chips :
phone bill கட்ட போனேன்.கட்டணத்தை கொடுத்து விட்டு ரிசீட் [risi :t ]கொடுங்கள் என்றேன்.அவர் காது கேளாதவர் போல் இருந்தார்.எனக்கு லேசான கோபம்.ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக ரசீது கொடுக்க மறுத்ததாக செந்தில் சொல்லியிருந்ததால், ஒரு ரூபாய் மிச்சப் படுத்தப் பார்க்கிறாரே என்று.
மறுபடியும், பிரிண்டரைக் காட்டி ரிசீட் கொடுங்கள் என்றேன்.பிரிண்டரைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்தவர் ரசீது புத்தகத்தை எடுத்து ரசீது எழுதிக் கொடுத்தார்.பெரிதாக சாதித்து விட்ட பெருமையில் வீட்டிற்கு வந்த பின் எண்ண ஓட்டங்களில் ஒரு விஷயம் புரிந்தது என் மரமண்டைக்கு.நான் ரெசிப்ட் என்று கேட்டிருக்க வேண்டும் என்று.ஹையோ phonetics teacher ????????.
....... ...... ......
ஆங்கில உச்சரிப்புதான் அப்படிஎன்றால் தமிழும் அப்படித்தான்.
'மிளகு தக்காளி கீரை இருக்கிறதா ?'' என்று கேட்டு நிறைய பேரை குழப்பியிருக்கிறேன்.
**** *****
நிப்பாட்டு :
நிறைய முறை ஆட்டோவில் போகும்போது இறங்கும் இடம் வந்தவுடன் ''நிறுத்துங்கள் '' என்பேன். ஆட்டோ நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். '' நான் இறங்கும் (எறங்கும் ) இடம் வந்து விட்டது.நிறுத்த சொல்கிறேன் .போய்க் கொண்டே இருக்கிறீர்களே '' என்று சத்தம் போட்டவுடன் தான் ஆட்டோ நிற்கும்.
இப்போதுதான் புரிகிறது ( அய்யோ மரமண்டை ,உனக்கு எதுதான் புரிந்திருக்கிறது?) நிப்பாட்டு என்று சொல்லாமல் 'நிறுத்து' என்று சொல்லி அவர்களை குழப்பியிருக்கிறேன் என்று.
constitutionally நிப்பாட்டு என்பதுதான் சரி என்று ஆகி விட்டது.
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் நிப்பாட்டு என்றே சொல்கிறார்களே, பஸ் நிறுத்தம் என்ற வார்த்தை இவர்கள் கண்ணில் படவே படாதா ?
**** *************
நான் பணி புரிந்து கொண்டிருந்த பொது, என் சக ஆசிரியர் என்னிடத்தில் ஓடி வந்து'' டீச்சர் கட்ச்டுச்சி டீச்சர் '' என்றார்.நான் எதோ பூரான்,பல்லி ,தேள் தான் கடித்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டு ''என்ன சார் கடித்தது ?' என்றேன்.''இல்லை டீச்சர் ,நான் தேடிய file கட்ச்டுச்சி'' என்றார்.
ஆஹா ,file கிடைத்து விட்டது என்பதைத்தான் அப்படி சொன்னார் என்பது புரிந்த போது , எஸ்,வி.சேகர் சுவற்றின் மேல் கையை வைத்துக் கொண்டு தலை முட்டிக் கொள்வார்.அது போல் ஒரு தலையணையை [ அதுதாங்க அந்த தலவாணி ] வைத்து முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
**** ***
நான் ஆங்கில ஆசிரியையாக அரசு பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாத மொழி என்று நினைத்துக் [wet ] கொள்வார்கள் .[ காயப் போடவே மாட்டார்கள் ].
நான் சொல்வேன் உங்களுக்கும் நிறைய words தெரியும் .உதாரணமாக 'உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகளை சொல்லுங்கள்.face .nose ,mouth etc ''என்று அவர்களை சொல்ல வைத்து ''பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரிகிறது.I know that you do not know that you know so many words ''என்பேன்.
விகடம்? ஹும் ?
**************
பள்ளி ஆண்டு விழாக்கள் போன்ற விழாக்களில்( 90 s ) என் compering மிகவும் பிரபலம்.
ஒரு பாடலுக்கு மாணவர்கள் நடனமாட வந்த போது நான் கொடுத்த intro .
'' A problem becomes no problem if the problem is approached in a non problematic manner .
பிரச்சினை என்பது பிரச்சினையே அல்ல, பிரச்சினையை பிரச்சினை அற்ற முறையில் அணுகினால் ....மாணவர்களே என்ன தேடுகிறீர்கள்? கல்லா?.....அடிப்பதற்கா? ..no problem என்று ஆட வருகிறார் சம்பத் +2 மாணவர் '' என்றவுடன்
மாணவர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் ஒரே (ஒன்றே ஒன்றுதான் )கைதட்டல்
கலா கார்த்திக்
இந்த build up உனக்கே கொஞ்சம் over ஆக தெரியவில்லை?
இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள், (ஒரு 1000 பேர் ) தலையைப் பிய்த்துக் கொண்டு அண்ணா சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடி, கடி, அடிக்கடி கடி.
வலிக்காமல், சலிக்காமல் அடிக்கடி கடி.
பி.கு.
ஆட்டிற்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி.
இந்த 2 இழப்புகளும் இல்லையென்றால் என் வாயாடித்தனத்திற்கு எல்லை ஏது ?
பி.பி.கு .
இந்த வாயாடி இப்போது ஊமையாகி விட்டாள் .
கார்த்திக்+அம்மா

2 comments:
சுவாரஸ்யம்...
பி.கு. தான் வருத்தம் அளிக்கிறது. இந்த நினைவுகலை படிக்க சுவாரசியமாக இருந்தது.
keep sharing and keep on sharing... pls.
Post a Comment