About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/03/08

இன்று உலக மகளிர் தினம்.நானும் கூட 1974ல் மகளிர் தின பரிசாக என் தாயின் initial  சேர்த்து என் பேரின் முதல் எழுத்துகளை அமைத்துக் கொண்டேன்.
ஆனால்,
இன்று யோசித்தால் ,தொலைக் காட்சிகள் ,மற்ற மிகைப் படுத்தல்கள் பார்க்கும் போது  ஒரு நல்ல விஷயத்தை காமெடி ஆக்குகிறோமோ என்று தோன்றுகிறது.
அது எதற்கு T .V யில் வரும் பெண்கள் அந்த காட்டு கூச்சல் கத்துகிறார்கள்?அவர்கள் பேசுவதை பார்த்தால் ஏதோ  பெண்கள் எல்லாம் வெளிச்சத்தையே காணாத ஒரு இருட்டறையில் அடைத்து வைத்துள்ளது போல் தோன்றுகிறது.
இன்றைய பெண்களை விட ,புராண காலத்திலிருந்து பெண்கள் முழு சுதந்திரத்துடனேயே இருந்துள்ளனர்.
அவர்கள் கணவரை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது.பூஜை ,புனஸ்காரங்களில் அவர்கள் சம முக்கியத்துவம் பெற்றனர்.
தசரதனுக்கு தேர் ஓட்டுகிறாள்  அவன் மனைவி.(தேர் ஓட்டுவது ,அதிலும் போரில் தேர் ஓட்டுவது சாதாரணமான விஷயம் அல்ல.)ஒரு பெண் போரில் கலந்து கொள்கிறாள்.எத்தனை எத்தனை 100 ,100 ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது பெண்ணடிமைத்தனம் என்ற கேள்வி எங்கே?

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும் அவர்தான். 1936ம் ஆண்டு "மிஸ்கமலா" என்ற படத்தை இயக்கினார். முதல் பெண் தயாரிப்பாளர், முதன் முதலில் தியேட்டர் கட்டிய பெண். இப்படி பல முகங்கள் அவருக்கு உண்டு. 
இது  இன்று நான் படித்த செய்தி 
சுதந்திரத்திற்கு முன் நடந்த விஷயம்.நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.
என் அம்மாவுடன் பிறந்த சகோதரிகள் நால்வர்.ஒரே குடும்பத்தில் பிறந்து,ஒரே சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்.ஆனால்  என் அம்மா மட்டும்தான் படித்தார்.ஒரு சகோதரி அந்த காலத்திலேயே ''காதல் ''.படிப்பு கட் .அடுத்த சகோதரிக்கு படிப்பு ஏறவில்லை .என் தாயின் ஆர்வம், விடாமுயற்சி ,கடின உழைப்பு அவர் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுகளில் தாவித் தாவி ஏறினார் .
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவர் சாதிப்பதற்கு, இனமோ,மதமோ,மற்ற எதுவுமே தடைக் கல் இல்லை .
தயவு செய்து பெண்ணுரிமை  பெண்ணுரிமை என்றார் கூச்சலிடாதீர்கள்   
கார்த்திக்+அம்மா  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகச்சரி...

Jeevan said...

Women have all the rights and one should not ask... but just take.