About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/11/27

chips :
phone bill கட்ட போனேன்.கட்டணத்தை கொடுத்து விட்டு ரிசீட் [risi :t ]கொடுங்கள் என்றேன்.அவர் காது கேளாதவர் போல் இருந்தார்.எனக்கு லேசான கோபம்.ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக ரசீது கொடுக்க மறுத்ததாக செந்தில் சொல்லியிருந்ததால், ஒரு ரூபாய் மிச்சப் படுத்தப் பார்க்கிறாரே என்று.
மறுபடியும், பிரிண்டரைக் காட்டி ரிசீட் கொடுங்கள் என்றேன்.பிரிண்டரைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்தவர் ரசீது புத்தகத்தை எடுத்து ரசீது எழுதிக் கொடுத்தார்.பெரிதாக சாதித்து விட்ட பெருமையில் வீட்டிற்கு வந்த பின் எண்ண ஓட்டங்களில் ஒரு விஷயம் புரிந்தது என் மரமண்டைக்கு.நான் ரெசிப்ட் என்று கேட்டிருக்க வேண்டும் என்று.ஹையோ phonetics teacher ????????.
.......     ......  ......
   ஆங்கில உச்சரிப்புதான் அப்படிஎன்றால் தமிழும் அப்படித்தான்.
'மிளகு தக்காளி கீரை இருக்கிறதா ?'' என்று கேட்டு  நிறைய பேரை குழப்பியிருக்கிறேன்.
****    *****
நிப்பாட்டு :
நிறைய முறை ஆட்டோவில் போகும்போது இறங்கும் இடம் வந்தவுடன் ''நிறுத்துங்கள் '' என்பேன். ஆட்டோ நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். '' நான் இறங்கும் (எறங்கும் )  இடம் வந்து விட்டது.நிறுத்த சொல்கிறேன் .போய்க் கொண்டே இருக்கிறீர்களே ''  என்று சத்தம் போட்டவுடன் தான் ஆட்டோ நிற்கும்.
         இப்போதுதான் புரிகிறது ( அய்யோ மரமண்டை ,உனக்கு எதுதான் புரிந்திருக்கிறது?) நிப்பாட்டு  என்று சொல்லாமல் 'நிறுத்து' என்று சொல்லி அவர்களை குழப்பியிருக்கிறேன் என்று.
constitutionally  நிப்பாட்டு என்பதுதான் சரி என்று ஆகி விட்டது.
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் நிப்பாட்டு என்றே சொல்கிறார்களே, பஸ் நிறுத்தம் என்ற வார்த்தை இவர்கள் கண்ணில் படவே படாதா ?
****      *************
நான் பணி  புரிந்து கொண்டிருந்த பொது, என் சக ஆசிரியர் என்னிடத்தில்   ஓடி வந்து''  டீச்சர் கட்ச்டுச்சி டீச்சர் '' என்றார்.நான் எதோ பூரான்,பல்லி ,தேள் தான் கடித்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டு ''என்ன சார் கடித்தது ?' என்றேன்.''இல்லை டீச்சர் ,நான் தேடிய file கட்ச்டுச்சி'' என்றார்.
ஆஹா ,file கிடைத்து விட்டது என்பதைத்தான் அப்படி சொன்னார் என்பது புரிந்த போது , எஸ்,வி.சேகர் சுவற்றின் மேல் கையை வைத்துக் கொண்டு தலை முட்டிக் கொள்வார்.அது போல் ஒரு தலையணையை [ அதுதாங்க அந்த தலவாணி ] வைத்து முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
****   ***
நான் ஆங்கில ஆசிரியையாக அரசு பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாத மொழி என்று நினைத்துக் [wet ] கொள்வார்கள் .[ காயப் போடவே மாட்டார்கள் ].
நான் சொல்வேன் உங்களுக்கும் நிறைய words தெரியும் .உதாரணமாக 'உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகளை சொல்லுங்கள்.face .nose ,mouth etc ''என்று அவர்களை சொல்ல வைத்து ''பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரிகிறது.I know  that you do not know that you know so many words ''என்பேன்.
விகடம்? ஹும் ?
**************
பள்ளி ஆண்டு விழாக்கள் போன்ற விழாக்களில்( 90 s ) என் compering மிகவும் பிரபலம்.
ஒரு பாடலுக்கு மாணவர்கள் நடனமாட வந்த போது  நான் கொடுத்த intro .
'' A problem becomes no problem  if the problem is approached in a non  problematic  manner .
பிரச்சினை என்பது பிரச்சினையே அல்ல, பிரச்சினையை  பிரச்சினை அற்ற முறையில் அணுகினால் ....மாணவர்களே என்ன தேடுகிறீர்கள்?  கல்லா?.....அடிப்பதற்கா? ..no problem என்று ஆட வருகிறார் சம்பத் +2 மாணவர் '' என்றவுடன்
மாணவர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் ஒரே (ஒன்றே ஒன்றுதான் )கைதட்டல்
கலா கார்த்திக்
இந்த build up உனக்கே கொஞ்சம் over ஆக தெரியவில்லை?
இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள், (ஒரு 1000 பேர் ) தலையைப் பிய்த்துக் கொண்டு அண்ணா  சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
  கடி, கடி, அடிக்கடி கடி.
வலிக்காமல், சலிக்காமல் அடிக்கடி கடி.
பி.கு.
ஆட்டிற்கு வாலை  அளந்து வைத்தவன் புத்திசாலி.
இந்த 2 இழப்புகளும் இல்லையென்றால் என் வாயாடித்தனத்திற்கு எல்லை ஏது ?
பி.பி.கு .
இந்த வாயாடி இப்போது ஊமையாகி விட்டாள் .
கார்த்திக்+அம்மா 

