About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/03/15

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
காலன்   (எமன் ) வர முடியாது என்பது இதன் பொருள்.சத்தியவான் உயிரை பறிக்க வந்த எமனிடம் சாவித்திரி பேசிப் பேசியே அவனிடம் வரம் பெற்றுகணவனை காப்பாற்றுகிறாள் என்பது கதை.
 எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
ஒரு கற்புக்கரசி கண்களுக்கு மட்டும் எமன்   தெரிவார் என்றும் அவருடன் பேச முடியும் என்பதாக நம்ப வைக்கப் படுகிறது.என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்கணவனை இழந்துள்ளனர்?அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
உண்மையாக இந்த பங்குனி மாத பிறப்பிற்கும் இந்த விரதத்திற்கும் என்ன உண்மை அறிவியல் காரணம் (அப்படி ஏதாவது இருந்தால் ) சொல்லுங்கள்.கணவன் இல்லாவிட்டால் நீ அவ்வளவுதான்.என்பது போன்ற எண்ணங்களை பெண்கள் மனதில் உருவேற்றி அடிமைப் படுத்திய கொடுமையை களைய வேண்டிய பெண்ணியம்தான் தேவை.பெண்ணால் தனியாக சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்..
காலன் அடையா நோன்பு என்பதுதான் திரிந்து காரடையான் நோன்பாக ஆகி விட்டது.
நாமும் பொருள் புரியாமலே பல பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.
 கார்த்திக் அம்மா
இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அவசர பட்டு பெண்கள் மாட்டிக் கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்றுதான் முந்தைய .  பதிவில் சொல்லியிருந்தேன்.
வேகநரி 
i never advocated '' ''' பெண்ணடிமைத்தனம்'' ''.நானும் கணவனை  இழந்த பின் வாழ்க்கையில் சாதித்தவள்தான். எத்தனையோ போராட்டங்களை கடந்து வெற்றி   பெற்றவள். 
கார்த்தியின் இழப்புதான் என் ஒரே தோல்வி.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  
 

4 comments:

வேகநரி said...

நல்லதொரு பதிவு.

raajsree lkcmb said...

வாவ் சூப்பர்! இதை போன்ற பகுத்தறிவான கருத்துக்களை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். ஆண்களே எப்போதும் எமக்கு பகுத்தறிவூட்ட முடியுமா? உங்களை போன்ற தாய்மையும் நேர்மையும் உள்ள பெண்களும் பகுத்தறிவை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

raajsree lkcmb said...

அம்மா, உங்கள் மகனின் இழப்பு தோல்வியில்லை அது இழப்பு. அதிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

raajsree lkcmb said...

//இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அவசர பட்டு பெண்கள் மாட்டிக் கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் //

இதே தான் என்னுடைய கருத்தும். என்ன செய்வது எல்லாருக்கும் ஒரே அளவு முதிர்ச்சி இருப்பதில்லை. அவர்கள் தான் எச்சரிக்கை உணர்வு இல்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தான் ஒரே வழி.