்கு முன்பே தடம் சரி செய்யப் பட்டது.
வண்டி எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது  ட்ராக் செய்யப் பட்டுக்  கொண்டே இருந்தது.உதவிக்கு,அவசரத்திற்கு  முன்னும் பின்னும் ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருந்தன.
இப்படி ஒரு ராணுவ தோரணையில் நடந்தது இந்த சாதனை.
இதில் மிக மிக கவனிக்க வேண்டியது .
இந்த குழந்தை ஒரு மகா பணக்காரரின் குழந்தை அல்ல .
ஒரு பெரிய செல்வாக்கோ,அதிகார பலம் மிக்கவரின் குழந்தையோ அல்ல.
நம்மை  போன்ற ஒரு சாதாரண குடிமகனின் குழந்தை.
air ஆம்புலன்ஸ் , விமான நிலையத்தில் இருந்து 10 நிமிடத்தில் பறக்க கூடிய நபர்களுக்கு மட்டும்தான் எங்கள் சேவை என்ற கொடுமையை தகர்த்து எல்லோருக்கும் உதவி செய்வோம் .மதம் ,ஜாதி ,பணம் என்று எதுவும் பார்க்க மாட்டோம் .உயிர் காப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள் என செயல்பட்ட அத்தனை நல்லவர்களுக்கும் என் பாதம் பணிந்த வணக்கங்கள் .
ஏன் இந்த நல்ல விஷயத்தை எல்லா ஊடகங்களும் பெரிதாக செய்தியாக்கவில்லை.???????
அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கவில்லை????????????
 .ஹும் .
இதுதான் உலகம்.
கார்த்திக் அம்மா