About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/03/30

Dog menace and Peacocks

 நாய்கள் ...மயில்கள் :

விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் .

'' '' நல்ல பாலிசி '' ''

ஒத்து கொள்கிறேன் .

ஆனால் .....

ஆனால் ......

விலங்குகளும் நம்மை துன்புறுத்தக் கூடாதே.

தெருவில் நடக்கவே மக்கள் பயப் படுகிறார்கள்.

ஒரு சிறுவனை 10 நாய்கள் கடித்து குதறுகின்றன.

ஒரு பெண்ணை ஓட ஓட துரத்துகிறது .

மிக மிக உயர்ந்த உள்ளம் உள்ள வள்ளல் பெருமக்கள் நாய்களுக்கு சோறு வைப்பதை ஒரு பெருமைக்கே செய்கிறார்கள் .

அவ்வளவு கருணை உள்ளம்உள்ள இந்த மாமனிதர்கள் அந்த நாய்களை அவர்கள் வீட்டிற்கு கூட்டி சென்று வைத்து பார்த்துக் கொள்ளலாமே.

இவர்கள் வைக்கும் கறி சோறை தின்று விட்டு தினவெடுத்து அலையும் நாய்கள் யாரை கடிக்கலாம் என்று வெறியுடன் ,திமிருடன் அலைகின்றன.

நாய்கள்தான் இப்படி என்றால் 

மயில்கள் 

விவசாயிகள் புலம்புகிறார்கள்.

10 மயில் இருந்தால் போதும் .4 ஏக்கர் நிலத்தில் உள்ள தானியங்களை தின்று தீர்த்து விடும்.

பாவ பட்ட விவசாயிகள் ஏதாவது செய்ய போய்விட்டால் அவ்வளவுதான் .விலங்கியல் ஆர்வலர்கள் படையெடுத்து வந்து விடுகிறார்கள்.

ஊருக்குள் கரடி, புலி, சிங்கம் ,யானை என்று எல்லோரும் நடமாடுகிறார்கள்.

கேட்டால் அவர்கள் இடத்தை நாம் பறித்துக் கொண்டோமாம்.

அவைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

2023/03/19

Why Temples ?

 கோவில்களின் உண்மை.

நம் முன்னோர்கள் , நம் அரசர்கள் ஏன் கோவில் கட்டினர் ?????

சாமி கும்பிட இல்லவே இல்லை.

கோவில்களின் அமைப்பை பார்த்தாலே புரியும்.

அது ஒரு கோட்டை போல.

கோவிலுக்குள் தான்ய கிடங்கு , நகைகள், பணம் போன்ற அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைத்தனர்.

போர் காலங்களில் மக்கள் கோவிலுக்குள் தஞ்சம் அடைவர்.

கோவில் கதவுகள் அடைக்க படும்.

மக்கள் பாதுகாக்க படுவர்.

இரண்டாவது

 மற்ற காலங்களில் உழைக்கும் வர்க்கம் வேலை முடிந்து (இப்போது போல் டி .வி எல்லாம் இல்லாத காரணத்தினால் ) கோவில் மணடபத்தில் ஆடல், பாடல்,மக்களுக்கான நீதி கதைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்  பட்டு அவர்கள் ரிலாக்ஸ் செய்யும் இடமாக அமைந்தது.

அதோடு சேர்ந்து கொண்டதுதான் கடவுள் வழிபாடு.

2023/03/08

Women's day

 why  should we celebrate women 's day ?

SHOULD WE ?????????????

நாம் கொண்டாட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல சரித்திரத்தை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர் வழக்க படி பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது.

அவர்கள் வேலைக்கு போக கூடாது.

சம்பாதிக்க கூடாது.

அவர்களுக்கு என்று தனி பெயர் கூட கிடையாது.

Mrs .henry 

Mrs  .david 

பிள்ளை பெறுவது  மட்டுமே அவள் வேலை.

10 குழந்தைகள் பிறந்தால் 8 இறந்து விடும்.

அதன் துக்கம் கருதி கருப்பு நிற உடையில்தான் பாதி காலத்தை கழிப்பர்.

அடுத்த குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன ஆரம்பித்தது விடுவர் .

இப்படித்தான் இருந்தது.மிக பெரிய போராட்டத்திற்கு பிறகே அந்த பெண்கள் ஒவ்வொரு உரிமையாக பெற  தொடங்கினர் .

ஆனால்   நம் நாட்டில் அப்படி அல்ல. புராண காலத்தில் இருந்தே பெண்களுக்கு சம உரிமை இருந்தது.தனக்கு வர போகும் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை ( சுயம்வரம்) இருந்தது.காந்தர்வ கல்யாணம் என்ற வழக்கம் இருந்தது.

( இன்றைய living  together ).

நெசவு ,உழவு,என வேலைகளில் சம பங்கு இருந்தது.

கணவனை இழந்தாலும் கம்பிரமாக வாழ்ந்தனர்.

