அசுரன்
மதுரை: "அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.. கூட படிக்கிற
ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி செய்யறாங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.. வேற
இடத்துக்கு என்னை மாத்து" என்று தந்தையிடம் அடிக்கடி கேட்ட 9-ம் வகுப்பு
மாணவனை சக மாணவர்கள் இன்று பிளேடு வைத்து கிழித்து அறுத்துள்ளனர்.போதுமா ?????????
விஷத்தை பரப்பி விட்டீர்களா?????
நான் சேலம் மாவட்டம் .
என் தாத்தா ஊர் தலைவர்.
ஜமீன்தார்,ஊர்கவுண்டர் ,நாட்டாமை ...என எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
அவருக்கு அடுத்து என் பெரியப்பா தலைவர்.
இப்போது என் தம்பி ஊர் தலைவர்.
இன்றும் ஒரு பிரச்சினை என்றால் அவரிடம்தான் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் , ஆனால் ,....
என் விவரம் தெரிந்த காலத்தில் இருந்து
இப்போதைய சினிமாக்களில் காட்டப் படுவது போன்ற காட்சிகள் நிகழ்வுகள் ஒன்று கூட நடந்ததில்லை.
எல்லோரும் செருப்பு அணிந்துதான் நடந்தனர்.
ஒன்றே ஒன்று .வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
அந்த தடையும் கூட என் அம்மா வீட்டில் இருந்ததில்லை.
ஒரு வேளை ..என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததாலோ என்னவோ.
சில சமயங்களில் சமையல் கூட செய்வார்கள்.
சிறு வயதில் எங்களுக்கு அந்த பேதம் எல்லாம் தெரியாது.
அவர்களை '' அண்ணா '' என்றுதான் கூப்பிடுவோம்.
சில சிறு சிறு தவறுகள் வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
ஆனால் அந்த ஊரில் இருந்த தலித்துகள் அனைவரும் படித்து நல்ல வேலை யில் இருக்கின்றனர்.
என் அப்பாதான் தலைமை ஆசிரியர்.
என் அப்பாதான் தலைமை ஆசிரியர்.
ஒருவர் விடாமல் படிக்க வைத்தார்.
ஹரிஜன் விடுதி உண்டு.எல்லோரும் கண்டிப்பாக அங்கு வந்து தங்கி படிக்க வேண்டும்.
நடு இரவில் ரகசியமாக சென்று மாணவர்களை கண்காணிப்பார்.
அப்படி அவர்களை எல்லோரையும் முன்னேற்றினார்.
அதுவும் அல்லாமல் மற்ற ஊர்களிலும் கூட இவ்வளவு கொடுமைகளை நான் பார்த்ததில்லை.
தென் மாவட்டங்களில் இருக்கிறதோ என்னவோ.
......சரி....அப்படியே இருந்தாலும் 1968 களில் நடந்ததை இப்போது காட்டி மக்களை உசுப்பேத்துவது ஏன் ????
தெரியாதவர்களுக்கு கூட தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன???????
சென்னை மாணவர்கள் எத்தனை பேருக்கு தன் பக்கத்து மாணவன் என்ன ஜாதி என்று தெரியும்?
WHO CARES என்பதுதான் அவர்கள் போக்கு.
அதை விட சாதிக்க எங்களுக்கு நிறைய இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு 4 படங்கள் வந்தபின் எல்லோருக்கும் ஜாதி உணர்வு 100% அதிமாகி விட்டது.
இல்லையென்றால் ஒரு பள்ளி மாணவன் பிளேடால் கீறுவானா?? அதை விட அந்த ஜாதி தலைவர்கள்.கலப்பு திருமணம் செய் என்ற உபதேசத்தால் சீரழிந்த கூட்டம்.
இந்த படம் சொன்ன விஷயத்தை 1980 முதல் நான் என் மாணவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.அரசு தரும் சலுகைகளை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
படியுங்கள்.அதுதான் உங்களை உயரத்திற்கு கொண்டு போகும் என்று சொல்வேன்.
எல்லா சினிமாக்கார்களுக்கும் என் வேண்டுகோள் ஒன்றுதான்.
சிறு புகையை ஊதி எரிமலை ஆக்காதீர்கள்.
உங்கள் சுய நலத்திற்காக ,சுய லாபத்திற்காக மக்களை மாக்கள் (விலங்குகள் )ஆக்காதீர்கள்.
1 comment:
வேதனையும் கண்டனத்துக்குரியதுமான சம்பவங்கள் :( உண்மையில் 90 களில் படித்த எனக்கும் ஒன்றுமே தெரியாது .எல்லாருடனும் சமமாய் பழகினோம் அரசுப்பள்ளியில் தான் படித்தேன் .சிலர் ஸ்கொலர்ஷிப்புக்கு போகும்போது கூட எதற்கு என்றும் கூட யோசிக்கவில்லை நாங்கள் WHO CARES நிலைதான் அப்போவும் .இப்போ அனைவர் குறிப்பா வளரும் மாணவ சமுதாயத்தில் அவர்கள் மனதிலும் விஷத்தை விதைப்பது :( மிகவும் வேதனைக்குரிய விஷயம் .இந்த சினிமாக்காரங்களுக்கு நிஜமாவே பொதுநலம் எளியோர் மேல் அன்பு பாசம் இருந்தா உண்மையாவே தைரியம் இருந்தா சம்பந்தப்பட்ட இடத்தில நேரடியா போராட சொல்லுங்க .இப்படி படங்களை எடுத்து தேவையற்ற விஷயங்களை ஏத்தி விடுவதே இவர்கள் வேலையா போச்சு
======================================================கார்த்திக் அம்மா நலமா இருக்கீங்களா .ரொம்ப நாளாச்சு .உங்கபதிவில் பேசி .மகள் யூனிவர்சிட்டி போனதால் கொஞ்சம் காலம் பதிவெழுதலை .
Post a Comment