சொன்னானோ சொல்ல நினைத்தானோ???
இன்று வெள்ளிகிழமை. எந்த நிமிடமும் மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் கேள்வி....கடைசி நிமிடத்தில் என் மகன் சொல்லியது என்ன....அல்லது சொல்ல நினைத்தது என்ன? "இந்த அம்மாவை விட்டு போகப் போகிறோமே,, நான் இல்லாமல் இந்த அம்மா எப்படி வாழ்வாள்? எப்படி தவிப்பாள்? " என்று துடித்தானோ?
ஆதவன்,கதிரவன் பெயர் கொண்ட நண்பர் ஒருவர் "அவன் நிறைய செய்திகளை சொல்லிவிட்டு சென்றுள்ளான்"ஆனால் அதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் நான் சொல்லும் நிபந்தனைகளுக்கு கட்டுப் பட வேண்டும்" என்று கூறினார்.
ஒரு தாயின் தவிப்பை புரிந்தவர்கள் யாராவது இருந்தால், உங்களுக்கு யாருக்காவது உண்மை தெரிந்திருந்தால்,, சொல்லலாம் என்று நினைத்தால் சொல்லுங்களேன்.
அவன் என்னை விட்டு பிரிந்துவிட்டான். உண்மையான அன்பு காட்ட ஆளில்லாத அனாதையாகி விட்டேன் என்ற உண்மை மனதில அறைந்த அந்த வினாடியிலிருந்து அடிக்க ஆரம்பித்த நெருப்பு அலை ஓய்வது எப்போது?
"என்னை உன்னுடன் அழைத்து சென்று விடு" என்று கதறிக் கொண்டிருக்கும் இந்த தாயின் வேண்டுதல் என் கண்மணி கார்த்திக்கிற்கு கேட்கவில்லையா..கேட்டும் செய்யும் வகை அறியாது தவித்துக் கொண்டிருக்கிறானோ??
யாராவது சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா
4 comments:
kaarthimma, just think about his brother...karthi is with you..he will neva leave u...hugs
Kaarthimma,PLEASE THINK HE IS IN HEAVEN.He is looking after you from HEAVEN. Please take care of his brother. ALL WILL be OK.
Best regards,
Ravi
dear ravi,
please reveal your identity. if not in blog,,please mail to ..kalakarthik1411@gmail.com
anbudan
karthik amma
தூயா,
your mails and comments comfort me always...
Post a Comment