இதற்கு முதல் பதிவில்தான் தெரியாத்தனமாக அவரை புகழ்ந்து விட்டேன்.
அதற்காக இப்படியா கவிழ்ப்பார்?
எல்லாம் இந்த இலங்கை விவகாரம்தான்.
ராஜபக்ஷே [இலங்கை அதிபர்] தி..மு.க தலைவரையும் , அ.தி.மு.க தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
அவரின் உள்நோக்கம் என்னவாக வேண்டுமாக இருந்தாலும் இருக்கட்டும்.
இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா? உடனடியாக போய் பேசித்தான் பார்ப்போமே .
அதை விட்டு ''நான் அவர்களுக்கு எதிரி. கலைஞர்தான் புலிகளுக்கு நண்பர் ''
என்றெல்லாம் பேசி தன் பொறுப்பை எப்படி தட்டிக் கழிக்கிறார்?
நாம் என்ன பிரபாகரனை இலங்கை அதிபராக்க சொன்னோமா?
அல்லது பிரபாகரனுடன் பேசி சண்டையை நிறுத்த சொன்னோமா?
நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களுக்கு சட்ட சபையில் உரிய
பிரதிநித்துவமும், அமைச்சரவையிலும் இடம் அளிக்க வேண்டும். போன்ற உரிமைகளை பேசி பெறலாமே.
அதை விட்டு 'யார் எக்கேடு கேட்டால் என்ன? என் கொட நாடு உண்டு. தோழி உண்டு. படகு சவாரி உண்டு.ரோஜா தோட்டம் உண்டு.' என்பது சரியல்ல.
இவருடைய துணிவும், இவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் எனக்கு இவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படித்தியிருந்தது. ஆனால், இப்படி பேசுவது , பழி வாங்குவது, மூச்சுக்கு முன்னூறு முறை 'மைனாரிடி அரசு' என்று சொல்வதும் ,
அவருடைய மதிப்பை குறைக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக தன் முடிவை மாற்றிக் கொண்டு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு நீங்களும் மக்கள் நலம் நாடும் ஒரு தலைவிதான் என்று நிரூபியுங்கள்.
கார்த்திக் +அம்மா
3 comments:
நன்றி அம்மா.சாதாரண பொதுமக்கள் புரிந்து வேதனைப்படும் அளவிற்கு தமிழ்நாட்டு அரசியலில் யாருமே ஈழத்து மக்களின் துன்பத்தை கணக்கில் எடுப்பவர்களாக இல்லையே!கருணாநிதி உட்பட....!
அமைதியும், சுமுகமான உறவும் இல்லாத பட்சத்தில் பிரச்ச-
னை இருந்துக்கொண்டு தான் இருக்கும். எப்படி அமெரிக்க-
ரவில் ஒரு கருப்பர் ஜனாதிபதி அனதைப்போல், இலங்கை-
யிலும் ஒரு தமிழர் ஜனாதிபதிக்கு நிற்க முடியும் என்ற நிலை
வேண்டும்.
உண்மையான அக்கறை உடையவராக இருந்தால், வாய்ப்பு
கிடைக்கும் பொழுது அதை பயன்படுத்தி திர்வு காணவே-
ண்டும், அதை விட்டுட்டு உண்ணாவிரதம், சாலை மறியல்-
னு இங்கையே போராட்டம் பன்றதுல பயன்இல்ல. go ahead leaders to express your thoughts,interest and rights.
I think the decisions on LTTE issue by Jayalalitha is correct.. not to interfere in other countries' internal affairs. And the thing we have to appreciate is, she didn't pick up this opportunity for political gains, which an average indian politician would have done.
Post a Comment