2012/11/24

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்:அஞ்சலி:
''நீங்கள் நல்லவரா  கெட்டவரா " என்று நாயகன் படத்தில் வரும் வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
அவருடைய உறவினள்  என்ற முறையிலும் ,சேலத்து மகள் என்ற முறையிலும் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள்,[பூலாவரி சுகுமாரன் ,மிசா சிறையில் ice  முள் படுக்கையில் வைத்து அவரை விசாரித்த விவகாரத்தில் இருந்து ]எழுத ஆரம்பித்தால் 4,5 பக்கங்கள் எழுதலாம்.ஆனால், நல்லவரோ, கெட்டவரோ  நமக்கு தெரிந்த ஒருவர்,பழகிய ஒருவர் ,உறவினரோ ,யாராயிருந்தாலும் எந்த இழப்பும் மனதை மிகவும் பாதிக்கிறது.
சமீபத்தில் மும்பையில் போல் சேலத்தில் கூடிய கூட்டமும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
அவரைப் பற்றி நிறைய எழுதலாமா என்று தோன்றுகிறது.
பார்க்கலாம்.அடுத்த பதிவில்.அவருக்கு என் அஞ்சலி.
அவரை சேலத்து சிங்கம் என்று சொல்வார்கள்.
கார்த்தியும் தன்னை அப்படித்தான் சொல்லிக் கொள்வான்.
என் அஞ்சலி.
கார்த்திக்+அம்மா  

2012/11/21

Ajmal Kasab hanged:
Who ever it is, be them terrorists or godfathers ,life is life.I really sympathize this young fellow being hanged.
But it is really justifiable that he should be hanged.Unless otherwise  more and more people will get ready to do more such cruel acts .This act would instill a fear in those who plan to indulge in terrorism .
And the most pathetic fact is that ''PAKISTHAN DISOWNED HIM ''.and this is the most important lesson that they should learn.Dying in a foreign land without the dear ones near.
This was the post I wrote on 26.11.2008
//    சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது6/11
.// //

இன்றும் என் மனம் அதே நிலையில்தான் உள்ளது.சந்திப்பை என்னால் மறக்க முடியவில்லை.His height  and posture resembled karthik very much .அந்த உயரமும் கம்பீரமான நடையும் என் கார்த்திக்கை போலவே இருந்தது.அந்த தாயைப் போல்தான் வெறித்த பார்வையுடன் இருந்தேன்.'அவன்'  என்ற வார்த்தை ''அது ''என்றான கொடுமை????????கார்த்தி என்று அன்புடனும் admiration உடனும் சொன்னவர்கள் ஒரு பார்சல் ஆக அவனை பார்த்த கொடுமை   .
அன்று இறந்த 166 பேர்   வீட்டிலும் இதே சோகம்தான் இருந்திருக்கும்.அதனால் கசாப்பை மன்னிக்க முடியவில்லை.அனாலும்  ஒரு உயிர் இல்லாமல் போவது வேதனையான விஷயம்தான்.
அவனை பயிற்றுவித்து அனுப்பியவர்களை என்ன செய்வது ?கசாப்பின் தாயின் நிலையை பற்றி யார் நினைத்தார்கள்?
Will this terrorism stop ? SHOULD .
கார்த்திக்+அம்மா 

