About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/04/30

வாக்குப் பதிவு நாளில் இருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மனமாக இருந்தது.
இன்று எழுதுகிறேன்.
ஆந்திராவில் சிரஞ்சீவி ஓட்டு  போட  வந்தபோது வரிசையில் நிற்காமல் செல்ல முயன்றிருக்கிறார்.
கார்த்தி (இந்த பெயருக்கு ஒரு தனி இதுதான்) என்ற நபர் அவரை தடுத்து நீங்கள் மட்டும் எந்த வகையில் ஸ்பெஷல் ,வரிசையில் நின்று வாருங்கள் என்று தைரியமாக சொல்லி ,செய்தும் காட்டி விட்டார்.
ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு நடிகர் வாக்கு சாவடியில் தன தொண்டரடி பொ டியால்வார்களுடன் நின்று ஏதோ கருத்தரங்கிற்கு வந்தவர் கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தார்.
ஓட்டு பெட்டி ரெடியாகவில்லை என்றால் அந்த presiding  officer  யாரையும் உள்ளே அனுமதிக்கவே கூடாது.யாராயிருந்தாலும் வெளியில் தான் நிற்க வேண்டும்.
எல்லோரும் அந்த நடிகரை பார்த்து அப்படியே மயங்கி நின்றனர்.
அவர்களை கண்டிப்பாக சஸ்பெண் ட் செய்திருக்க வேண்டும்.
சரி, அவர்கள்தான் தவறு என்றால், இந்த தெய்வப் பிறவி சரியாக நடந்திருக்க வேண்டுமல்லவா?
வை.கோ. வந்தார். வாக்கு சாவடியில் பணியில் இருந்தவர்கள் எழ முற்பட்டனர்.அவர்களை உட்காரும்படி கைகாட்டி விட்டு ஓட்டு பதிவு செய்தார்.இது பாராட்டுக்குரியது.
மற்றவர்கள் எல்லோரும் வரிசையில் நின்றே வாக்களித்தனர்.
நான் ஒரு சுயநலமி, பச்சோந்தி, கருமி என்று அந்த நடிகரே கதறினாலும் மக்கள் மாற மாட்டார்கள்.
************      ******
முதல்வர் கொட  நாடு சென்றார் என்று ஆர்பாட்டம் செய்யும் தொலைகாட்சிகள் ஹாங்காங் பயணம் பற்றி ஏன்  அடக்கி வாசிக்கின்றன?
  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?
கார்த்திக் +அம்மா

முகுந்த் :அஞ்சலி :நன்றி .தந்தி  .t .v
நாட்டுக்காக உயிர் நீத்த வீர மகனே உனக்கு என் வீர வணக்கங்கள்.
தந்தி தொலைக் காட்சியில் நேரலையாக அவரது இறுதி காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
2 மணி நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.கண்கள் கலங்கியபடியே இருந்தது.
எத்தனையோ கேவலமான நிகழ்ச்சிகளை மணிக்கணக்காக பார்க்கிறோம்.
நம் முகுந்தின் தியாகத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதான் என மனம் அமைதி கொண்டது
கார்த்திக்+அம்மா

2014/04/26

EVM : வாக்கு பதிவு இயந்திரம் :பழுது:
தொலைக் காட்சிகளில்   ''  வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ,  பழுது ஏற்பட்ட காரணத்தால் வாக்கு பதிவு தடைபட்டது ''  என்று செய்தி சொல்கிறார்கள்.
நானும் தேர்தல் பணி செய்துள்ள அனுபவத்தில் சொல்கிறேன்.
EVM பழுதாவதில்லை.அதை சரிவர SET செய்ய வேண்டும். ஒரு சிறு தவறும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
அதை உபயோகப் படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்தாலும் பலர் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.அதனால் அதிகாரிகள் செய்யும் தவறே .மற்றபடி இயந்திரம் சரியாகத்தான் இருக்கும்.
பல விஷயங்கள் இப்படித்தான் அரைகுறையாக புரிந்து கொள்ளப் பட்டு உண்மைகள் உறங்கி விடுகிறது.
கார்த்திக் அம்மா

