நீலகிரியில் சங்கர் என்ற காட்டு யானை 3 பேரை கொன்று விட்டது.( ஒரு சேனலில் கொலை செய்தது )என்று போட்டார்கள்.
அந்த யானையை வன துறையினர் விரட்ட போக அது கேரளா எல்லைக்குள் சென்று விட்டான் சங்கர். சேனலின் பில்ட் அப் .
அந்த சங்கர் என்ற கொலைகாரன் மறுபடியும் நீலகிரிக்கு வந்து விட்டான்.
எப்படி தெரியுமா ?
தன காதலிகள் இருவருடன்.
காதலிகள் (சங்கர் என்று பெயர் வைத்தவர்கள் காதலிகளுக்கு பெயர் வைக்கவில்லை.பெண் என்றால் அவ்வளவு கேவலமா ).
பொறுங்கள் .இனிமேல் வைப்பார்கள்.
சரி .இப்போது என்ன நடக்கிறது?
காதலிகள் சங்கரின் இரு பக்கமும் அரணாக நின்று கொண்டு ஒரு நிமிடம் கூட நகர மாட்டேன் என்கிறார்களாம்.
எப்படி மயக்க ஊசி போடுவது ,எப்படி சங்கரை பிடிப்பது என்று வன துறை மண் டையை உடைத்து கொள்கிறதாம்.
இதெல்லாம் நான் சொல்லலிங்கோ .சேனல் சொன்னதுங்கோ .
கொடுத்து வைத்த சங்கர்.
ரூம் போட்டு யோசிப்பாங்களோ
என்று சொல்வது போல் சங்கரும் ரூம் போட்டு யோசித்திருப்பானோ ????????
அல்லது I .T WING ஏதாவது இருக்குமோ ?
புலனாய்வில் இதெல்லாம் தெரிய வரலாம்.
2 comments:
ஊ - டகம்...
கமலுக்கு அண்ணன்
Post a Comment