About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/06/19

இன்று இரண்டு பதிவுகள்.
1.தாய்மை :
இந்த செய்திகள்  எனக்கு மிகவும்  மகிழ்ச்சி  அளித்தது.
தேவயாணி  சொல்லியது.  எனக்கு  என் குழந்தைகள்தான்   முக்கியம். நடிப்பு  அதற்கப்புறம்தான்.
the great ஐஸ்வர்யா ,
'' நான் சினிமாவை  மறந்து விட்டேன். என் தாய்மை எனக்கு  மிகவும் சந்தோஷத்தை  கொடுக்கிறது ''
அதே போல் குஷ்பூ , இவர்களை மிகவும்  பாராட்டுகிறேன்.மிக அருமையான முடிவு.
தாய்மையை  போல் இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அதுவும்  அந்த குழந்தை பருவம்.
நானும் கார்த்தி  பிறந்தபோது  என் Assistant  Professor  [இங்கிலீஷ் ]  வேலையை  விட்டவள்.  இன்று அந்த வேலையிலேயே   இருந்திருந்தால்  2020 யில் [  university  சர்வீஸ்  62 வயது ]  நான் ஒய்வு  பெறும்போது என்ன சம்பளம்  வாங்கியிருப்பேன்.
ஆனால் இன்று வரை ஒரு நிமிடம் கூட  நான்  அதைப் பற்றி  வருத்தப் பட்டதில்லை.
ஏனென்றால்  கார்த்தியும்  நானும்  அப்படி ஒரு சொர்க்கத்தை  அனுபவித்தோம்.
கார்த்தியின்  குழந்தை பருவம்  ,எவ்வளவு சந்தோசம்...எத்தனை கோடி வேண்டுமானாலும்  கொடுக்கலாம்.
இன்றும்  அந்த நினைவுகளில்தான்  நான் சுவாசித்துக்  கொண்டிருக்கிறேன்.

2 ம்   பதிவு  A .P .J  அப்துல் கலாம்  பற்றி.

என்  மானசிக  காதலர்  அவர். இந்திரா காந்திக்கு  SCIENTIFIC  ADVISOR  ஆக இருந்த போதிலிருந்து   [1982  ] அவர் மேல்  பைத்தியம். என் கணவரிடம்  சொல்வேன் '' உங்களுக்கு முன் அவரை பார்த்திருந்தால்  அவரைத்தான்  கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று. மனிதன் ஒரு முறைப்பு பார்வை பார்ப்பார். என் மாணவர்கள்  என் பிறந்த நாளன்று  அவருடைய photo வை கொடுத்து  ''miss your  lovers photo '' என்று சொல்லி  கொடுப்பார்கள்.  வேறு எந்த  பொருளாக  இருந்தாலும்  birthday gift  ஆக  நான்  வாங்க மாட்டேன் ...இதை  கண்டிப்பாக  மறுக்க  மாட்டேன்  என்றும் என்  மாணவர்களுக்கு  தெரியும்  .அவ்வளவு  பைத்தியம் .
In the English paper  +2  ,for practical  [in the  years 1965 to 1999 ]   students  have to fill  up  Railway  reservation  form .And it  will be like this :
1.A .P .J .Abdhul Kalam ..Scientist  age 56
2.S .Karthikeyan ..research assistant .age 16
3.K .S .Senthilkumar ..research  assistant .age 14

மாணவர்களுக்கு தெரியும்  .நம்  ஆங்கில  ஆசிரியை  ஒரு  வித்தியாசமான  character  என்று.
கார்த்திக்கிற்கு  அவர் 2002 ல் ஆசிரியராக  பாடம்  நடத்திய  போது  இவ்வளவுதான்  சந்தோசம்  என்றே சொல்ல  முடியாது. மதிய  உணவிற்கு  late  ஆக  வந்தால்  ,'' ஏன் கண்ணம்மா  late '' என்று கேட்டால்  ''அவர்தான்மா  class  எடுத்துக்  கொண்டே  இருந்தார் ''  என்று பதில்   சொல்வான்.  அவர்  என்றால்  அது  கலாம்தான்.
அவரிடம்  ஒரு peon  வேலையாவது  கேட்டு பெற்று  அவரிடம்தான்  வேலை  செய்ய வேண்டும்   என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
பேரதிர்ச்சியாக  அவர்  ஜனாதிபதியாகி  விட்டார்.  எல்லோரும் சந்தோஷப் பட்ட போது   நான்,  கார்த்தி,  செந்தில்  மூன்று  பெரும்  பெரிய  சோகத்தில்  ஆழ்ந்தோம். செந்தில் ''அவர்தான்  என் project  guide  '' என்ற  கனவில் இருந்தான் .எங்கள் Godfather  எங்களை விட்டு  பிரிந்த  சோகம்  எங்களுக்கு.
....  ... இந்த  பதிவை  எழுத  வேண்டும்  என்று  நிறைய நாட்கள்  நினைத்ததுண்டு.  இப்போது அவர்  போட்டியில்  இருந்து  விலகிய பின் எழுதினால்  தவறில்லை.  இல்லையென்றால்  அவருடைய  பதவியின்  மூலம்  ஏதாவது  ஆதாயம்  தேடத்தான்  இந்த  பதிவு  என்று  யாரேனும்  நினைக்க  கூடும்.   அவர்  போட்டியில்  இருந்து  விலகியதுதான்  எனக்கு பிடித்தது. இந்த  அரசியல் வாதிகள்  சகவாசமே  வேண்டாம்.
கார்த்தி  அவருடைய  மாணவனாக  இருந்த போது  அவரைப்  போலவே  தலை  சீவ மாட்டான்.  socks  போடாமல்  shoe  போடுவான்  .dress iron  செய்து போட மாட்டான். அப்படியே  அவர் போல்  .
அவனை விபத்தில் இழந்த போது  , அவரிடம்  சென்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  2002  APRIL மாதத்தில்  அவரை சந்திக்க வேண்டுமென்று  அவரிடம்  கார்த்தி சொன்ன  போது  எப்போது வேண்டுமானாலும்  அம்மாவை அழைத்து  வா  என்று சொல்லியிருந்தார். இப்போது  அவருக்கு கண்டிப்பாக  நினைவு இருக்க முடியாது.  ஏனென்றால்  ஆசிரியர்களாகிய  நாங்கள்  1000 கணக்கான  மாணவர்களை  பார்ப்பதால்  எல்லோரையும்  நினைவில்  கொள்வது  சாத்தியமில்ல. என்றாவது  ஒரு நாள் அவரை சந்தித்து  கார்த்தியை பற்றி  சொல்ல வேண்டும்.
கார்த்திக்+அம்மா 

1 comment:

Jeevan said...

கண்டிப்பாக இப்படி ஒரு ரசிகனும் ரசிகையும், காதலனும் காதலியும் அவருக்கு இருக்குறார்கள் என்பதை தெரியபடுத்த வேண்டும்! அவருடைய முடிவும் சரியானது, அவர் என்றும் ஆசிரியரை இருந்து கார்த்தி போன்ற பல உயர்த்த சிந்தனை மாணவர்களை உருவாக்கவேண்டும்.

அன்னை என்பதற்கு உங்களைவிட் ஒரு சிறந்த உதாரணத்தை காண அரிது.