2014/04/24

karthik  and  phone :
அடிக்கடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் .நினைவலைகள் முன்னோக்கி ,பின்னோக்கி என்று ஓடும் .
அப்படித்தான் இன்றும்.
2004 தேர்தலும் , அப்போது கார்த்தி என்னுடன் இருந்த நினைவுகளுமாக இருந்த நான்   ''அடடா  இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்ல வேண்டுமே ''  என்று என்னையும் அறியாமல் என் கை செல் போனை எடுத்து விட்டது.
ஒரு நிமிடம் .
       ''கார்த்தி என்னுடன் இல்லை. அவன் இந்த உலகை விட்டு போய் 8 ஆண்டுகள் ஆகி விட்டது. அவனுக்கு நான் செல்போனில்  பேச முடியாது '' என்ற உண்மை உறைத்த போது
அப்பப்பா 1000 வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் அப்படி ஒரு வேதனை.
துடித்துப் போனேன்.
எனக்கு ஏன் இப்படி நடந்தது?
நான் ஏன்  என் மகனை இழந்தேன்?
ஏன் இந்த தீராத வேதனை?
கார்த்திக் அம்மா
கார்த்திக் அம்மா

2014/04/22

VOICE   or   NOISE
அப்பாடா ,
ஒரு வழியாக இன்றுடன் பிரசாரம் முடிகிறது.   டி .வி  க்களும் இந்த NOISE ,இந்த காட்டு கத்தலை நிறுத்திவிடும்.
எதற்கு இப்படி கத்தி காட்டு கூச்சல் போடுவார்களோ? அதிலும் பெண்கள் மூச்சு விடாமல் கத்துகிறார்கள்.
எல்லோரும் ஒரு 5 நிமிடம் பேசலாம்.ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள்.
ஒன்றுமே புரிவதில்லை.
தொகுப்பாளர்களும் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் நினைத்தால் மைக் off செய்து கத்துபவர்களை  கட்டுபடுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி மிக சுவராஸ்யமாக இருப்பதாக ,செய்வதாக நினைத்துக் கொண்டு ,...எரிச்சல்தான் மிஞ்சும்.
வாக்களிப்பு முடிந்ததும் மறுபடி ஆரம்பிப்பார்கள்.
நன்றாக பேசுங்கள்.ஜனநாயகத்தை வாழ விடுங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2014/04/21

மாநகராட்சி GEYSER  வெந்நீர் :
thanks to corporation .சென்னை மாநகராட்சிக்கு நன்றி.
இலவச வேட்டி ,சேலை போல் இலவச வெந்நீர்.
tap திறந்தால்  சுடுநீர்தான் வருகிறது.
SUN ( அந்த சூர்யன்) இல்லைங்கோ .இவர் நம் சூர்ய  பகவான்.
இன்னும் 4 மாதங்களுக்கு அவர் ஆட்சிதான்.
கொடுங்கோலாட்சிதான்.
வருண பகவான் டெபாசிட் இழந்து விடுவார்.
சீ சீ ..இந்த election fever .தேர்தல் தாக்கம் பாருங்கள்.
சூர்ய பகவான் சற்றே கருணை கொள்ளும்
கலா கார்த்திக் ( கார்த்திக் அம்மா )
( கார்த்திக் அம்மா )

