About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/07/05

I did not love...why?

  நான் காதலிக்கவில்லை :  காரணம் :
எந்த channel  திருப்பினாலும் திவ்யா  , இளவரசன்  காதல் பற்றிய விவாதம்தான்.என்னவோ பிறவி எடுத்ததே காதலிக்கத்தான் என்று 90 % தலைவர்கள் ,எழுத்தாளர்கள்  சிந்தனையாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ளும் பலரும் பேசுகின்றனர்.
இவர்கள் வீட்டில் நடந்தால் ஒத்துக் கொள்வார்களா?
எத்தனை பிரபலங்கள் தங்கள் வாரிசுகளின் காதலை எதிர்த்தார்கள் என்று நமக்கு தெரியும்.
.....    ......
நானும்   6  வருடம் கல்லூரியில் படித்தேன்.என்னோடு ஒரு 1000 மாணவிகள்  படித்தோம். 1 அல்லது 2 பேர்  காதலித்திருக்கலாம்.அதுவே    பெரிய விஷயம்.
..... எங்களுக்கும்  வாய்ப்புகள் இருந்தன .நாங்களும் காதலித்திருக்கலாம் .
ஆனால் அன்பு , பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றோரின் நினைவு ,அவர்களுக்கு நாங்கள் கொடுத்த  மரியாதை   எங்கள் யாருக்கும் காதல் என்ற எண்ணமே வரவில்லை.நமக்காக எத்தனை கஷ்டப் பட்டிருப்பார்கள்.நமக்கு ஒரு   சிறிய கஷ்டம் என்றாலும்  எவ்வளவு துடித்திருப்பார்கள் ?
அவர்கள் நமக்கு ஒரு துணை தேடும்போது  இந்த மணமகன்  நம் பெண்ணை நன்றாக காப்பாற்றுவானா  என்று பல வகையிலும்  ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள் .
என்னையும் என் பெற்றோர் கேட்பார். '' இந்த பையனை உனக்கு பிடித்திருக்கிறதா ? ''
நான் சொல்வேன் " நீங்கள் யாரைக் காட்டி இவனை திருமணம் செய்து கொள்  என்றால் செய்து கொள்வேன் ''
அப்படித்தான் நடந்தது.
திருமண வாழ்வில் எனக்கும் என் கணவருக்கும் ஏதாவது மனக் கஷ்டம் என்றால் கூட என் தாய் தந்தையிடம் சொல்ல மாட்டேன்.அவர்கள்  மனம் துடித்து போவர் .
இந்த காலத்தில் இந்த இளவரசன் 19 வயது.இந்த படிக்கும் வயதில் காதல், கல்யாணம் .படிக்கும் வயதில்  காதல் ஏன்  என்று யாரும் கேட்கவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன்  மட்டும்தான் சொன்னார். உடனே அதற்கு ஒருவர் பதில் சொல்கிறார் .''அவர் தன உயர் ஜாதி புத்தியை காட்டுகிறார்'' என்று.
ஜாதியை உள்ளே கொண்டு வந்தது கட்சிகள்.
அந்த பெண்ணின் தந்தை இறந்த போது ஏன் யாரும் ஆர்பாட்டம் செய்யவில்லை?
கட்சிகள் நடத்திய வன்முறைதான் அரங்கேறியது.அந்த தந்தைக்காக யாரும் அழவில்லை. ( இந்த டி .வி களைத்தான் சொல்கிறேன்.)இந்த டி .வி கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஒரு டி .வி சொல்கிறது ....''தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது"  ...என்னவோ உத்திரகாண்டில் தன உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றிய பிரவீனுக்கு இணையாக இவர்களை பேசுகிறார்கள் .அந்த பிரவின் பற்றி ஒரு இரங்கல் செய்தி கூட பல தொலைகாட்சிகள் செய்யவில்லை.
இவர்கள் ஊதி பெரிசாக்குகிறார்கள்.
பெற்றோர்களை நேசியுங்கள் .காதல் தேவையில்லை.கல்யாணத்திற்கு பிறகு கணவனை காதலியுங்கள்.அது அன்பு. அதுவே நிலைக்கும்.
(கார்த்தியின் கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று தெரியாததால் )
கார்த்தி+அம்மா ..அல்ல ..
கார்த்தி அம்மா (மட்டும்)

No comments: