மக்களின் நம்பிக்கைகள் ..மூட நம்பிக்கைகள்
வாழ்வில் நம்பிக்கை தேவைதான். அது தன்னம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மூட நம்பிக்கைகளாக இருக்க கூடாது.
ஒரு டி.வி சேனலில் ஒரு ஜோஷ்யர் தொலைபேசியின் வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு நிகழ்ச்சி.ஜோஷ்யம் ஒரு அறிவியல் பிரிவு.அதைப் பற்றி நிறைய பேச வேண்டும். அதை அப்புறம் பார்க்கலாம்.
இப்போது அந்த ஜோஷ்யர் விஷயத்திற்கு வருவோம்.
ஒரு தந்தை சொல்கிறார், '' என் மகள் பற்றி கேட்க வேண்டும். அவளுக்கு நான்கு வயது ஆகிறது. ''...அடுத்த நொடியில் ஜோஷ்யர் சொல்கிறார். '' உங்கள் மகள் எதிர்காலம் மிக நன்றாக உள்ளது. அவள் நிச்சயம் ஒரு ஐ ..எ .எஸ் . கலெக்டராக வருவாள் '' என்கிறார். காமெடியே அந்த தந்தையின் பதில்தான்..
''அப்படியா! !, நிச்சயமாகவா ? ஆனால், நான்கு வயதாகியும், என் மகளுக்கு பேச்சு வரவில்லை.மூளை செயல்பாடும் சரியாக இல்லையே ''
இதைப் போல் பல கபட பதில்களை கேட்டும் மக்கள் திருந்தவில்லையே.
நானே கார்த்தியின் ஜாதகத்தை [ அவன் மறைவிற்கு பிறகு ] பலரிடம் காட்டியுள்ளேன். ஆ , இந்த ஜாதகம் பிரமாதமாக இருக்கிறது. நூறு வயது என்பார்கள் .வெறுப்பாக இருக்கும்.
அதைப் போலவே, நன்கு,நன்கு படித்தவர்கள் கூட நம்பும் அடுத்த விஷயம், ''குருஜி, மகான்கள் ''.
அவர்களின் மகிமைகள், நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றி அவர்கள் உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியாது. நாங்கள் மேட்டூரில் வசித்த போது, ஒரு பொறியாளர் வீட்டில் இருந்த சாய்பாபாவின் படத்தில் இருந்து தேன் கொட்டியதாக பரபரப்பு. நானும் சொன்னேன், ''எனக்கும் தேன் பிடிக்கும். நான் வரும்போது, உங்கள் பாபாவை எனக்கும் தேன் தரக் சொல்லுங்கள் '' என்றேன்.
அந்த பாபா ஸ்டாலினுக்கும் ,துரைமுருகனுக்கு மட்டும்தான் தங்க மோதிரம் வரவழைத்து தருவாராம். ஏன் ? எத்தனையோ ஏழைப் பெண்கள் இல்லையா? அவர்களுக்கெல்லாம் தர வேண்டியதுதானே ? எத்தனையோ அற்புதங்கள் செய்து எவ்வளவோ பேருடைய உயிரைக் காப்பாற்றியவர் அவர் என்று சொல்கிறார்கள்.
இப்போது வந்த செய்தி: : :
'' ''// உடல் நலக்குறைவு காரணமாக சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது சாயிபாபா குணமடைந்து வருவதாகவும், கவலைப்பட ஏதுமில்லை என்றும், விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.'' '' //
இந்த செய்திக்கு அவர் பக்தர்கள் சொல்லும் பதில் என்ன ?
கார்த்திக்+ அம்மா
No comments:
Post a Comment