2014/04/13

Election 2004 and I (karthik  amma )
 நான் (கார்த்திக் அம்மா ) வேலையில் சேர்ந்த போது  26 வயது.  (அதற்கு முன்பே 22 வயதில் கல்லூரியில் Asst Prof ஆக வேலை செய்து , கார்த்திக்கிற்காக அந்த வேலையை விட்டது ஒரு சிறுகதை )   அப்போது அந்த வயதில் அரசு வேலை அந்த வயதில் கிடைப்பது பெரிய விஷயம். M .G .R  புண்ணியம்.T .N .P .S .C  தேர்வு வைத்தார்.அதனால் நல்ல rank பெற்று லஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது.
அப்போது செய்முறை தேர்விற்கு என்னை ஒரு பள்ளிக்கு பணித்தனர்.அதே போல் +2 பொது தேர்விற்கும் என்னை மேட்டூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு நியமித்தனர்.எந்த வேலையையும் திறம்பட செய்வதுதான் என் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே.அந்த பள்ளிக்கு நான் என்பது போல் ஆகிவிட்டது.தேர்வு நடக்கும்போது  சுற்று வரும் அதிகாரிகள் என் தேர்வு மையத்திற்கு வருவதே இல்லை. எல்லாம் perfect ஆக இருக்கும் என்ற நம்பிக்கை.
இதில் என் சீனியர் களுக்கு காதில் புகை.
இந்த பள்ளி என்பதால் தான் நான் சிறப்பாக செய்வதாக அவர்கள் வாதம்.
சரி.சவால்.ஒரு மோசமான பள்ளி ,சேலம் மாவட்டத்தில் .அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பிளேடு ( அதாவது பிளேடால் கூடாத இடத்தில் வெட்டுவது ) போடுவதில்  வல்லவர்களாம்.
அந்த வருடம் எனக்கு அந்த பள்ளி. சவால்  சவால்தான்.
அந்த பள்ளிக்கு சென்றேன். என்னதான் வீரமாக சவாலை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் சிறிது உதறல்தான்.என்னவோ தெரியவில்லை.மாணவர்கள் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் பழகினர்.ஒரு பிரச்சினையும் இல்லை.
சென்றேன். .வென்றேன் .வந்தேன்.
vini ,vidi  visi
went .worked .won .
அட ,இது சின்ன பெண்ணாக தெரிந்தாலும் பெரிய ரௌடி  போல் ...என்பதாக பேராகி விட்டது.அதிலிருந்து எங்கு பிரச்சினையோ அங்கே எனக்கு பணி .
Election 1999.
எனக்கு ஒரு ரௌடி ஊரில் பணி .presiding officer .6 p .m . ஒரு கும்பல் வாக்கு சாவடி அருகே வர ஆரம்பித்தது..'' யாராவது ஏதாவது பிரச்சினை செய்தால் வாக்கு சாவடியை இழுத்து மூடி விடுவேன். தேர்தலே நடக்காது '' என்று ஒரு சிம்ம கர்ஜனை. எல்லோரும் ஓடி விட்டனர்.
2004. சென்னை ..அதிலும் வட சென்னையில் தேர்தல் பணி .
வாக்கு  பதிவிற்கு முதல் நாள் .VOTING  MACHINE  பற்றி நான் எதுவுமே கண்டு கொள்ளவில்லை.கார்த்தி, செந்தில், என்னுடன் பணியாற்றிய ஒருவரின் மகன் என மூவரும் எல்லாம் செட் செய்தாயிற்று .என் அருமை கண்மணி கார்த்தி ஒரு வார்த்தை ''அம்மா இது என்னுடைய academic project  என்று சொல்ல வேண்டுமே. இந்த VOTING  MACHINE என்னுடைய academic project என்று சொல்ல வேண்டுமே   ..(ref .karthik 's resume ).
அடுத்த நாள் ஓட்டு  பதிவு. கள்ள ஒட்டு போட  துடித்தது ஒரு கும்பல்." ஒரே ஒரு கள்ள ஓட்டு கூட போட அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டேன். முதலில் நட்பாக கேட்டார்கள். சிறிய கெஞ்சல் . அப்புறம் மிரட்டல்தான். எதற்கும் பயப்படவில்லை.
" உயிருடன் வெளியே போக மாட்டாய்" என்றார்கள்.
பக்கத்து சாவடிகளுக்கு பிரியாணி .எங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை. செந்தில் அனைவர்க்கும் சாப்பாடு வாங்கி வர ...என் செலவு.
D .S .P வந்தார். '' ''சார், வோட்டு பதிவு முடிந்து வெளியே செல்லும் பொது எனக்கு பாதுகாப்பு வேண்டும்". என்றேன் அவருக்கு ஆச்சரியம் இந்த சின்ன உருவம் .இவ்வளவு தைரியமா என்று. இந்த ஒரு வாக்கு சாவடியில்தான் ஒரு கள்ள வோட்டு கூட இல்லை என்று பாராட்டியவர் சொன்னது போலவே வந்தார். வாழ்க்கை வீரமாக ,சாதனைகளாகத்தான்  இருந்தது 2005 வரை . இப்போது புலி எலியாகி விட்டது. யானை பூனையாகி விட்டது.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா.

