கல்வி .பாட குறைப்பு .
Disclaimer : நான் எந்த கட்சியும் சேராதவள் .யார் சார்பாகவும் பேசவில்லை.
ஒரு ஆசிரியை என்ற உணர்வு ரத்தத்தில் ஊறி விட்டதால் ..இந்த பதிவு.
தற்போது இருக்கும் பாட திட்டம் மிகவும் எளிதானது..
அதிலேயே பாதி பாடம்தான் நடத்த படுகிறது.அப்படியிருக்க எந்த போட்டி தேர்விற்கும் மாணவனால் தயாராக முடிவதில்லை..
இன்னும் அதிகமான பாடங்கள் சேர்க்க பட வேண்டும்.
ஒரு நல்ல மாணவன் இந்த பாட திட்டத்தை 3 just 3 மாதங்களில் படித்து முடித்து விடுவான்.
ஒரு ஆசிரியையாக (ஆங்கிலம் ...என்னடா எப்போது பார்த்தாலும் ஆங்கில ஆசிரியை என்றே சொல்கிறேன் என்றால் ...தமிழ் நாடு அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரு subject மட்டுமே நடத்துவார்.
கெமிஸ்ட்ரி என்றால் அது மட்டுமே.
Math என்றால் கணித பாடம் மட்டுமே .
மாணவர்கள் எங்கள் bio teacher ,எகனாமிக்ஸ் tr என்றே சொல்வார்கள்.)
நான் என் மாணவர்களிடம் சொல்வேன் .தேர்விற்கு முதல் நாள் மட்டுமே ஆங்கிலம் படி.வகுப்பை நன்றாக கவனி .80% மார்க் வாங்கலாம்.
தகுதி மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் ,தமிழ் சேர்க்க படுவதில்லை.அதனால் அதில் 80% மார்க் போதும் .
அதற்கான பாடங்களுக்கு 3மாதம் போதும்.Grammar முக்கியம் .spoken English ம் சிலபஸ்சில் உண்டு .அதை மட்டும் அவன் நன்றாக படிக்க வேண்டும்.மற்ற படி lessons ,poems மனதை பக்குவப்படுத்தும் கருவியே .அந்த summary மனப் பாடம் செய்வதையே முழு நேர கடமையாக செய்ய வைப்பார்கள்.
when he goes for competitive exams he fails miserably .
SO PLEASE INCREASE SYLLABUS .பாடங்களை கடினமாக்குங்கள் .ஓடும் குதிரையை கட்டி போடாமல் ஓட விடுங்கள்.
1 comment:
ஆதங்கம் புரிகிறது...
Post a Comment