நான் ரசித்த கவிதை
எனக்கு ஒரு s.m.s வந்தது."எனக்கு சுவாசம் தந்தவளுக்கு நான் எழுதிய முதல் கவிதை "அம்மா "என் மனதின் எண்ண ஓட்டங்கள் தொடர்ந்தன.இந்த கவிதையை எழுதியவரின் உணர்வுகளை பாராட்டும் அதே நேரத்தில்,இந்த கவிதையை அந்த தாய் எவ்வளவு ரசித்திருப்பாள்?எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்? நான் மிகவும் ரசித்த கவிதையை சொல்லட்டுமா?என் செல்ல மகன் கார்த்தியின் கவிதைதான் அது. நான் அவனை கொஞ்சி மகிழும்போது,உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை முத்தமிட்டு மகிழ்வேன். கார்த்தி ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே பேச தொடங்கிவிட்டான்.[இதை நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள்.அது வேறு விஷயம்] அவனுக்கு ஒரு 9 மாதமிருக்கும்.அவனை முத்தமிட்டுகொஞ்சிக் கொண்டிருக்கும் போது மெலிதாக கடித்தும் விட்டேன். "அம்மா கச்சிச்சி" [கடித்து விட்டது] என்றானே பார்க்கலாம்.அப்பப்பா,இன்று நினைத்தாலும் இனிக்கிற கவிதை அது...எத்தனை கம்பர்,,எத்தனை பாரதியார்?என் மகன் கவிதை--அதுவே கவிதை--அதுதான் கவிதை
No comments:
Post a Comment