2012/11/17

 Textbook Claims Non Vegetarians Commit Crime
CBSE topper wants to clear civil se...
// // //புது டெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அசைவ உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.// // //
Who is this genius who is sitting there on the CBSC syllabus committee?
யார் இந்த அதி மேதாவி ?
எத்தனை  பொய்யான தகவல்கள் . அதிலும் தமிழ்  நாட்டைப் பற்றியே குறி வைத்து தமிழ் நாட்டை  கேவலப் படுத்துவது ஒன்றே குறிக்கோள் போல் எழுதும் இவர் யார் ? 
ஒரு விஷயம் சொல்லாமலே புரிகிறது கண்டிப்பாக இவர் அந்த உயர் ஜாதி சார்ந்தவர் .
எத்தனை முறை iஇப்படி நம்மை கேவலப் படுத்துவார்கள் 
அசைவ உணவு உண்ணாத இவர்கள்தான் கோவிலின் கருவறையை  படுக்கையரையாக மாற்றி அதையும் செல்போனில் படம் pபிடித்து மகிழ்ந்தவர்கள்இன்னும் எவ்வளவோ  சொல்லிக் கொண்டே போகலாம் இந்த விளையாட்டை இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது   .
 

2012/11/14

14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா 

2012/11/12

வரவே மாட்டான்  என்று தெரிந்தும்
வந்து விட மாட்டானா
ஏதாவது அதிசயம் நடந்து
அம்மா , என் அம்மா
என்று செல்லமாக  சொல்லிக் கொண்டு
ஓடோடி வந்து என் கன்னத்தோடு
கன்னமாக இழைத்து கொஞ்சுவானே
...  ....
வந்து விட மாட்டானா என்று மனம் ஏங்கி
வாசலையே  பார்த்துக் கொண்டிருக்கிறது.
1999 தான் நாங்கள் இறுதியாக கொண்டாடிய தீபாவளி .
அப்போது மேட்டூர் [mettur dam ] ல் இருந்தோம். கார்த்தி அண்ணா பல்கலையில் , கிண்டி ,hostel ல் .
தீபாவளிக்கு  அடுத்த நாள் semester exam .கார்த்திக் வீட்டிற்கு வருவதா ,தேர்வு அடுத்த நாள் என்ற குழப்பம்.
ஆனால் அண்ணன் வந்தே ஆக வேண்டும் என்று செந்தில் பிடிவாதம்.தம்பியின் ஆசை எதுவானாலும் அதை at any  cost  செய்து தருவதுதானே கார்த்திக்கிற்கு  பழக்கம் .அதனால் 1999 தீபாவளிக்கு வந்தான்.
2000 ல் என் கணவர் மறைந்த பிறகு தீபாவளி  கொண்டாட்டம்  நின்று விட்டது .
ஆனால் 3 பேரும் , நான், கார்த்தி, செந்தில் என 3 பேரும் சேர்ந்திருப்பதே பெரிய தீபாவளியான சந்தோசம்.ஆனால் அதுவும் இல்லை என்று  ஆனது தாஆஆஆந்க தாங்க முடியாத ,  வேதனை,  வேதனை..   வேதனை தரும் விஷயம்.சோகம் .கஷ்டம் .
2004 ம வருடம் தீபாவளிக்கு  பெங்களூரில் இருந்து சென்னை வர train ,bus ticket எதுவும் கிடைக்காமல் driver சீட்டீற்கு பின்னால் இருக்கும் சீட்டில் 6 பேருடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டே வந்து அவ்வளவு சோர்வுடன் வந்தான்.அதுதான் கடைசி தீபாவளி .
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?