செல்வி ஜெயலலிதா தான் பேசும்போதெல்லாம் " "எனது ஆட்சியில்,, நான் ஆணையிட்டேன் " " என்ற வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்..இது எவ்வளவு தவறான விஷயம்?
ஒரு கோர்ட்டில் கூட
நீதிபதி, "நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறுவதில்லை. "இந்த கோர்ட் ஆணையிடுகிறது " என்றுதான் கூறுகிறார். வேறு யாரும் இப்படி பேசுவதும் இல்லை. " எங்கள் ஆட்சியில் " என்றுதான் சொல்கிறார்கள்.
இந்த அம்மையார் ஆட்சியில் இருந்த போது, "அரசு உழியர்களுக்கு அகவிலைப் படி வழங்க "நான் " உத்தரவிடுகிறேன்''''' என்றுதான் சொல்வார். என்னவோ அவருடைய தாத்தா , பாட்டி சம்பாதித்த சொத்திலிருந்து கொடுப்பது போலத்தான் இருக்கும்.அதுவும் போனால் போகிறதென்று பிச்சை போடுவது போல!!!!
அரசு அலுவருக்கு உரித்தான ,உரிமையான ஒன்றை , அரசு கருவூலத்திலிருந்துதாந் தருகிறோம் என்ற நினைவே அவருக்கு வராதுதான் விசித்திரம். "தான்" என்ற சொல்லுக்கு என்ன மகிமை? யாராவது அவருக்கு புரிய வைப்பார்களா?
அட, அதற்கென்ன,
அதற்கும் ஒரு ஹோமம் வளர்த்தி, தமிழ் நாட்டு தாய்க் குலங்களை தீபம் ஏற்ற சொன்னால் முடிந்தது பிரச்சினை.
ஐயோ ,தமிழ் நாடே !!!!!!!!!!!!
2 comments:
Koda Nadea!!! :D
dear jeevan,
SUPERB..REAL PUNCH.
Post a Comment