பொட்டு அழிப்பது,வெள்ளை உடை என்பதெல்லாம் மிக மிக பிற்காலத்தில் வந்தது.என் பாட்டிகள் எல்லாம் நிற புடவைகள் ,நகைகள் போட்டுக் கொண்டு மங்களமாக இருந்தனர் .

வட நாட்டில் ஒரு குலத்தில் ,கணவனை இழந்த பெண்ணிற்கு பேரன் தாலி கட்டும் வழக்கம் உண்டு. ஏன் எனில் அவள் விதவை கோலத்திற்கு அர்த்தமில்லாமல் போய் அவள் சுமங்கலி போல் வாழவே.

அரசன் வரும்போது பட்டத்து அரசியும் உடன் வருவதே வழக்கம்.

இப்படி எல்லா விதத்திலும் பெண்களை சிறப்பாக போற்றிய நம் நாட்டிற்கு இந்த ஆங்கில நாட்டு பழக்கம் தேவையே இல்லை.

எதையும் ஆங்கில நாட்டை காப்பியடித்தே பழகி விட்டோம்.

எல்லா நாளும் மகளிர் நாளே.

வாழ்க அனைவரும் ,

2023/03/06

Holi festival

 ஹோலி பண்டிகை .

மதம் என்று சொல்லுங்கள்.இல்லை என்ன பெயரில் சொன்னாலும் சொல்லுங்கள்.

நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய அறிவியல் வாழ்வியல் முறைதான் பண்டிகைகள்.

இன்று ஹோலி .

என்ன காரணம்.?

இன்று சென்னையிலும் பெங்களுரூவிலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன.

ஒரு வைரஸ் காய்ச்சல்.

என்ன காரணம் ? என்ன வைரஸ்? மருத்துவ துறை ஆராய்ச்சி செய்கிறது.

ஆனால் நம் முன்னோர்கள் இது போன்ற காய்ச்சலை தடுக்கத்தான் மாரியம்மன் பண்டிகை என்று செய்து ஊரெங்கும் வேப்பிலையும் மஞ்சளும் கலந்த தண்ணீரை  எல்லோருக்கும் ஊற்றினார்கள்.

வடநாட்டில் இந்த முறை  சற்று மாறுபட்டு கலர் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

கலர் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான்.

வைரஸ் காரணியை விரட்டி அடிப்பது.

காரணம் காரியம் மறைந்து ஒரு கோலாகல கொண்டாட்டமாகவே மாறி விட்டது.

அதற்கு ஒரு சொதப்பலான பக்தி(  ?????? )கதை.

பாமர மக்களை மூளை சலவை செய்வது.

இப்போது எல்லா மக்களும் மூளை சலவையை  விரும்பி செய்து கொள்கிறார்கள்.

மதத்தின் உண்மை அறிவியல் பின்னணி மறைந்து ( அல்லது  மறைக்கப்பட்டு )

எல்லாம் வெறும் ஆடம்பரம் ,ஆரவாரம் , பகட்டு என்று மாறி விட்டது.

இன்னும் நிறைய எழுதலாம் .ஆனால் என்ன பலன் ??????????????

2023/03/01

Maaza ad and my father-in-law

 மாஷா குளிர் பான விளம்பரத்தில் வரும் அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் என் நினைவில் தோன்றும் காட்சி  இது.

நாங்கள் மேட்டூரில் இருந்த போது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.அப்போது கோகோ ,போன்ற குளிர் பானங்கள் பாட்டிலில் வரும்.

உறவினர்கள் ,விருந்தாளிகள் யார் வந்தாலும் ஆளுக்கொரு பாட்டில் ஸ்டராவுடன் கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு முறை வந்தவர்களுக்கு கொடுக்கும் போது மாமனாருக்கும் ஒரு பாட்டில் கொடுத்தோம்.அதை அவர் அவ்வளவு ரசித்து குடித்தார்.விருந்தினர்கள் கிளம்ப bye சொல்லும்போதும் நின்று கொண்டே அந்த பாட்டிலோடே இருந்தார்.

எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

வயதானவர் என்றாலும் இப்படி ஆசை இருக்கும் என்று நினைக்கவே இல்லை.வீட்டில் குழந்தைகள் நினைத்த நேரத்தில் பிரிட்ஜை திறந்து எடுத்து குடிக்கும் போது பார்த்து கொண்டுதானே இருந்திருப்பார்.ஆசை இருந்திருக்கும்.அவரை கவனிக்க தவறி விட்டோம்.

அவருக்கு கொடுக்க கூடாது என்றில்லை.

தோன்றவில்லை.

அவருக்கு நல்ல உணவு தர வேண்டும். மருந்து சரியாக தர வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்த நான் ,இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறேன்.அமிதாப்பை பார்க்கும் போதெல்லாம் மாமனார் நினைவு வந்து குற்ற உணர்ச்சியும் வருகிறது.

அவராவது கேட்டிருக்கலாம்.கேட்க சங்கட பட்டிருக்கலாம்..

ஐயா என்னை மன்னித்து விடுங்கள்.