About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2010/05/04

காலாவதி & கலாவதி
already in a post I have told you about Senthil's Tamil proficiency. And here's another example.
இப்போதுதான் காலாவதி மருந்து பற்றி தான் எங்கும் பேச்சு. தமிழ் தொலைக் காட்சிகள் இதையே திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
செந்திலும் இதைப் பார்த்து சற்று குழம்பியது போல் தோன்றியது எனக்கு.
இரண்டு நாட்கள் கழித்து அவன் கேட்டான் .
""ஏன் எல்லோரும் காலாவதி என்று தவறாகவே எழுதுகிறார்கள் ?""
ஒன்றும் புரியவில்லையா ?
என் பெயர் ' கலாவதி' யை ""காலாவதி "' என்று ஒரு முறை தவறாக எழுதியிருந்தான். நான் விகடமாக என்னை காலாவதியாக்கி விட்டாய் என்றேன். அது அவனுக்கு புரியவில்லை என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
இப்போதுதான் புரிந்தது ,,காலாவதி என்று ஒரு வார்த்தை இருப்பதே அவனுக்கு தெரியவில்லை என்று. ஆஹா ,எல்லோரும் நம்மைப் போலவே எழுத்துப் பிழை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு தான் கேட்டான். then I explained to him that they were two different words with different meaning .
And the cool guy cooly said '' I am far far better than many. Many don't know as much as I know .I am an original Thamizhan [ பச்சை தமிழன் ]
Great! Isn't it?
dizzily
karthik & amma

1 comment:

தருமி said...

அப்பப்போ நம்ம பிள்ளைகள் ஆங்கில வார்த்தை சொல்லிட்டு இதுக்கு தமிழில் என்ன என்று கேட்கும்போது நம்ம தலையில குட்டிக்கிறதா .. இல்ல அவங்க தலையில் குட்டுறதான்னு ஒரு சந்தேகம் வருது. இல்ல ..?