About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/03/16

 கற்பனை  காட்சி  1
வாழ்வில் சிறு வயதிலிருந்தே எனக்கு கற்பனைகள் அதிகம்.இந்தியா-பாகிஸ்தான் -போரின் போது நான் ஒருத்தியே
சென்று 1000 பேரை சுட்டு வீழ்த்துவதாக கற்பனை செய்வேன்.அப்போது எனக்கு 10 வயதிருக்கலாம்.
இணைந்த கைகள் படம் வந்த போது என் கற்பனை அங்கே அப்படியே படமாகியிருந்தது கண்டு என்னைப் போல்
இன்னும் சில பைத்தியங்களும் இருக்கின்றன என்று நினைத்து சிரித்துக் கொண்டேன்.
இப்போது
கற்பனையே வாழ்வாகிப் போனது.
காட்சி 1
கார்த்தி, தன் மகளை பள்ளியிலிருந்து வண்டியில் , வீட்டிற்கு அழைத்து வருகிறான்.அவர்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன் நான்.வண்டியிலிருந்து என்னை நோக்கி நடந்து வருகிறாள் என் பேத்தி.
வண்டியை நிறுத்திவிட்டு வரும் கார்த்திக்,என் பேத்தியை பின்புறமிருந்து அப்படியே தூக்கி என் கையில்
தருகிறான்.கயை காலை உதறிக் ஜொண்டு அழ ஆரம்பிக்கிறாள்.நான் சிரித்துக் கொண்டே
சொல்கிறேன், "அவளே நடந்து வருவாளே,நீ ஏன் ராஜா தூக்கினாய்?"
கார்த்திக்,[மகளிடம்]:கோபமா? சரி சரி.வா.அங்கேயே கொண்டு விடுகிறேன்.நீயே நடந்து போ"
என்கிறான்..அவளை அப்படியே தூக்கிக் கொண்டுபோய் அவள் நின்ற இடத்தில்
விடுகிறான்.கோபத்துடன் அவனை அடிக்கும் என் பேத்தியை தூக்கிக் கொஞ்சிக் கொண்டே வந்து என்
கையில் கொடுக்கிறான்.பரவசத்துடன் அவனை பார்த்துக் கொண்டே என் பேத்தியை கையில் வாங்கிக்
கொள்கிறேன்.

காட்சி..2
என் பேத்தி lawnல் சைக்கிள் ஓட்டுகிறாள். "ப்பாத்தி, ஓடி வா.வந்து என்னை பிடித்துக் கொள்"
என்கிறாள்.
நான்:"ஐயோ, எனக்கே முட்டி வலி.என்னால் எப்படி ஓட முடியும்?..கார்த்தி ராஜா இங்கே வா..வந்து
இவளை பிடித்துக் கொள்"
பேத்தி: "ஊஹும்.பாத்திதான் பிடித்துக் கொள்ள வேண்டும்."
நான்: "முதலில் பாட்டி என்று சொல்.உங்கப்பன் மழலையே பேச மாட்டான்.நீ என்னவென்றால் ஒரே
மழலை"
பேத்தி: "அது யார் எங்கப்பன்?"
நான்: "ஆங்,இது மட்டும் தெளிவ்வகக் கேள்.இப்போது மழலை எங்கே போனது?"
அதற்குள் கார்த்தி அங்கு வந்துவிட,
"ஆ , இதுதான் எங்கப்பன்" என்கிறாள் என் பேத்தி
நான்: "இது என் மகன்"
பேத்தி அழுதுகொண்டே, "இது எங்க அப்பா"
கார்த்தி அவளை தூக்கிக் கொண்டு, "ஆமாம்.உன் அப்பாதான்" என்கிறான்.கை மட்டும் ரகசியமாக
என் பக்கம் வர, ரகசியமாக அந்தக் கையை முத்தமிடுகிறேன்.
கவனித்துவிட்ட என் பேத்தி,
"பாட்டி கிட்ட கையை கொடுகிறீங்க.பாட்டி முத்தம் கொடுக்கிறாங்க"
என்று கலாய்த்துக் கொண்டே தானும் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள்.
மூன்று பேர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடுகிற

No comments: