About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/03/30

Your Baby Can Read

there is an oft repeated advertisement in the T.V channels ''Your baby can read ''.
When ever i see this ad ,I go back to the golden days of being with Karthik and I recall , how as an infant itself ,he was interested in reading.
My father wanted karthik to study in Montford School, Yercaud. But I was not willing to leave him in a hostel at so early an age. I told my father that I myself will teach him.
But no one need teach this '' PRODIGY '' , but I enjoyed the gifted privilege of teaching him.
Then itself [as you can see in the photo , when Karthik was not even six month old ] we went to a Russian bookfair and bought story books which were really interesting .And Karthik will never be satisfied even if i read the stories 100 times.
when we admitted him in L.K.G he was just 2@1/2 years old and he could tell the names of
1]months,
2]flowers,
3]animals,
4]days,
5]numbers @what not.
No mother would have taught a son like this. I used to teach him the difference between
plant,
creeper,
thorn,
bush,
tree
and in the same way
upstream,
downstream,
river,
perennial river,
seasonal river
like that and so many things. But it's all just an ignition of the switch. The great Horse picked up a heavenly speed and the voracious reading and the mammoth knowledge he had.....
I cannot boast saying that 'i taught him' because it needs a super brain to leran everything.
All in a minute became nothing. Leaving me living in a futile desert,in the scorching sun, longing for the rain drops which my Karthik only can give.
Saaaadly,
karthik amma

2011/03/29

மக்களின் நம்பிக்கைகள் ..மூட நம்பிக்கைகள்
வாழ்வில் நம்பிக்கை தேவைதான். அது தன்னம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளாக இருக்க கூடாது.
ஒரு டி.வி சேனலில் ஒரு ஜோஷ்யர் தொலைபேசியின் வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு நிகழ்ச்சி.ஜோஷ்யம் ஒரு அறிவியல் பிரிவு.அதைப் பற்றி நிறைய பேச வேண்டும். அதை அப்புறம் பார்க்கலாம்.
இப்போது அந்த ஜோஷ்யர் விஷயத்திற்கு வருவோம்.
ஒரு தந்தை சொல்கிறார், '' என் மகள் பற்றி கேட்க வேண்டும். அவளுக்கு நான்கு வயது ஆகிறது. ''...அடுத்த நொடியில் ஜோஷ்யர் சொல்கிறார். '' உங்கள் மகள் எதிர்காலம் மிக நன்றாக உள்ளது. அவள் நிச்சயம் ஒரு ஐ ..எ .எஸ் . கலெக்டராக வருவாள் '' என்கிறார். காமெடியே அந்த தந்தையின் பதில்தான்..
''அப்படியா! !, நிச்சயமாகவா ? ஆனால், நான்கு வயதாகியும், என் மகளுக்கு பேச்சு வரவில்லை.மூளை செயல்பாடும் சரியாக இல்லையே ''
இதைப் போல் பல கபட பதில்களை கேட்டும் மக்கள் திருந்தவில்லையே.
நானே கார்த்தியின் ஜாதகத்தை [ அவன் மறைவிற்கு பிறகு ] பலரிடம் காட்டியுள்ளேன். ஆ , இந்த ஜாதகம் பிரமாதமாக இருக்கிறது. நூறு வயது என்பார்கள் .வெறுப்பாக இருக்கும்.
அதைப் போலவே, நன்கு,நன்கு படித்தவர்கள் கூட நம்பும் அடுத்த விஷயம், ''குருஜி, மகான்கள் ''.
அவர்களின் மகிமைகள், நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றி அவர்கள் உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியாது. நாங்கள் மேட்டூரில் வசித்த போது, ஒரு பொறியாளர் வீட்டில் இருந்த சாய்பாபாவின் படத்தில் இருந்து தேன் கொட்டியதாக பரபரப்பு. நானும் சொன்னேன், ''எனக்கும் தேன் பிடிக்கும். நான் வரும்போது, உங்கள் பாபாவை எனக்கும் தேன் தரக் சொல்லுங்கள் '' என்றேன்.
அந்த பாபா ஸ்டாலினுக்கும் ,துரைமுருகனுக்கு மட்டும்தான் தங்க மோதிரம் வரவழைத்து தருவாராம். ஏன் ? எத்தனையோ ஏழைப் பெண்கள் இல்லையா? அவர்களுக்கெல்லாம் தர வேண்டியதுதானே ? எத்தனையோ அற்புதங்கள் செய்து எவ்வளவோ பேருடைய உயிரைக் காப்பாற்றியவர் அவர் என்று சொல்கிறார்கள்.
இப்போது வந்த செய்தி: : :
'' ''// டல் நலக்குறைவு காரணமாக சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது சாயிபாபா குணமடைந்து வருவதாகவும், கவலைப்பட ஏதுமில்லை என்றும், விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.'' '' //
இந்த செய்திக்கு அவர் பக்தர்கள் சொல்லும் பதில் என்ன ?
கார்த்திக்+ அம்மா

2011/03/28

தேர்தல் :

இலவசங்கள் ,
சொல்ல முடியவில்லை.
பிள்ளை பெறுவது ஒன்றுதான் மக்களின் வேலை. ஒரு வேளை அதையும் அவர்களே செய்து கொடுத்து விடுவார்களோ என்னவோ ?
தி.மு.க சொன்னால் அது நடைமுறைக்கு சாத்தியமாம். அதுவே 'அந்த பொம்பிளை ' சொன்னால் , செயல்படுத்த முடியாதாம் .....
சொல்பவர் யார் ? தன மகன் எம். பி. ஆவதற்காக எதையும் செய்ய தயாராயிருக்கும் ஒரு மருத்துவர்தான். இவருடைய அரசியல் நாகரிகம் எப்படிப் பட்டது? '' அந்த பொம்பிளை சொல்லுது '' என்ன பேச்சு இது? ஒரு பெண் என்றால் இப்படியெல்லாம் பேசலாமா ?
அது சரி....நீரா ராதியா ,பூங்கோதை டேப் விவகாரம் பற்றி கேட்ட போது,'' ரெண்டு பொம்பிளைக்க பேசிக்கிறாங்க, அதுல ஒன்னு 'நாடார் பொம்பிளை' ..'' என்று பதில் அளித்தவரிடம்தானே கூட்டு. அவர் மகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். இவர் மகனுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்.!!
ஜெ : இவர் பிறப்பின் பூர்விகத்தையும், தாய் ,தந்தை பற்றியும் ஒரு டி.வி விளக்கமாக விவாதித்துக் கொண்டிருந்தது. தேவையா? இப்போது அவருடைய நிலைப்பாடு என்ன , என்ன செய்யப் போகிறார், என்பது பற்றி மட்டுமே பேசலாமே? என்னவோ அவர் மட்டும்தான் தவறான வாழ்க்கை வாழ்ந்தது போலவும் , மற்ற தலைவர்கள் எல்லாம் உத்தமர் போலவும், ....என்ன பேச்சு இது, ஒரு ஆண் என்றால் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் , ஒரு பெண் என்றால் ....
மக்களும் புத்திசாலி ஆகி விட்டார்கள். டாஸ்மாக் கடையில் இலவசம் என்று எந்த கட்சியையாவது அறிவிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம் .
பணம், பணம் ,பணம், ...இந்தியா ஏழை நாடென்று யாரோ சொன்னதாக கேள்வி !!!
கார்த்திக்+அம்மா

2011/03/01

http://vijayanagar.blogspot.com/2008_05_01_archive.html
வி .ஆர் .எஸ் வாங்கி கொண்டு வீட்டில் உட்கார்ந்தது தப்பாகி விட்டது. டி.வி. பார்ப்பது அதிகமாகி விட்டது. அதனால் மனதுக்கு தோன்றிய சில கருத்துகள்:
*இறந்தவர்களுக்கு கருணைத் தொகை அறிவிப்பதும், அதை அந்த உடல் மேலேயே அந்த பணத்தை கொடுப்பதும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும், ....தேவையா இந்த பப்ளிசிட்டி ? உண்மையிலேயே அந்த பாதிக்கப் பட்டவருக்கு உதவி செய்வதானால் அந்த குழந்தைகளை தங்கள் பொறுப்பில் எடுத்து படிக்க வைத்து என்று என்ன என்னவோ செய்யலாம்.
* அனு ஹாசன் நடத்தும் 'கண்ணாடி' நிகழ்ச்சியில், மலம் அல்லும் கொடுமை பற்றி விவாதம் நடந்தது. உண்மையிலேயே மனம் கனத்து போயிற்று.இதற்கு ஒரு மாற்று இயந்திரம் கண்டு பிடிக்கவில்லையா அல்லது கண்டு பிடிக்க யாருக்கும் விருப்பமில்லையா ?....அதில் ஒரு பெண் தன கணவர் அந்த செப்டிக் டேங்கில் இறங்கி வேலை செய்யும் போது விஷ வாயு தாக்கி இறந்து விட்டார், ஆனால், இது வரை எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை என்று அழுதார். இவர்களுகேல்லாம், முதல்வர், அரசு என்று யாருமே ஒரு லட்சம் என்றெல்லாம் தந்து போட்டோ எடுத்தக் கொள்ள மாட்டார்களா?
*''பஸ் டே ''
எங்கிருந்து கண்டு பிடித்தார்கள் இந்த கொண்டாட்டங்களை? என்ன அக்கிரமமான ஆட்டம் ?.....அதில் மாணவர்கள் கேட்கும் கேள்விகள்தான் இன்னும் வேதனை. 'எங்கள் கல்லூரியில் எந்த விழாவுமே நடப்பதில்லை'' ...ஏன் ?இலக்கிய மன்றங்கள், கல்லூரி ஆண்டு விழா இதெல்லாம் என்ன ஆயிற்று?
இன்னொரு மாணவன் கேட்கிறான்: நாங்கள் ''ஏழைக் கல்லூரி'' அதனால்தான் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் ''.....நிங்களே ஏழைகள் ஆயிற்றே ? அப்படியானால் , இன்னும் அதிக பொறுப்புடன் அல்லவா படிக்க வேண்டும்?அப்படியே கொண்டாடினாலும் உயிருக்கு ஆபத்தில்ல்லாத வகையில், மற்றவர்களுக்கு துன்பம் தராத வகையில் கொண்டாடுங்களேன். பெரியவர்களை கிண்டல் செய்வது, மாணவிகளிடம் வம்பு செய்வது ,போக்குவரத்திற்கு இடையூறு செய்வது, அலுவலகம் செல்பவர்களை செல்லவிடாமல் ரோட்டின் குறுக்கே ஆடுவது இதெல்லாம் சரியா ? இதற்கெல்லாம் உங்கள் ஏழ்மைதான் காரணமா? கிண்டி அண்ணா பல்கலை கூட சராசரி வருமானமுள்ளவர்கள் கல்லூரிதான். அங்கெல்லாம் இப்படித்தான் நடக்கிறதா?...படிக்க வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கொண்டாட்டங்கள் இரண்டாம் பட்சம்தான்.
ஊதும் சங்கை ஊதி விட்டேன். காதில் விழுமா?
கார்த்திக்+அம்மா
actually, dharumi sir has written about what i wanted to write.

ஆம். நான் எழுத நினைத்த பல விஷயங்களை அவர் எழுதி விட்டார். அந்த ''ப்ரு '' காபிக்கான விளம்பரம் பற்றி நானும் அதைத்தான் நினைத்தேன்.
அதே போல் டி.வி.யில் வரும் நிறைய்ய்ய்ய நடிகைகள் அப்படித்தான் [ சுமாரான அழகுதான். ] ஆனால் அவர்கள் தாங்கள்தான் ஏதோ உலக அழகிகள் போல் சிலிர்த்துக் கொள்வதும், அவர்களிடம் தொலைபேசியில் பேசுபவர்கள் ''ஜொள்ளுவதும் '' அப்பப்பா தாங்க முடிவதில்லை.
தருமி சார்,
நல்ல வேளை, நீங்கள் இன்னும் ''சமையல்' பற்றிய நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். கொடுமை..கொடுமை. சமைக்க வருபவர்கள் பத்து P.hd செய்த ஆராய்ச்சியாளர்கள் போல் இதில் ' A' இதில் 'B' இதில் 'Z' vitamin என்று விளக்குவதும், ' oil must be boiled ', ADD SPICES ' என்று பச்சை மிளகாய் , மிளகாய்த்தூள் சேர்ப்பதும், அஆனியன், என்று நீட்டி முழக்குவதும்,சமைத்த பின் '''DECORATE '' செய்வதும் என்று காமெடி, செய்தால், பக்கத்திலிருக்கும், முதுகன்னியகிய ஒரு நாற்பது வயது ''இளம்பெண் '' இதுதான் கத்தரிக்காயா, இதுதான் 'டொமேடோ'வா [தக்காளிக்கு தமிழ் தெரியாதாம் அவர்களுக்கு ] என்று கீச்சுக் குரலில் கத்திக் கொண்டு 'எனக்கு சமைக்க தெரியாது' டேஸ்ட் பார்க்க மட்டும்தான் தெரியும் தங்கள் அரச குலப் பிறப்பையும் ஆங்கில அறிவையும் அள்ளித் தெளித்து பார்ப்பவர்களுக்கு இது வரை ரத்த அழுத்தம் இல்லைஎன்றால் அதை வரச் செய்து புண்ணியம் கட்டிக் கொள்வார்கள்.
எனது அடுத்த சந்தேகம், இந்த நிகழ்ச்சிகளுக்கு கூட இப்படியொரு காமெடியன் தேவைதானா?
அது போகட்டும். ஹோட்டல்களில் ருசி பார்க்கும் நிகழச்சிகளில் பெண்கள்தான் கீக், கீச் என்று கத்துகிறார்களே ...ஆண்கள் யாரும் ருசி பார்க்க மாட்டார்களா? பாவம்.. அவர்களை விட்டு விடுவோம்.

நீ பெரிய அழகியா , மற்றவர்களை எப்படி குறை சொல்லப் போயிற்று என்று யாரும் கேட்காதீர்கள் ..நான் என்னை அழகு என்று நினைத்துக் கொள்ளவுமில்லை , இப்படி நிகழ்ச்சிகளுக்கு வரவுமில்லை. அழகில்லாதவர்களோ ,அழகுள்ளவர்களோ ,யார் வேண்டுமானாலும் வாருங்கள், ஆனால், சற்று அடக்கி வாசியுங்கள்.
karthik+amma