2014/04/06

என் அத்தை ஒருவர் நினைவு இப்போது வருகிறது.என் அப்பாவின் சகோதரி. ஒவ்வொரு முறை தோட்டத்தில் எந்த அறுவடையாயிருந்தாலும்  வந்து விடுவார்.
  என் அம்மாவிடம்'' மேலைக்கு இன்னாலைக்கு (ள  .உச்சரிப்பு எல்லாம் எதிர்பார்க்க முடியாது) இருக்கிறேனோ இல்லையோ .எனக்கு நெல் கொடு, எல் கொடு '' என்று கேட்பார்.
முதல் முதலாக இந்த வசனம் கேட்ட போது நான் சோகமாகி விட்டேன்.ஆனால் கிட்டத்தட்ட ஒரு 20 வருடம் கழித்துதான்  காலமானார்.
         இப்போது அத்தை கதை எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஒருவர் அடுத்த தேர்தலின் போது நான் இருப்பேனோ இல்லையோ ,இதுவே கடைசி தேர்தலாக  இருக்கலாம் என்று பல தேர்தல்களாக ஒட்டு கேட்கிறார் ???????
2. ஒருவருக்கு 10  பத்தே கோடிதான் சொத்தா ஆ ஆ ம்.
நம்பிட்டோமே,.. நம்பிட்டோமே.
3.மூன்றாண்டுகளுக்கு முன்பு பாலாறும் தேனாறும் பாய்ந்த தமிழ் நாட்டில் இப்போதுதான் பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தலை விரித்தாடுகிறதாம்
இன்னொரு அம்மணி சொல்கிறார்..
எல்லோருக்கும் மக்களின்  மேல் அப்படி பாசம் பொங்கி வழிகிறது. மக்களை வாழ வைக்க துடிக்கிறார்கள்.
4.கடவுள் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறார் கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரிய நாத்திகர். .
எனக்கே நிறைய வருடங்களாக ஒரு சந்தேகம். அறிஞர் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த தலைவர் என்ன அறிந்திருந்தார்?
I used to tell ''some questions are unanswerable.'' ..even if one knows the answer.
Some questions are asked not expecting any answers.

2014/04/04

அம்மாடியோ .மயக்கம் வருது :
   
மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ***** வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
2.புறம்போக்கு  நிலத்தை அடமானம் வைத்து 250 கோடி கடன் பெற்று மருத்துவ கல்லூரி கட்டியுள்ளார் ஒருவர்.புறம்போக்கு நிலத்தை .அடமானம் வைத்தவர் தவறு செய்தவர்தான்.  ஆனால் கடன் கொடுத்த வங்கி ,  அதன் மேலாளர்   இவர்களை என்ன சொல்வது?
3.இன்னொரு மருத்துவக் கல்லூரி   1200  கோடி வருமான  வரி (வருமானம் அல்ல ,  வரி மட்டுமே ) கட்ட வேண்டுமாம் .
எனக்கு வரும் கேவலமான பென்சன் தொகைக்கு வரி பிடித்தே ஆக வேண்டுமென்று எனது வங்கி இந்த மாத பென்சனே தரவில்லை.
இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறதா?
  இவர்கள் என்னைப் போன்றவர்கள் கட்டும் வரிப் பணத்தில் தானே ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள்.எப்போது மாறும் இந்த கொடுமை?